இந்தியாவில் மொத்த குடும்பமும் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியபடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி குடும்பத்துடன் தற்கொலை !
உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர் ஷைலேந்திர குமார். இவர் மனைவி கீதா. தம்பதியின் மகள் பெயர் பிரச்சி. இந்த நிலையில் ஷைலேந்திர குமாருக்கு இரு தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள் ஆகும். 

அன்றைய தினம் குடும்பத்துடன் கேக் வெட்டிய ஷைலேந்திர குமார், கேக் சாப்பிட்ட பின்னர் அவர்களிடம் இனி அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம் என கூறினார்.

கேக் சாப்பிட்ட சிறித்து நேரத்தில் மூவரும் உயிரிழந்தனர், ஏனெனில் கேக்கில் விஷம் கலக்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பான விசாரணையில் கடன் பிரச்சனையால் தவித்து வந்த ஷைலேந்திர குமார் தொடர்ந்து சிலரால் மிரட்டப்பட்டும், துன்புறுத்தப் பட்டும் வந்திருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

இதையடுத்தே இம்முடிவை அவர் எடுத்துள்ளார். இந்த மரணங்கள் தொடர்பாக பொலிசார் நால்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஸ்மைலிங் டிப்ரஷன் என்றால் என்ன?

விசாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.