வரலாற்று சிறப்பு மிக்க கழுகுமலை கல்வெட்டுகள் !





வரலாற்று சிறப்பு மிக்க கழுகுமலை கல்வெட்டுகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி சங்கரன் கோவில் சாலையில் அமைந்துள்ள பழம்பெரும் ஊர் கழுகுமலை. 

வரலாற்று சிறப்பு மிக்க கழுகுமலை கல்வெட்டுகள் !
நாளந்தா, தட்சசீலம் போன்ற ஆதி காலத்தில் அமைந்த கலாசாலைகள் போன்று சமண கலாசாலை அமைந்த இடம் தான் கழுகுமலை. 

இந்த ஊருக்கு கழுகாசலம், தென்பழனி, சம்பாதி சேத்திரம், கஜமுக பர்வதம், பவனகிரி, உவனகிரி, அரைமலை, 

திருநெற்சுரம், பெரு நெற்சுரம் போன்ற பழங்கால பெயர்கள் உள்ளன. அதற்கான சான்றுகளும் கல்வெட்டுகளாக உள்ளது. 

இந்த கழுகுமலையின் சிறப்பு காவடி சிந்து பாடல் கூட உள்ளது. இந்த தளத்தில் கழுகாசல மூர்த்தியாக சிவசுப்பிரமணியர் விளங்குகிறார்.

ஆறு கரங்கள் மற்றும் ஒரு தலையுடன் போர் கோலத்தோடு காட்சியளிக்கும் கழுகுமலை தளத்தைப் பற்றி மகாகவி பாரதியார் கூட பாடியுள்ளார். 

மீன் எண்ணெய் சாப்பிடமாட்டீங்களா? உடனே சாப்பிட ஆரம்பிங்கப்பா !

இந்த ஊரின் வரலாற்றைச் சொல்லும் கழுகுமலை கல்வெட்டுகள் அனைத்தும் பிரதானமானவை. 

இந்த ஊரைச் சுற்றியுள்ள நாலாட்டின் புத்தூர், வானரமுட்டி, சாயமலை கல்வெட்டுகளும் கழுகுமலையின் வரலாற்றை அற்புதமாக எடுத்துக் கூறுகிறது.

இந்த ஊரின் வடகிழக்கு அடிவாரத்தில் அமைந்துள்ள கோவில் பெயர் தான் வெட்டுவான் கோவில். 

இந்தக் கோவில் மொனோலிதிக் முறையில் ஒரே பாறையில் இருந்து வெட்டி, இந்தக் கோவிலை உருவாக்கியுள்ளனர். அதனால் தான் இதற்கு வெட்டுவான் கோவில் என்று பெயரிடப்பட்டது. 

வரலாற்று சிறப்பு மிக்க கழுகுமலை கல்வெட்டுகள் !

தமிழகத்திலேயே இந்த வடிவமைப்பில் வெட்டுவான் கோவில் ஒன்று தான் உள்ளது. இதுவே கழுகுமலையின் சிறப்பு. 

மதுரை யானை மலையில் உள்ளது போன்று கழுகுமலையில் 7ஆம் மற்றும் 8ஆம் நூற்றாண்டு கால சமணர் சிற்பங்கள் அனைத்தும் உள்ளன.

அது மட்டுமல்லாமல் மலை சரிவில் உள்ள பாறையில் கடைசி சமண தீர்த்தங்கரர்களான வர்த்தமானர் உட்பட 24 தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களும், 

தலைக்கு மேல் பகுதியில் முக்குடைகளுடன் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. 

டெங்கு மற்றும் சிக்குன் குனியா பற்றிபயப்பட வேண்டாம் !

அதோடு இந்த சிற்பங்களை செதுக்கியவர்களின் பெயர்களும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 

இந்த சிற்பங்கள் அனைத்தும் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கப் பட்டவை.

இந்த மலையில் அமைந்துள்ள சிறு சிறு குகைகள் அனைத்திலும் சமணர் பள்ளிகள் நடத்தப்பட்டு வந்தது. அந்தப் பள்ளிகளில் சமண மதத்தின் கருத்துக்கள் போதிக்கப்பட்டன. 

இந்த அளவிற்கு சமய இறையாண்மை மிக்க இடமாகும், கலைக் கருவூலமாகவும் கழுகுமலை திகழ்கிறது. 

மேலும் உலக மரபுச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெறக் கூடிய வகையிலான சிற்பக் கலைகளை கொண்டுள்ளது. 

மற்ற அனைத்து கோவில்களைக் காட்டிலும் கழுகுமலை வெட்டுவான் கோவில் தனிச்சிறப்பு மிக்கது. அதற்கு காரணம் கழுகுமலை கடினமான பாறை அடுக்குகளால் ஆனது.

இந்தப் பாறைகளில் எண்ணற்ற சிற்பங்கள் உள்ளது. முந்தைய காலத்தில் கழுகுமலையில் மங்கல ஏனாதி என்ற தானைத் தலைவர் ஒருவர் இருந்துள்ளார். 

வரலாற்று சிறப்பு மிக்க கழுகுமலை கல்வெட்டுகள் !

அந்நேரத்தில் ஆய் மன்னனான கரு நந்தன் மீது பாண்டியன் மாறன் சடையன் படையெடுப்பு நடத்தினார். 

அப்போது, மங்கல ஏனாதி சேவகர்கள், பாண்டியனுக்காக சென்று அருவியூர் கோட்டையை அழித்து, அந்தப் போரில் அவர்கள் அனைவரும் மாண்டனர். 

அந்தப் போரில் உயிரிழந்த சேவகர்கள் அனைவருக்கும் நிலம் கொடுக்கப்பட்டது. அதற்கான ஆதாரமாக கல்வெட்டுகள் பொறிக்கப் பட்டுள்ளன. 

காந்தியை கொன்ற கோட்சேயை நாடறியும் அவரை காப்பாற்றிய பதக் மியானை தெர்யுமா?

அந்த கல்வெட்டுகள் தற்போது மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ளது. கோட்டாறு மிழலூர், வெண்பைக்குடி, 

முதலிய 32 க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்த சமணப் பெரியார்கள் கழுகுமலைக்கு வந்து உருவங்களை செதுக்கியுள்ளனர். 

அது மட்டுமல்லாமல் எட்டி, ஏனாதி மற்றும் காவிதி என தமிழில் சிறந்த பட்டங்கள் பெற்றவர்களும் இங்கு வந்து சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர். 

தச்சர், வேளாண் மற்றும் குயவர் முதலிய பல தொழில்கள் செய்வோரும் இங்கு பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க கழுகுமலை கல்வெட்டுகள் !
இந்த மலையின் ஒரு பகுதியில் 7.50 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டி அதன் நடுப்பகுதியைப் கோவிலாக செதுக்கியுள்ளனர். 

இதன் உள்பகுதியில் கருவறையும், அர்த்த மண்டபமும் உள்ளது. இந்தக் கோவிலின் விமானத்தில் உமா மகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால் மற்றும் பிரம்மா ஆகிய வடிவங்களும் உள்ளன. 

இந்திய கட்டடக் கலை வரலாற்றிலேயே முதன் முறையாக கழுகு மலையில் அமைந்துள்ள இந்த வெட்டுவான் கோவிலில் தான் மிருதங்கம் வாசிக்கும் தட்சிணா மூர்த்தியின் சிலை மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. 

உணவுக்குழாய் எதனால் பாதிக்கப்படைகிறது? தெரியுமா?

இந்தக் கோவில் அமைந்துள்ள இடம் வரைக்கும் கௌதம புத்தர் தமது புத்த மதக் கொள்கையைப் பரப்புவதற்காக வந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 

இந்த கழுகுமலையின் அடிவாரத்தில் பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. அதன் மூலவர் இருக்கின்ற இடமும் ஒரு குடைவரையாகவே அமைக்கப் பட்டிருக்கிறது. 

இந்தக் கோவில் உள்ள தெப்பக் குளத்தில் பால் போன்ற நிறத்தில் நல்ல குடிநீர் கிடைப்பதால், அந்த ஊர் மக்கள் அனைவரும் அதனையே குடிநீராக தற்போது வரையிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

வரலாற்று சிறப்பு மிக்க கழுகுமலை கல்வெட்டுகள் !

தென் தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கப்படும் கழுகுமலையில், பல நாட்டின் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை நடுவண் மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்கின்றன. 

ஆனால் தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயிலைப் பற்றி யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். 

இதனை மேம்படுத்தினால் கோவில் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களின் தொழில்களும் மேம்படும். இதன் தொன்மையை பறைசாற்ற வேண்டியது தமிழர்களின் கடமை.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)