கென்யாவில் ஒரே வீட்டில் 15 மனைவி, 107 குழந்தைகளுடன் வசிக்கும் நபர் !





கென்யாவில் ஒரே வீட்டில் 15 மனைவி, 107 குழந்தைகளுடன் வசிக்கும் நபர் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

கென்யாவில் 15 மனைவி, 107 குழந்தைகளுடன் ஒருவர் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார். மனைவிகள் இடையே சண்டை பொறாமை இல்லவே இல்லை என அவர் பெருமையாக கூறுகிறார். 

கென்யாவில் ஒரே வீட்டில் 15 மனைவி, 107 குழந்தைகளுடன் வசிக்கும் நபர் !
மனித வாழ்க்கையில் உள்ள முக்கிய உறவுகளில் முக்கியமானவற்றில் ஒன்று கணவன் மனைவி. 

தனித்தனி வாழ்க்கை நடத்திய இருவரும் திருமண பந்தக்கு பிறகு ஒன்றாக சேர்ந்து வாழ்வதை அடிப்படை கொண்டது தான் இந்த கணவன் மனைவி உறவு.

தீபாவளி ஸ்பெஷல்.. பிரட் ட்ரை குலாப் ஜாமூன் செய்வது எப்படி?

இந்தியாவில் ஒரு மனைவியையே சமாளிக்க முடியவில்லை என சிலர் புலம்பும் வகையில் ஒருவர் 15 திருமணம் செய்து 

அனைவருடனும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். 

கென்யாவை சேர்ந்த ஒரு நபர் தான் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் குக்கிராமமாக வாழ்ந்து வருகிறார். 

அது பற்றிய விபரம் வருமாறு:

கிழக்கு ஆப்பிரிக்காவில் கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலலுயானா. 

இவர் தான் அந்நாட்டின் தற்போதைய கல்யாண ராமனாக உள்ளார். 61 வயது நிரம்பிய இவர் தற்போது வரை 15 பெண்களை திருமணம் செய்துள்ளார். 

இதன் மூலம் அவருக்கு மகன், மகள் என மொத்தம் 107 குழந்தைகள் உள்ளனர். இதனால் அவரது குடும்பமே குட்டி கிராமமாக மாறியுள்ளது. 

தீபாவளி ஸ்பெஷல்... ராகி அதிரசம் செய்வது எப்படி?

தற்போதைய காலத்தில் ஒருவர் 15 திருமணம் செய்துள்ளார் என்பது ஆச்சரியாக உள்ள நிலையில் தான் அவர் அனைத்து மனைவிகள் 

மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசிப்பது என்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்த செய்கிறது. 

இது உண்மையில் மிகப்பெரும் சாதனையாக தான் அந்நாட்டு பத்திரிகைகள் செய்து வெளியிட்டுள்ளன.

இது பற்றி டேவிட் சாகாயோ கலலுயானா கூறுகையில், எனது இந்த முடிவின் பின்னணியில் அரசர் சாலமோன் தான உள்ளார். 

அவருக்கு மொத்தம் 700 மனைவிகளும், 300 பெண் பார்ட்னர்களும் இருந்தனர். நான் எந்த விதத்திலும் சாலமோனை விட குறைந்தவர் இல்லை. 

நான் பல பெண்களின் கண்களில் புத்திசாலித்தனமாக தெரிகிறேன். என்னை போன்ற அறிவாளியை ஒரு பெண்ணால் மட்டும் கவனிக்க முடியாது. 

என்னுடைய IQ அளவை சமாளிக்க கண்டிப்பாக ஒரு பெண்ணால் முடியாது. அதனால் தான் நிறைய பெண்களை திருமணம் செய்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

அவர்களை சமாளிக்கும் வித்தைகள் எனக்கு நன்றாக தெரியும். தற்போது ஒவ்வொருவருக்கும் தேவையான உணவை நான் கொடுத்து வருகிறேன். 

15 மனைவிகளையும் அசாத்தியமாக கையாள்வதால் அவர்களுக்குள் எந்த சண்டையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறாராம் டேவிட். 

தீபாவளி ஸ்பெஷல்... குழந்தைகளுக்கு ஏற்ற சாக்லேட் குஜியா செய்வது எப்படி?

தன்னுடைய மனைவிகள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தாலும் அதில் எந்த பிரச்னையும் ஏற்படாது எனவும் டேவிட் கூறுகிறார்.

இதுபற்றி அவரது மனைவியில் ஒருவரான ஜெசிகா கூறுகையில், 'என் கணவர் புதிதாக திருமணம் செய்வதை பார்த்து நான் ஒரு போதும் பொறாமை கொண்டது இல்லை. 

அவர் ஒரு பொறுப்பான மனிதர். அவர் ஒரு செயலை செய்யும் முன்பு பல முறை யோசிப்பார். அவரது முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும் என்றார். 

கென்யாவில் ஒரே வீட்டில் 15 மனைவி, 107 குழந்தைகளுடன் வசிக்கும் நபர் !

அவர்கள் 1998 இல் திருமணம் செய்து கொண்டனர். ஜெசிகாவும், டேவிட்டும் 1998 ல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு மனைவி ரோஸ் கூறுகையில், நாங்கள் ஒருவரை யொருவர் நேசித்து நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். 

எனக்கும் டேவிட்டுக்கும் 15 குழந்தைகள் உள்ளன. தொடக்க காலத்தில் எங்களுக்குள் பொறாமை குணங்கள் இருந்தது என்னவோ உண்மை தான். 

தீபாவளி இனிப்பு.. அஞ்சீர் கட்லெட் செய்வது எப்படி?

ஆனால் அவையெல்லாம் தற்போது இல்லை. நாங்கள் டேவிட்டுடன் இணைந்து வாழ பழகி விட்டோம் என பெருமையாக கூறியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)