பெண்களை விட ஆண்களை பாதிக்கும் ஸ்கின் கேன்சர்.... காரணம் என்ன?

0

இன்றைய உலகில் நோய்களுக்கா பஞ்சம் என்கிற அளவில் ஏராளமான நோய்கள் உருவாகிய வண்ணம் உள்ளன. அவற்றில் சில சாதாரண காய்ச்சல், சளி வகையை சேர்ந்தவையாக இருக்கின்றது. 

பெண்களை விட ஆண்களை பாதிக்கும் ஸ்கின் கேன்சர்.... காரணம் என்ன?

மேலும் சில நோய்கள் உயிரை எடுக்க கூடிய அளவிற்கு பயங்கரமாக உள்ளது. இதில் புற்றுநோயும் அடங்கும். 

மாறிவரும் வாழ்க்கை சூழல், மோசமான உணவு வகைகள், அதிக மாசுபாடு போன்றவற்றால் புற்றுநோய் உருவாகுகிறது. அந்த வகையில் தோல் புற்றுநோய் பற்றி நம்மில் பலர் விழிப்புணர்வுடன் இருப்பதில்லை.

பெரும்பாலும் சூரிய ஒளியில் மிக அதிக நேரத்தை செலவிடும் எவருக்கும் தோல் செல்களின் அசாதாரண வளர்ச்சி காரணமாக தோல் புற்றுநோய் ஏற்படலாம். 

சில நேரங்களில் நேரடி சூரிய ஒளியில் அடிக்கடி வெளிப்படாத சரும பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்படலாம். 

தோல் புற்றுநோயில் பாசல் செல் கார்சினோமா, ஸ்குவாமஸ் செல் கார்சினோமா மற்றும் மெலனோமா ஆகிய 3 முக்கிய வகைகள் உள்ளன.

இதில் கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ள மெலனோமா (Melanoma), சருமத்தில் அதிகம் ஊடுருவக்கூடிய தோல் புற்றுநோயாகும், 

மேலும் அதிக இறப்பு அபாயம். தோலுக்கு நிறத்தை கொடுக்கும் நிறமியை உருவாக்கும் செல்களான மெலனோசைட்டுகள் அளவுக்கு மீறி வளர ஆரம்பிக்கும் போது இந்த வகை புற்றுநோய் ஏற்படுகிறது.

சுவையான செட்டிநாடு வெஜிடபிள் குருமா செய்வது எப்படி?

இந்த வகை ஆபத்தான புற்றுநோய் தங்களை தாக்காமல் பார்த்து கொள்வதில் பெண்களை விட ஆண்களே மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறது சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று.

மேலும் இந்த ஆய்வில் பெண்களை விட ஆண்களே மெலனோமாவா கேன்சரால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் சுமார் 77,698 புதிய மெலனோமா பாதிப்புகள் பதிவாகின. 

வெள்ளையர்களில், ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட 2 மடங்கு அதிகமாக தோல் புற்றுநோயால் இறப்பதாக தரவுகள் கண்டறிந்துள்ளன.

இந்தியாவில்...நம் நாட்டை பொறுத்த வரை ஆண்டுக்கு சராசரியாக சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மெலனோமா கேன்சர் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. 

எனினும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து புற்றுநோய்களை ஒப்பிடும் போ தோல் புற்றுநோய் பாதிப்பு குறைவாக இருப்பதை ICMR கண்டறிந்துள்ளது.

ஸ்கின் கேன்சரை பொறுத்த வரை இந்தியாவின் வடகிழக்கில் அதிக பாதிப்புகள் காணப்படுகின்றன. ஆண்களில் 5.14% மற்றும் பெண்களில் 3.98% பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

வட மற்றும் கிழக்கு இந்தியாவில் தோல் புற்றுநோயின் அதிக நிகழ்வுகள் கங்கைப் படுகையில் உள்ள ஆர்சனிக் வெளிப்பாடு காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஆண்களுக்கு மெலனோமா கேன்சர் ஏற்பட சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், நிபுணர்கள் நம்பும் சில காரணங்கள்.

ஆண்களின் அணுகுமுறை..

பெண்களை விட ஆண்களை பாதிக்கும் ஸ்கின் கேன்சர்.... காரணம் என்ன?

கணக்கெடுப்பு ஒன்றில் பங்கேற்ற ஆண்களில் கால் பகுதிக்கும் குறைவானவர்கள் மட்டுமே எப்போதும் அதிக வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதாக கூறியுள்ளனர். 

சுமார் நான்கில் ஒரு பங்கு ஆண்கள் பாதுகாத்து கொள்ளும் அளவுக்கு அதிக வெயில் இருப்பதாக நினைக்கவில்லை என கூறினர். 

குறிப்பாக 23% ஆண்கள் வெளியே செல்லும் போது சூரிய ஒளியிலிருந்து தங்கள் சருமத்தை பாதுகாப்பதை பற்றி சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

சுவையான செட்டிநாடு இட்லி பொடி செய்வது எப்படி?

ஆனால் உண்மை என்னவென்றால் மேக மூட்டமான கிளைமேட்டில் கூட, சூரிய ஒளி சரும செல்களை சேதப்படுத்தும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

சன்ஸ்கிரீனை சரியாகப் பயன்படுத்தினால் மெலனோமா மற்றும் பிற வகை தோல் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

வேறுபாடுகள்..

பெண்களை விட ஆண்களை பாதிக்கும் ஸ்கின் கேன்சர்.... காரணம் என்ன?

ஆண்கள் தடிமனான தோலை கொண்டுள்ளனர், பெண்களை விட ஆண்களின் தோலில் கொலாஜன் அதிகமாக உள்ளது. 

பெண்களுடன் ஒப்பிடும் போது, தோல் வகையின் இந்த வேறுபாடுகள் ஆண்களின் தோலை UV சூரிய ஒளி அதிகம் சேதப்படுத்த காரணமாக அமைகிறது என ஆராய்ச்சி காட்டுகிறது.

எந்த பொருட்களை உணவில் சேர்த்தால் நல்ல தூக்கம் வரும் ! 

ஈஸ்ட்ரோஜன்..

பெண்களை விட ஆண்களை பாதிக்கும் ஸ்கின் கேன்சர்.... காரணம் என்ன?

ஈஸ்ட்ரோஜன் அதிகமாக உள்ளவர்களுக்கு மெலனோமாக்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

தோல் புற்றுநோய்க்கு எதிராக போராடி மீள்வதில் ஆண்களை காட்டிலும் பெண்களின் என்னைகை அதிகம் என்ற தரவு இதை உறுதிப் படுத்துகிறது. 

பருமனான ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

புரிதலின்மை..

பெண்களை விட ஆண்களை பாதிக்கும் ஸ்கின் கேன்சர்.... காரணம் என்ன?

பெரும்பாலான தோல் புற்றுநோய்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை, எனவே மக்கள் ஆரம்ப அறிகுறிகளை புறக்கணிக்கிறார்கள். 

ஆண்களில் ஏற்படும் பெரும்பாலான மெலனோமா கேன்சர் தோள்பட்டை அல்லது பின்புறம் போன்ற கடின பகுதிகளில் ஏற்படுகின்றன. 

எனவே லேசான மாற்றம் தெரிந்தால் கூட உடனடியாக பரிசோதிப்பது நல்லது. தாமதப்படுத்துவது சிகிச்சை கடினமாகி விடும், இது இறப்பு விகிதத்தை அதிகரிக்கும்.

சத்து நிறைந்த வெள்ளை பூசணிக்காய் சாம்பார் செய்வது எப்படி?

அறிகுறிகள் : 

பெண்களை விட ஆண்களை பாதிக்கும் ஸ்கின் கேன்சர்.... காரணம் என்ன?

பெரும்பாலும் தோல் புற்றுநோய் அறிகுறிகளை கண்டு கொள்ளாமல் இருப்பதாலே அதன் பாதிப்பு அதிகமாக மாறி விடுகிறது. குறிப்பாக கழுத்து, காது, முகம் ஆகிய பகுதிகளில் தோல் புற்றுநோய் உருவாகிறது. 

சிறிய கட்டி போன்று ஆரம்பத்தில் தோன்றும். பிறகு நாளைடைவில் பெரிதாகி விடும். இந்த இடங்களில் உருவாகும் கட்டி வெவ்வேறு வடிவங்களில் இருக்கலாம். 

மார்க்கெட்டில் கண்களைக் கவரும் கேரட் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் !

இந்த வகை புற்றுநோய் சூரிய ஒளிய நேரடியாக படக்கூடிய உடல் பாகங்களில் உருவாகிறது. 

இது தோல் புற்றுநோயாக இருப்பதால், பெரும்பாலும் சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா (UV) கதிர்வீச்சுகளின் நீண்ட கால தாக்குதல்களால் ஏற்படுகின்றன. 

தோல் புற்றுநோய் உருவாகுவதற்கு பல்வேறு காரணிகள் உண்டு. 

எப்படி பாதுகாப்பது? 

பெண்களை விட ஆண்களை பாதிக்கும் ஸ்கின் கேன்சர்.... காரணம் என்ன?

வயது, குடும்ப வரலாறு, ஆர்சனிக் வெளிப்பாடு, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி, மருந்துகள் போன்ற பல விஷயங்கள் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன. 

மரபணு மற்றும் வயது தொடர்பான காரணிகள் போன்றினால் உருவாகும் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்க ஒருவர் எதுவும் செய்ய முடியாது. 

இருப்பினும், அடிப்படை செல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க சில பொதுவான விஷயங்கள் உள்ளன. இதற்கு மேற்சொன்னவரை பின்பற்றினாலே போதும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings