நிலாவுக்கு புல்லட் ரயில் விடுறாங்களாம்… இது எப்படி சாத்தியம் தெரியுமா?

0

இந்த உலகின் மக்கள் தொகை தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் மனிதர்களுக்கு தேவைப்படும் விஷயங்களும் அதிகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

நிலாவுக்கு புல்லட் ரயில் விடுறாங்களாம்… இது எப்படி சாத்தியம் தெரியுமா?

இதனால் மனிதன் இயற்கை வளங்களை அழிக்க ஆரம்பித்து விட்டான் விரைவில் அந்த வளங்களும் தீர்ந்து போகும் என்ற நிலை வந்து விட்டது.

இதனால் மனிதர்களுக்கு எதிர்காலத்தில் பூமி மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடமாக மாறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் பூமியைத் தவிர வேறு கிரகங்களில் மனிதர்களால் வாழ முடியுமா? என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. 

இதை அடிப்படையாக வைத்துப் பல விஞ்ஞானிகள் பூமிக்கு மிக அருகில் உள்ள நிலவிற்கும், செவ்வாய்க் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

விண்வெளி ஆராய்ச்சி என்பது புதிய விஷயங்களை கண்டறிதலை நோக்கமாகக் கொண்டது என்றாலும், அதன் பின்னால், ஒரு நாடு தன் அறிவாற்றலை உலகுக்கு காட்டும் எண்ணமும் உண்டு. 

அந்த வகையில் கடந்த 40 ஆண்டுகளில் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி, அரசியல் தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளன.

இதுவரையில் செவ்வாய் கிரகத்தில் இரண்டு நாடுகளே தரையிறங்கியுள்ளன. ஒன்று அமெரிக்கா மற்றொன்று அப்போதைய சோவியத் யூனியன்.

  • (கடந்த 1969 ஜூலை 20-ம் தேதி அமெரிக்காவின் அப்போலா 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார்.)

அமெரிக்கா தான் முதன் முறையாக நிலவிற்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. அடுத்த வேறு சில நாடுகள் இதற்கான முயற்சியில் இறங்கி வருகின்றனர். 

நிலாவுக்கு புல்லட் ரயில் விடுறாங்களாம்… இது எப்படி சாத்தியம் தெரியுமா?

ஐக்கிய அமெரிக்காவின் அப்பல்லோ 11 பயணமே மனிதர் இயக்கிச் சென்று நிலவில் இறங்கிய முதல் பயணம் ஆகும். 

இது 1969 சூலை 21 ஆம் நாள் நிகழ்ந்தது. 1969 க்கும் 1972 க்கும் இடையில் அமெரிக்காவின் ஆறு ஆட்கள் இயக்கிய கலங்களும், பல ஆளில்லாக் கலங்களும் நிலவில் இறங்கின.

புல்லட் ரயில் என்று கூறப்படும் அதிக வேக ரயில் மூலம் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்தியாவில் தற்போது பயணிகள் ரயில், விரைவு ரயில், அதி விரைவு ரயில், துராந்தோ, ராஜத்தானி, சம்பர்கிராந்தி, தேஜஸ், வந்தே பாரத் உள்ளிட்ட 20-க்கு மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இதில் அதிகபட்சமாக வந்தே பாரத் விரைவு ரயில் சேவை மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. 

தற்போது இந்த ரயில் சேவை டெல்லி - வாரணாசி இடையில் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஜப்பானில் கோயோடோ பல்கலைக்கழகம், காஜிமா கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து நிலவிற்கு ரயில் விடும் திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.

நிலாவுக்கு புல்லட் ரயில் விடுறாங்களாம்… இது எப்படி சாத்தியம் தெரியுமா?

அவர்கள் திட்டத்தின்படி பூமியிலிருந்து நிலவிற்கு ரயில் மூலம் ஒரு போக்குவரத்து வசதியைக் கட்டமைப்பது இது மட்டுமல்ல 

நிலவில் மனிதர்கள் வாழும் வகையில் மூன் கிளாஸ் என்ற ஒரு இடத்தை கட்டமைக்கவும் முடிவு செய்துள்ளனர். 

  • (வரும் 2024-ம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஓரையன் என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது. 
  • இந்த விண்கலம் கடந்த 2014-ம் ஆண்டில் ஆளில்லாமல் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு ஆர்ட்டெமிஸ் என்று நாசா பெயரிட்டுள்ளது.)

அந்த மூன் கிளாஸ் என்பது பூமியின் அதே சூழ்நிலையை நிலவில் ஏற்படுத்தும் முயற்சியாகும். பூமியில் புவியீர்ப்பு விசை அதிகம். ஆனால் நிலவில் மிகவும் குறைவு.

ஆனால் இந்த ஜப்பான் பல்கலைக்கழக திட்டத்தின் படி நிலவில் அவர்கள் கட்டமைக்கும் மூன் கிளாஸ் என்ற கட்டமைப்பிற்குள் பூமியைப் போலவே 

புவியீர்ப்பு, நீர் வசதி, பொது போக்குவரத்து வசதி, செடி கொடிகள், மற்றும் மனிதர்கள் வாழத் தகுதியாக அத்தனை வசதிகளும் இருக்கும்.

இதற்காக பல்கலைக்கழகம் ஒரு கோன் வடிவ கட்டமைப்பு டிசைனையும் உருவாக்கியுள்ளது. இது 1300 அடி உயரமும் 328 அடி ஆரமும் கொண்டது. இந்த திட்டம் இத்துடன் முடியப் போவதில்லை. 

நிலாவுக்கு புல்லட் ரயில் விடுறாங்களாம்… இது எப்படி சாத்தியம் தெரியுமா?

நிலவிலிருந்து அடுத்த கட்டமாகச் செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று அங்கும் இது போன்ற கட்டமைப்பு விஷயங்களை உருவாக்கி அங்கும் மனிதர்கள் வாழத் தகுதியாக இடமாக மாறப்படும் என்றும், 

மேலும் செவ்வாய்க் கிரகத்திலிருந்து நேரடியாகப் பூமிக்கு வருவதற்காக ரயில் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது அந்நிறுவனத்தின் இரண்டாம் கட்ட திட்டம் தான் முதல் கட்ட திட்டம் நிலவிற்கு ரயில் விடுவதும், அங்கு மனிதர்கள் வாழத் தகுதியான இடத்தை கட்டமைப்பதும் தான் எனக் கூறப்படுகிறது. 

நிலவின் கட்டமைப்பில் நாம் முன்பே சொன்னது போலக் கோன் வடிவ டிசை உருவாக்கியுள்ளது என முன்னேர் குறிப்பிட்டோமோ 

அது எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளது. இது ஒரு முறை சுழற்சியாக 20 நொடிகள் வரை ஆகிறது. 

இதற்கு முதன் மனிதர்கள் வசிக்க வேண்டும். அப்பொழுது தான் பூமியின் சுழற்சியில் வாழ்ந்த சூழ்நிலை அங்கும் கிடைக்கும்.

இது மட்டுமல்ல இந்த கோன் வடிவம் இரண்டு அமைக்கப்படுகிறது. இரண்டும் தனித்தனியாக அமைக்கப்படவுள்ளது. 

நிலாவுக்கு புல்லட் ரயில் விடுறாங்களாம்… இது எப்படி சாத்தியம் தெரியுமா?

அந்த இரண்டிற்கு இடையையும் ரயில் போக்குவரத்து ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வரும் 2050ம் ஆண்டிற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இது மட்டுமல்ல பூமியிலிருந்து நிலவு, நிலவிலிருந்து செவ்வாய்க் கிரகம், பின்னர் அங்கிருந்து நேரடியாகப் பூமி என ஒரு முக்கோண அமைப்பை வரும் 2120 ஆண்டிற்குள் ஏற்படுத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியில் ஜப்பான் இறங்கி விட்டால் நிலவை கைப்பற்றும் முதல் நாடாக ஜப்பான் மாறும். Source...

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)