ஆகாஷ் அம்பானியின் பாக்கெட் மணி எவ்வளவு தெரியுமா? யார் இந்த ஆகாஷ்?

0

உலகின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் ஆகாஷ் அம்பானி. யார் இந்த ஆகாஷ் அம்பானி?… பார்க்கலாம்…

ஆகாஷ் அம்பானியின் பாக்கெட் மணி எவ்வளவு தெரியுமா? யார் இந்த ஆகாஷ்?

நீ என்ன பெரிய அம்பானியா? அம்பானி மகன்னு நினைப்பா? என்ன சாலையோரம் போகிற போக்கில் யாரோ யாரையோ கேட்பதைப் பார்த்து இருக்கலாம். 

அந்த அளவுக்கு அம்பானி குடும்பம் இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் இருக்கின்ற குடும்பத்தினர் அனைவருக்கும் பரிச்சயம்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த அனில் திருபாய் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடங்கிய போது அது உலகம் முழுவதும் கிளை பரப்பும் ஓர் நிறுவனமாக இருக்கும் என அவர் கண்டிப்பாக நினைத்தே இருப்பார். 

ஏனென்றால் அவரது தொலைநோக்குப் பார்வை அப்படி. தொடங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள 

சாதனைக்கு உரிய நிறுவனம் ஜியோ. ரிலையன்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் பிரிவில் முன்னணியில் உள்ளது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம்.

ஆகாஷ் அம்பானியின் பாக்கெட் மணி எவ்வளவு தெரியுமா? யார் இந்த ஆகாஷ்?

இந்த நிறுவனத்தின் தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மூத்த மகன் ஆவார். 

1991-ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி பிறந்தவர். இவருக்கு, இரட்டையராகப் பிறந்த சகோதரி இஷா அம்பானியும், இளைய சகோதரர் ஆனந்த் அம்பானியும் உள்ளனர்.

நெத்திலி கிரிஸ்பி வறுவல் செய்முறை !

ஆகாஷ் அம்பானி, அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதார படிப்பில் பட்டம் பெற்றார். 2020ஆம் ஆண்டு ஷ்லோகா மேத்தாவை மணந்தார். இத்தம்பதிக்கு பிருத்வி என்ற மகன் உள்ளார். 

ரிலையன்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் பிரிவில் அதிக ஈடுபாடுள்ள ஆகாஷ், ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஆரம்ப கால திட்டமிடல் முதல் ஜியோவின் மூத்த பணியாளராக செயல்பட்டு வருபவர். 

புதுமை விரும்பி, தொழில் நுட்பத்தில் மாற்றம், திட்டமிடலில் புதிய பரிமாணம் என ஜியோவை உலக அளவில் கொண்டு சென்ற நேர்த்தியான பணியாளர். 

ஆகாஷ் அம்பானியின் பாக்கெட் மணி எவ்வளவு தெரியுமா? யார் இந்த ஆகாஷ்?

ஜியோவின் வளர்ச்சிக்கு அவருடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றியே இந்த தலைமைப் பதவி என நிறுவனம் கூறுகிறது.

2017இல் இந்தியாவை மையமாகக் கொண்டு ஜியோ அறிமுகமானது. இதர நிறுவனங்களை கையகப்படுத்துதல் முதல் இன்றைய அசுர வளர்ச்சி வரை, ஜியோ நிறுவனத்தின் முக்கிய சாதனை. 

பூண்டு மீன் குழம்பு செய்முறை !

அடுத்து வரவுள்ள 5 ஜி அலைவரிசை தொழில் நுட்பம், சேவைத்துறை, உற்பத்தி துறை தாண்டி அனைத்து துறைகளையும் தன் வசப்படுத்தும் டிஜிட்டல் துறையின் அதிவேக வளர்ச்சியை கணக்கில் கொண்டு, 

அதிலும் வெற்றிக் கொடி நாட்ட ஆகாஷ் அம்பானிக்கு ஜியோவின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆகாஷின் சகோதரி இஷா அம்பானியிடம் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பொறுப்பை விரைவில் முகேஷ் அம்பானி ஒப்படைக்க உள்ளார். 

ஆகாஷின் சகோதரர் ஆனந்த் அம்பானி, ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்களில் இயக்குநராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பணக்கார குடும்பங்களில் ஒன்று அம்பானியின் குடும்பம். 

ஆகாஷ் அம்பானியின் பாக்கெட் மணி எவ்வளவு தெரியுமா? யார் இந்த ஆகாஷ்?

என்ன தான் பணக்காரர்களாக இருந்தாலும் தங்களுடைய பிள்ளைகளை மிடில் கிளாஸ் குழந்தைகளைப் போலத் தான் வளர்த்தியுள்ளனர் அம்பானி, நீதா தம்பதி. 

ஆசியாவின் பணக்காரர்களின் குழந்தைகளான இஷா, ஆகாஷ், ஆனந்த் அம்பானிக்கு எல்லாம் பாக்கெட் மணியே ஆயிரம் ரூபாய் இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். 

ஆனால், அவர்களுக்கு கிடைத்த பாக்கெட் மணி எவ்வளவு எனத் தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 

பாப்கார்ன் பற்றி அறிந்து கொள்வோமா?

நீதா அம்பானியும், முகேஷ் அம்பானியும் தங்களது பிள்ளைகள் ஒரு போதும் பணத்தை தவறாகப் பயன்படுத்தி விடக் கூடாது என்றும், பணத்தின் மதிப்பை அவர்கள் உணர வேண்டும் என்றே எப்போதும் விரும்பியுள்ளனர்.

நீதா அம்பானி தனது பிள்ளைகளுக்கு பள்ளி கேண்டினில் செலவிடுவதற்காக வெறும் 5 ரூபாய் மட்டும் தான் பாக்கெட் மணியாக கொடுத்தனுப்புவாராம். 

இதைப் பார்த்த சக மாணவர்கள் அம்பானி குடும்பம் என்றாலும் இவ்வளவு குறைந்த தொகைதான் கொண்டு வருவாயா என்று கிண்டல் செய்வார்களாம். 

ஒருநாள் நீதாவின் பெட்ரூமுக்கு ஓடிவந்த ஆனந்த் இனிமேல் எங்களுக்கு 10 ரூபாய் பாக்கெட் மணியாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

ஏன் என நீதா கேள்வி எழுப்பிய போது என்னை எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள் என ஆனந்த் கூறியுள்ளார். 

ஆகாஷ் அம்பானியின் பாக்கெட் மணி எவ்வளவு தெரியுமா? யார் இந்த ஆகாஷ்?

ஆனாலும், இஷா, ஆகாஷ், ஆனந்த் ஆகியோருக்கு கடைசி வரை 5 ரூபாய் மட்டுமே பாக்கெட் மணியாக கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பணம் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. கடுமையாக உழைத்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை என் குழந்தைகள் சிறுவயதில் இருந்தே உணர வேண்டும். 

சூரிய ஒளி மின்சாரம்

பணத்தின் மதிப்பு குறித்து அவர்களுக்கு தெரிய வேண்டும் என தனது கணவர் சொல்வார். அதனால்தான் தான் அப்படி நடந்து கொண்டேன் என நீதா அம்பானியே கூறியிருக்கிறார். 

தன் வீட்டு வாட்ச்மேனிடம் கோபமாக பேசிய ஆகாஷ் அம்பானியை, அவரிடம் மன்னிப்பு கேட்க வைத்தார் முகேஷ் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது. இதனை நீதா அம்பானியே பலமுறை சொல்லியிருக்கிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)