இந்த அறிகுறிகள் நம்மை முட்டாள் என்று குறிக்கிறதாம்... தெரியுமா?

0

பண்டைய காலங்களில் வேலைகள் பலவிதமல்ல. இருந்த வேலைகளெல்லாம் பெரும்பாலும் ஒவ்வொரு தனித்திறன் சார்ந்த தொழில்கள். 

இந்த அறிகுறிகள் நம்மை முட்டாள் என்று குறிக்கிறதாம்... தெரியுமா?
அதாவது ஆசாரி, சிற்பி இன்னபிற போன்றவை. அவர்கள் உதவிக்கு அந்ததொழிலை கற்பவர்கள் இருப்பார்கள் அவர்களை கையாள் என்பார்கள். 

திருக்கோவில்களில் தேரோட்டம் நடைபெறுவதை நாம் அறிவோம். 

கோவிலுக்குச் சென்று மூலவரை வழிபட முடியாத முதியவர்கள், நோயாளிகள் போன்றோருக்காக உற்சவரே கோவில் விமானம் போன்ற 

அமைப்புடைய ஒளி பொருந்திய தேரில் ஏறி வீதிதோறும் சென்று அருள்பாலிக்கும் வழக்கமே தேரோட்டம் ஆகும்.

வாடிக்கையாளரை புரிந்து கொண்டால் வெற்றி தான் !

தேரின் சக்கரத்தில் முட்டுக் கொடுப்பதன் மூலம் தேரின் வேகத்தைக் குறைக்கவோ, நிறுத்தவோ, திருப்பவோ முடியும். 

தேரோட்டம் நடைபெறும் போது முட்டுக் கொடுப்பதற்கென்று கோவில் நிர்வாகிகள் சில ஆட்களை நியமிப்பார்கள். 

தேரின் சக்கரங்களுக்கு இடையே லாகவமாக பணியாற்ற வேண்டும். இது சற்று ஆபத்தான பணி. இவர்கள் இல்லாவிட்டால் தேர் முறையாக நகராது.

இவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் ஆள் என்று பெயர். முட்டு+ஆள் = முட்டாள். இவர்கள் இந்தப் பணியை மட்டும் செய்து வந்தார்களாம். 

வேறு எந்த வேலையினைச் செய்வதற்கான திறனும் அறிவும் அற்றவர்கள் முட்டு ஆட்கள். என்பது அந்தக்காலத்தில் நிலவிய கருத்து. 

எனவே வேறு வேலை செய்வதற்கேற்ற அறிவில்லாதவர்களையும் முட்டாள் (முட்டு ஆள்) என்று அழைக்கத் தொடங்கினார்கள். 

நாளடைவில் அறிவில்லாதவர்களைக் குறிப்பதற்கு மட்டும் இந்தச் பயன்படுத்தப்படுகிறது. 

ஒரு மனிதன் புத்திசாலியா? இல்லையா? என்பதை அவர்களின் செயல்பாடுகளும், அவர்கள் எடுக்கும் முடிவுகளும்தான் உணர்த்தும். 

கடினமான சூழ்நிலையில் தவறான முடிவெடுப்பது உங்கள் வாழ்க்கையையே சிதைக்கக்கூடும். 

மகாபாரதத்தின் முக்கியநபரான மகாஞானி விதுரர் தனது ஞானத்தைக் கொண்டு விதுர நீதி என்னும் நூலை இந்த உலகிற்கு வழங்கியுள்ளார்.

விதுர நீதியில் குறிப்பிட்டுள்ளபடி ஒருவர் முட்டாளா? இல்லையா? என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்து விடலாம். 

அதி வேகமாக அழிந்து வரும் உயிரினங்கள் !

அறிகுறி 1

இந்த அறிகுறிகள் நம்மை முட்டாள் என்று குறிக்கிறதாம்... தெரியுமா?

ஆசைப்படக் கூடாத விஷயங்களின் மீது ஆசைப்படுபவர்கள், அதனை நியாயமென கருதுபவர்கள், சக்தி வாய்ந்தவர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் கண்டிப்பாக முட்டாள்களாக இருப்பார்கள்.

அறிகுறி 2

ஒரு மனிதன் தனது சொந்த பலத்தைப் பற்றி அறியாமல் பொருள்களின் மீது ஆசைப்படுபவர்கள், 

ஒழுக்கம் மற்றும் இலாபம் இரண்டுமே இல்லாமல் போதுமான வழிகளை பின்பற்றாமல் ஆசையை மட்டும் கொண்டிருப்பவர்கள் முட்டாள்கள் தான்.

கால்கள் எங்கே? பாதங்கள் எங்கே? மாயத் தோற்றம் !

அறிகுறி 3

இவர்கள் வேதங்களை பற்றி அறியாதவர்களாக இருப்பார்கள், அதனை பெருமையாக நினைப்பார்கள். மேலும் காற்றில் கோட்டைக் கட்டுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். 

தன்னுடைய முயற்சியோ, உழைப்போ இன்றி தனக்கான செல்வத்தை அடைய வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக நியாயமற்ற வழிகளைத் தேடுவார்கள்.

அறிகுறி 4

இந்த அறிகுறிகள் நம்மை முட்டாள் என்று குறிக்கிறதாம்... தெரியுமா?

தனது எதிர்கால திட்டங்களை பற்றி அனைவரிடமும் கூறிக்கொண்டு, யாரையும் நம்பாமல் அனைவரின் மீதும் சந்தேகம் கொண்டு, 

குறுகிய நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை நீண்ட நேரம் செய்பவர்கள் நிச்சயமாக முட்டாளாக இருப்பார்கள்.

அறிகுறி 5

தனது எதிரிகளை நண்பர்களை கருதுபவர்களும், தனது நண்பர்களை எதிரியாக கருதுபவர்களும், அவர்களுக்கு தீங்கு செய்பவர்களும் முட்டாள்களாக கருதப்படுகிறார்கள்.

நீர் நாயிடம் உயிருக்கு போராடிய ஆக்டோபஸ்சின் படங்கள் !

அறிகுறி 6

தன்னிடம் இருக்கும் பொருட்களைப் பற்றி நினைக்காமல் மற்றவர்களிடம் இருக்கும் பொருட்களை பார்த்து கவலையும், பொறாமையும் படுபவர்கள், 

மேலும் தனது நண்பர்களுடன் வஞ்சக உணர்வுடன் பழகுபவர்கள் முட்டாள்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

அறிகுறி 7

தகுதி அற்றவர்களுக்கு அறிவுரை கூறுபவர்கள், மோசமான ஆட்களுடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்கள், கஞ்ச குணம் கொண்டவர்களிடம் அடைக்கலம் கொள்பவர்கள் புத்தியில்லாதவர்களாக இருப்பார்கள்.

அறிகுறி 8

இந்த அறிகுறிகள் நம்மை முட்டாள் என்று குறிக்கிறதாம்... தெரியுமா?

மற்றொருவரின் வீட்டுக்கு அழையா விருந்தாளியாக செல்பவர்கள், மற்றவர்கள் கேட்காமலேயே அதிகம் பேசுபவர்கள், நம்பக் கூடாதவர்களை நம்புகிறவர்கள், 

நம்ப வேண்டியவர்களை நம்பாமல் இருக்கிறவர்கள் முட்டாள்களிலேயே மோசமான முட்டாளாக இருப்பார்கள்.

கிரானைட் என்றால் என்ன? கிரானைட் தயாராவது எப்படி? 

அறிகுறி 9

குற்றம் தன் மீது இருந்தாலும் அதனை ஒப்புக் கொள்ளமால் மற்றவர்கள் மீது பழி சுமத்துபவர்கள் மேலும் பலவீனமானவர்கள் மீது கோபத்தை காட்டுபவர்கள் கண்டிப்பாக முட்டாளாக இருப்பார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings