அமில வார்த்தையை வீசிய போது காணாமல் போகும் உறவுகள் !

0

அவர் இறந்து விட்டார். அடக்கம் செய்யணும்., சொல்லிக் கொண்டே சென்றார்கள். மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை. ஆனால் இப்போது தான் இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை.

அமில வார்த்தையை வீசிய போது காணாமல் போகும் உறவுகள் !
இருபது வருடங்கள் முன்னாடி அவர் மனைவி இறந்த பிறகு, சாப்பிட்டாயா என்று யாரும் கேட்காத நேரத்தில் அவர் இறந்திருந்தார், யாருமே கவனிக்கவில்லை.

பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியது தானே. என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்கவில்லை.

தாய்க்குப் பின் தாரம். தாரத்துக்குப் பின். வீட்டின் ஓரம் என்று வாழ்ந்த போது அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்கவில்லை.

காசு இங்கே மரத்திலேயா காய்க்குது என்று மகன் அமில வார்த்தையை வீசிய போது அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்கவில்லை.

என்னங்க ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டு தலை முழுகிட்டு வந்திடுங்க என்று காதிலே விழுந்த போதும் அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்கவில்லை.
உனக்கென்னப்பா பொண்டாட்டி தொல்லை இல்லை. என்று வாழ்த்துவது போல கிண்டலடிக்கப் பட்ட போது அவர் இறந்திருந்தார்.! அப்போதும் யாருமே கவனிக்கவில்லை.

அருமையான முட்டை சீஸ் ஆம்லெட் செய்வது எப்படி?

இப்போது தான் இறந்தாராம் என்கிறார்கள்.

எப்படி நான் நம்புவது.?

நீங்கள் செல்லும் வழியில் இப்படி யாராவது இறந்து கொண்டிருப்பார்கள். ஒரு வினாடியாவது நின்று பேசி விட்டுச் செல்லுங்கள்.

இல்லையேல்.

உங்கள் அருகிலேயே இறந்து கொண்டிருப்பார்கள் புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல.

வாழ வைப்பதும் தான். பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆனது. 

யாராலும் மாற்ற இயலாத காலத்தின் கட்டாயம்.......

மனைவி; என்னங்க உங்கம்மாவை முதியோா் இல்லத்தில் சோ்க்கப் போனீங்களே என்னாச்சு.?

கணவன்; அதெல்லாம் சோ்த்தாச்சு.

மனைவி ; எங்கம்மா சொன்னது சாிதாங்க.

கணவா் ; என்ன சொன்னாங்க.

மூட்டு வலி, முழங்கால் வலி நீங்க மருத்துவம் !

மனைவி ; நீங்க தங்கமானவங்களாம் ஆம்பளைனா உங்களை போல தான் இருக்கனும்பாங்க.

கணவா்; ஏனாம்.??

மனைவி; மனைவி சொல்ல தட்டாம கேட்கிறீங்கனு தான்.

கணவா்;  சொல்ல மறந்துட்டேன். வயசான காலத்தில் பேச்சுத் துணைக்கு தொிந்தவா்கள் யாரும் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாங்கன்னு யோசனையா இருந்தேன்

மனைவி ; பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சுட்டாங்களா.?

கணவா்; கிடைச்சுட்டாங்க.

மனைவி ; அப்படியா யாரு.?

கணவா் : உங்கம்மா. இப்பத்தான் உன் அண்ணன் வந்து உங்கம்மாவை சோ்த்துட்டு போனான்.

ஆட்டிஸம் பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம் !

மனைவி : என்னது.? பொண்டாட்டி பேச்சை கேட்டு பெத்த அம்மாவை அனாதை ஆஸ்ரமத்தில் சோ்த்துட்டானா? 

அவன் எல்லாம் ஒரு ஆம்பளையா.? அவன் உருப்புடுவானா.? பெத்த தாயிக்கு மூணுவேளை கஞ்சி ஊத்த அவனுக்கு வக்கில்லையா.? 

அப்படி என்ன தான் அவன் பொண்டாட்டி தலையணை மந்திரம் ஓதினாளோ? பெத்த தாயை காப்பாத்த முடியாத அவனெல்லாம் வெளங்கவே மாட்டான்.

அவள் ஆவேசம் வந்தவளாய் ஆத்திரத்தை அடக்கமுடியாமல் ஓ'வென்று கத்தி கதறத் தொடங்கினாள். 

எந்த வினைக்கும் அதனை ஒத்த எதிா்வினை உண்டு. இது தான் பிரபஞ்ச நியதி. இதில் எவரும் தப்பவே முடியாது. ........

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)