சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் !

0

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் !
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் சென்னையில் உள்ள பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.

உருளைக்கிழங்கு பனீர் பரோட்டா செய்வது எப்படி?

மேலும், நயன்தாராவின் சிவப்பு வண்ண புடவையும், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள வைர, வைடூரியங்கள், மரகதம் பொருந்திய நகைகளும் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அது மட்டுமில்லாமல் நயன்தாரா தன் திருமணத்தின் வீடியோவை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸில் 25 கோடிக்கு விற்ற நிலையில், 

மும்பையிலிருந்து நெட்பிலிக்ஸ் நிறுவனமே பாதுகாவலர்கள் அனுப்பிவைத்து திருமணத்திற்கு பாதுகாப்பு கொடுத்துள்ளது. 

இதனிடையே நயன்தாராவின் திருமணத்திற்கு தளபதி விஜய், தல அஜித், உலகநாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என 

பல முக்கிய திரைப் பிரபலங்களுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் பத்திரிகை வைத்து அழைத்திருந்தனர். சூர்யா ஜோதிகா உள்ளிட்ட பலர் நயன்தாராவின் திருமணத்தில் பங்கேற்றிருந்தனர். 

சுவையான இஞ்சி பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?

அதனை ஏமாற்றும் வகையில் அஜித் நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் குடும்பத்தாரை மட்டும் அனுப்பி வைத்து ரசிகர்களை ஏமாற்றி உள்ளார்.

மேலும் நயன்தாராவின் திருமணத்திற்கு ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்து அவருடைய தலைமையில் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். 

2004 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நயன்தாராவிற்கு சினிமா வாழ்க்கை திருப்பு முனையாக அமைந்தது.

அதற்கு நன்றி செலுத்தும் விதமாக விக்னேஷ் சிவன், ரஜினியின் கைகளால் தாலியை வாங்கி நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். 

எந்த உணவுடன் எந்த உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது? 

மேலும் நயன்தாராவின் திருமணத்திற்கு வரும் அனைத்து பிரபலங்களும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறைகள் இருந்த நிலையில், 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சரத்குமாரின் செல்போன்கள் மட்டும் வாங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)