திமிங்கலங்கள் சுறாவை வேட்டையாடும் வீடியோ அதிர்ச்சியில் இணையவாசிகள் !





திமிங்கலங்கள் சுறாவை வேட்டையாடும் வீடியோ அதிர்ச்சியில் இணையவாசிகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

பொதுவாக ஆழ்கடலுக்குள் வாழும் உயிரினங்கள் குறித்த வீடியோக்கள் எப்போதும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். 

திமிங்கலங்கள் சுறாவை வேட்டையாடும் வீடியோ அதிர்ச்சியில் இணையவாசிகள் !
இது தொடர்பாக ஏராளமான ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் உயிரினங்களின் வாழ்க்கை முறையும் 

டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சி சேனல்கள் மூலம் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. 

இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் தெரியுமா?

இதனை பலரும் விரும்பி பார்ப்பது வழக்கம்.டிஸ்கவரி நெட்வொர்க்கின் 34-வது ஆண்டின் ஒரு பகுதியாக ஷார்க் ஹவுஸ் என்ற சுறாக்கள் குறித்த தொகுப்பு ஒளிபரப்பானது. 

இதற்கான படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமான ஷார்க் வீக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

அதில் ஒரு பெரிய வெள்ளை சுறாவை 3 திமிங்கலங்கள் வேட்டையாடியுள்ளது. 

ரத்த வெள்ளத்தில் மிதக்கும் சுறாவின் அருகில் 2 திமிங்கலங்கள் உலா வரும் நிலையில், இன்னொரு திமிங்கலம் சுறாவின் வயிற்றை கிழித்துக் கொண்டும் வரும் காட்சிகள் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளில் பதிவாகியுள்ளது. 

அதன் பின்னர் திமிங்கலம் சுறாவைப் பிடித்து தண்ணீரின் கீழே இழுத்து செல்கிறது.

நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது தெரியுமா?

இதனைப் பார்த்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி அலிசன் டவுனர் இதுவரை படமாக்கப்பட்ட இயற்கை வரலாற்றின் மிக அழகான காட்சிகளில் இதுவும் ஒன்று என தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சி யடைந்துள்ளனர். சிலர் மோசமான திமிங்கலத்தின் அற்புதமான குழுப்பணி என கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)