உடலுறவுக்குப் பிறகு ஆண் துணையை உயிரோடு சாப்பிடும் பெண் உயிரினம் !

0

மனதை திடப்படுத்திக் கொள்ளவும். சில உயிரினங்களில், பெண் இனம் உடலுறவுக்குப் பின், தங்கள் ஆண் துணையை உயிரோடு சாப்பிட்டு விடும். 

உடலுறவுக்குப் பிறகு ஆண் துணையை உயிரோடு சாப்பிடும் பெண் உயிரினம் !
எவ்வளவு பசித்தாலும், மனித இனத்தில் பெண்கள் அப்படி செய்வது இல்லை! (நல்ல வேளை). எந்த உயிரினம், இந்த அளவுக்கு கொடுமையான பெண்களை கொண்டது?

சில சிலந்திகள், Praying Mantis என்று அழைக்கப்படும் மான்டிஸ் ( பார்ப்பதற்கு ஒரு மாதிரி தாறுமாறாக வளர்ந்த வெட்டுக்கிளி போல் இருக்கும் ), 

மற்றும் சில பாம்புகள் இந்த ஆண்களை சாப்பிடும் பயங்கரமான பழக்கத்தை வைத்துள்ளன.

அதுவும், இந்த பிரேயிங் மான்டிஸ், பார்க்கவும் கொடூரம், உடலுறவும் கொடூரம், மொத்தத்தில் ஒரு கொடூரமான பூச்சி இனம்.

அதைப் போல் Black Widow Spider, கருப்பு விதவை சிலந்தி ( தன் கணவனை கொன்று சாப்பிட்டு விடுவதால், இந்த மோசமான பெயர் ) என்றொரு விஷ சிலந்தி இந்த பயங்கர வேலையை செய்கிறது.

இந்த பயங்கரமான வேலைக்கு, விஞ்ஞானப் பெயர் Sexual Cannabalism, பாலியல் நரமாமிசம்! வயிற்றை புரட்டுகிறதா? தொடர்ந்து படியுங்கள். பீதியாக இருக்கும்!

இரைப்பையில் அமில மழைக்கு என்ன காரணம்?

வேடிக்கை என்ன வென்றால், இது போன்ற செயல்களில் ஈடுபடும் இனத்தில் ஆண்கள் சிறியதாக இருக்கும், பெண்கள் பெரியதாக இருக்கும். ( அப்பத்தானே சாப்பிட வசதி )

சரி உடலுறவுக்குப் பின், நம்மை நம் மனைவி சாப்பிட்டு விடுவாள், நாம் காலி என்று ஆணுக்கு தெரியாதா? தெரியும்! ஆனால் காதல் நெருப்பில் உயிர் தியாகம் செய்ய சில ஆண்கள் ரெடி! 

இதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஒரு மாண்டிஸ் அல்லது கருப்பு விதவை சிலந்தி செய்யும் இனச்சேர்க்கை Mating Ritual நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பெண், இனச்சேர்க்கைக்கு ஒரு ஆண் சிலந்தியை அழைத்தவுடன், சிறிய ஆண் சிலந்தி குஷியாக ஓடிவரும். 

இரண்டும் உடலுறவு கொண்டு, உச்ச கட்டத்தை நெருங்கிய பின், பெண் அப்படியே, ஆணின் தலையை கொய்து சாப்பிட்டு விடும். 

பிறகு ஏதோ, திராட்சை ரசம் உறிஞ்சி குடிப்பது போல் மொத்த ஆண் உடலை உறிஞ்சி சாப்பிட்டு விடும். கடைசியில், அங்கே ஆண் சுவாஹா.

சரி பெண் இனம் ஏன் இப்படி செய்கிறது? 

உடலுறவுக்குப் பிறகு ஆண் துணையை உயிரோடு சாப்பிடும் பெண் உயிரினம் !

தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு, நல்ல ஊட்டச்சத்துள்ள சாப்பாடு வேண்டும், அதற்கு தன் ஆண் துணையே சாப்பிடுவது, ஒரு மிகச்சிறந்த வழி! 

ஆணைப் பொருத்தவரை, ஒரு முறை அவளுடன் கலந்தால் போதும்! என் Gene, எனது சந்ததி உருவானால் போகும். அதற்கு என் உயிரையே தியாகம் செய்கிறேன், என்று தியாகம் செய்யும் ஆண் தான், ஒரு ஆண் சிலந்தி.

இந்த மோசமான இனத்தில், உடல் சுகம் வேண்டும் என்றால், உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்று ஆண்களுக்கு தெரியும்.

ஆனால் எல்லா ஆண்களும், சாவதில்லை. மனித ஆண்களைப் போல், சில புத்திசாலி ஆண் சிலந்திகள், பொண்டாட்டி இடமிருந்து உயிர் தப்பிக்க சில டெக்னிக்குகளை செய்கிறது.

வங்கா பாபாவின் உலகப் போர் கணிப்பு பலிக்கப் போகிறதா?

முதல் டெக்னிக் : 

உச்சக்கட்டம் நெருங்கும் பொழுது, வேலை முடிந்ததவுடன், பெண்ணின் பெரிய வயிற்றில் ஒரு குத்து விட்டு தப்பித்து ஓடும் ஆண்கள் உண்டு! ஆனால் இது சீப்பான டெக்னிக்.

இரண்டாவது டெக்னிக் : 

ஏதாவது சாப்பிட உணவு ( ஒரு சின்ன பூச்சி ) எடுத்துக்கொண்டு, கையில் ரோஜா பூ உடன் செல்லும் காதலன் போல் செல்லும். 

பெண் அந்த பூச்சி சாப்பிடும் போது, ஆண் நைசாக வேலையை முடித்து விட்டு ஓடி விடும். இதுவும் அவ்வளவு நல்லா இல்லை.

மூன்றாவது டெக்னிக் : 

உடலுறவுக்குப் பிறகு ஆண் துணையை உயிரோடு சாப்பிடும் பெண் உயிரினம் !

மிகவும் புத்திசாலியான ஆண், பெண்ணின் கால்களை சிலந்தி வலை கொண்டு கட்டி விடும். 

கால்கள் கைகள் அசைக்க முடியாத போது ஆனந்தமாக உடலுறவு கொண்டு, வேலை முடிந்ததும் ஆண்கள் தப்பித்து சென்று விடும்.

நான் நினைக்கிறேன், அந்த ஆண் சிலந்திகள் மனிதர்களைப் பார்த்து கால்கட்டு போடுவது, அல்லது தாலி என்று ஒன்றை கட்டி விட்டு, 

நினைத்ததை எல்லாம் சாதித்து முடிக்கும் ஆண்களை பார்த்து தான் இந்த கலையை கற்று இருக்க வேண்டும்.

உலகில் மன அமைதிக்காக உதவும் டிஜிட்டல் டிடாக்ஸ் எளிய வழிகள் ! 

மனித இனத்தில் பெண்கள் தாயாகி குழந்தை பெற்றெடுத்து தியாகம் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒரு தாயை விட, ஆண் அதாவது தந்தை தான் மிகப் பெரிய தியாகி.

எப்படி தெரியுமா? கல்யாணம் ஆகி ஒரு 5 வருடம் பிள்ளைகள் பெரும் வரை தான் இல்லற சுகம் ஆண்களுக்கு. 

அதற்குப் பிறகு பெரும்பாலும், ஆண்கள் எந்த சுகமும் இல்லாமல், தங்கள் பிள்ளைகளை வளர்க்க உழைக்கிறார்கள், தங்கள் வாழ்வையே அர்ப்பனிக்கிறார்கள்.

மனிதர்கள் 30 வருடம் குடும்பம் தழைக்க உழைத்து உயிரை விடுவது போல், பிறக்க போகும் தன் குட்டிகளுக்கு, 

தன்னையே உணவாக்கி, தன் உடலை 30 நிமிடத்தில் தியாகம் செய்வது தான் இந்த sexual கேன்னபாலிசம்.

Richard Dawkins ரிச்சர்ட் டாவ்கின்ஸ் என்ற ஒரு உயிரியல் பரிணாம வளர்ச்சி விஞ்ஞானி, Selfish Gene என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். 

உடலுறவுக்குப் பிறகு ஆண் துணையை உயிரோடு சாப்பிடும் பெண் உயிரினம் !

டார்வின் பரிணாமக் கொள்கைக்கு நேர் எதிராக ஒரு புது புரட்சிகர சித்தாந்தம் சொல்லியுள்ளார். மனிதன் ஜீன்களை Gene கொண்டு மனிதனை உருவாக்குகிறான் என்று நாம் நினைக்கிறோம். 

ஆனால் உண்மையில் ஜீன்கள் தான் மனிதனை உருவாக்கி, அவன் சாவதற்குள், அந்த Gene ஜீன்களை அடுத்த சந்ததிக்கு கடத்துகிறது.

ஆதார் அப்டேட்களுக்கு வீட்டில் உட்கார்ந்தே பதிவு செய்யலாம் !

அவர் கூற்றுப்படி பார்த்தால், உங்கள் gene பயன்படுத்தி நீங்கள் உங்கள் குழந்தைகளை பெற்றெடுத்த பின் உங்கள் உடல் உங்கள் ஜீன்களுக்கு தேவை இல்லை!

உங்கள் அடுத்த சந்ததிக்கு சென்று விடுகிறது. நீங்கள் பூமிக்கு வந்த வேலை முடிந்து விட்டது. இதைத் தான் The Immortal gene, சாகாவரம் பெற்ற ஜீன்கள் என்று டவ்கின்ஸ் குறிப்பிடுகிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)