போர்த்துகலில் இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தை சுவாரசியம் !

0

போர்த்துகலில் ஓர் இளம் பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு அப்பாக்கள், வெவ்வேறு ஆண்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

போர்த்துகலில் இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தை சுவாரசியம் !

போர்த்துகலில் உள்ள மினரோஸ் நகரில் மிகவும் அரிதான இந்த சம்பவம் நடந்துள்ளதாக போர்த்துகலின் ஜி1 குளோபோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

19 வயதான அந்த இளம்பெண், ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் உடலுறவு கொண்டுள்ளார். பின்னர், கருவுற்றிருந்த அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

{{{ஒரு சினை முட்டை கருவுற்ற சில நாட்களில் இரண்டாகப் பிரிந்து இரண்டு குழந்தைகள் உருவாகலாம். இப்படி பிறக்கும் குழந்தைகள் இரண்டு ஆண் அல்லது இரண்டு பெண் (identical twins) என்று இருக்கும்.

விவசாயிகளுக்கு உதவும் செல்போன் வழி சேவைகள் !

அல்லது இரண்டு முட்டைகள் தனித்தனியாக உருவாகி தனித்தனி விந்துக்க ளுடன் சேர்ந்து இரண்டும் சினை முட்டையாக மாறலாம். 

இதனால் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று இரட்டையர்கள் (fraternal twins) தோன்றுவது உண்டு.

போர்த்துகலில் இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தை சுவாரசியம் !

சில சமயம் ஒரு சினை முட்டை இரண்டாகப் பிரியும் போது முழுவதும் பிரிந்து போகாமல், கொஞ்சம் ஒட்டி கொண்டு அப்படியே கர்ப்ப பையில் வளர்ந்து குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் ஓட்டிப் பிறப்பார்கள் (conjoined twins). 

இப்படிப் பிறக்கும் குழந்தைகளை சியாமிஸ் இரட்டையர் என்றும் சொல்லுவது உண்டு.}}}

நிறுவனங்கள் அதிக தள்ளுபடி தருவது எப்படி?

இதில் அதிசயம் என்ன வென்றால், அவரின் இரட்டைக் குழந்தைகளுக்கும் தந்தை வெவ்வேறு நபர் என்பது தான். அதாவது, ஒரே கருவில் இரு வேறு ஆண்களின் உயிரணுக்கள் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். 

அந்தப் பெண்ணுக்கு 9வது மாதத்தில் பிரசவம் நிகழ்ந்துள்ளது. இதில் இரட்டைக் குழந்தைகள் பிறக்க, அவர் பூரித்துப் போயுள்ளார்.

அதே நேரம், குழந்தைகளின் தந்தை குறித்து அறிய விரும்பிய அவர், இது தொடர்பாக மரபணு சோதனை நடத்தியுள்ளார். 

இதில், மருத்துவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவற்றில், ஒரு குழந்தையின் டிஎன்ஏ மட்டுமே உடனிருந்தவருடன் ஒத்துப் போனது. 

அதன் பின்னர் தான், இன்னோர் ஆணுடனும் அதே நாளில் உடலுறவு கொண்டதை நினைவு கூர்ந்த அந்த பெண், இரண்டாம் நபரை அழைத்துள்ளார்.

டி.என்.ஏ. பரிசோதனையில் மற்றொரு குழந்தை அந்த இரண்டாம் நபருக்குப் பிறந்தது தெரியவர அனைவரும் அதிசயப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஒரே வயிற்றில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வேறுவேறு அப்பாக்கள் என்பது உலக அறிவியல் வரலாற்றில் அரிதான விஷயமாகப் பார்க்கப் படுகிறது.

இந்த நிகழ்வை, மருத்துவ உலகில் Heteroparental Superfecundation என்கின்றனர். மிகமிக அரிதாக, 10 லட்சத்தில் ஒருவருக்கு இவ்வாறு நடக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

ஒலிம்பிக் போட்டியின் வரலாறு தெரியுமா?

மகப்பேறு மருத்துவ நிபுணர் துலியோ ஜார்ஜ் ஃப்ரான்கோ கூறுகையில், பெண்ணின் இரு கருக்கள், இருவேறு ஆண்களின் விந்தணுக்கள் மூலம் கருத்தரிக்கும் போது, மிகவும் அரிதாக இப்படி நடக்கிறது. 

இரட்டைக் குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தைகள் இருப்பது அரிதுதான் என்றாலும் சாத்தியமற்றது என்று கூற முடியாது. உலகில் இதுவரை 20 சம்பவங்களே இப்படி நடந்துள்ளதாகக் கூறுகிறார்.

போர்த்துகலில் இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தை சுவாரசியம் !

இரண்டு குழந்தைகளும் பிறந்து இப்போது சுமார் 16 மாதங்களாகும் நிலையில், 'இவ்வாறு நடக்கும் என்று எனக்குத் தெரியாது, நான் எதிர்பார்க்க வில்லை என்று அந்த பெண் கூறியுள்ளார்.

மேலும் இரண்டு குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழிலும் ஒருவரது பெயரே தந்தை பெயராகக் குறிப்பிடப் பட்டுள்ளதாகவும், 

அவரே இரண்டு குழந்தைகளையும் வளர்க்கப் பொறுப்பேற்றுள்ள தாகவும் அந்த பெண் தெரிவித்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)