புரதச்சத்துள்ள உணவுப் பொருட்கள் !

0

நமது உடலில் உள்ள செல்கள் புரதத்தால் ஆன கட்டமைப்பாகும். நமது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கிய தேவையாக அமைவது புரதசத்து ஆகும். 

புரதச்சத்துள்ள உணவுப் பொருட்கள் !
புரதத்தின் பங்கு பொதுவாக தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. நம் உடலில் தினமும் முப்பதாயிரம் கோடி செல்கள் அழிந்து, அதற்குப் பதிலாகப் புதிய செல்கள் உருவாக்கப் படுகின்றன.

இச்செயலுக்குப் புரதச்சத்து மிகவும் அவசியம். வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது புரதம். நமது உணவிலிருந்து பெறும் கலோரிகளில் 12 சதவீதம் புரதம் மூலம் பெறுவது நல்லது.

வயதானாலும் நம்மை இளமையாக வைத்திருக்கும் கொலாஜன் !

நம் வாழ்க்கை முறைகள் மற்றும் உணவுகளின் அடிப்படையில் நமது உடலில் உள்ள புரத சத்து வித்தியாசப்படுகிறது. நாம் அனைவருக்கும் வெவ்வேறு அளவிலான புரத தேவைகள் உள்ளன.

புரதச்சத்துள்ள உணவுப் பொருட்கள் :

1. இறைச்சி 2. மீன் 3. பருப்பு வகைகள் 4. சோயா மொச்சை 5. பால் 6. முட்டை 

இதில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகிய வற்றில் கொலஸ்ட்ரால் என்கிற கொழுப்பு உள்ளது.

புரதச்சத்துள்ள உணவுப் பொருட்கள் !

இவற்றை உண்பதால் இரத்தக் குழாய் எளிதில் அடைபட்டு விடும். எனவே இவற்றைத் தவிர்த்து மீன் மற்றும் கோழி இறைச்சி ஆகிய வைகளை உண்ணலாம்.

சோயா மொச்சை யில் 40 சதவீதம் புரதம் இருப்பதால் சைவ உணவு உண்பவர்கள் புரதச்சத்து பெற இதை உண்ணலாம்.

மாட்டு இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

ஜப்பான் நாட்டின் மிக முக்கிய மான உணவு இந்த சோயா மொச்சை யாகும். பருப்பு மற்றும் பயறு வகைகளும் புரதச்சத்து அடங்கிய உணவுப் பொருட் களாகும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)