பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கருப்பையில் இருந்த குழந்தையின் தலையை வெட்டிய ஊழியர், அதனை கருப்பையிலேயே வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது மருத்துவர் இல்லை என்பதால், மருத்துவ ஊழியர் ஒருவர் சனா குமாரிக்கு பிரசவம் பார்த்திருக்கிறார்.
அப்போது கருப்பையில் இருந்து பச்சிளம் குழந்தையை வெளியே எடுக்கும் போது, அதன் தலையை அவர் வெட்டி விட்டதாக தெரிகிறது.
வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள் !
பின்னர் அந்த தலையை கருப்பையிலேயே வைத்து விட்டு குழந்தையின் உடலை மட்டும் வெளியே எடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நடந்த விஷயத்தை வெளியே சொல்லாமல், உடனடியாக அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, மிதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சனா குமாரி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது, கருப்பையில் குழந்தையின் தலை மட்டும் இருந்தது தெரிய வந்தது.
சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போலீஸார் சென்ற போது, அந்த மருத்துவ ஊழியர் தலைமறைவாகி விட்டார்.
எப்போதும் காதுக்குள் இரைச்சல் ஏற்பட காரணம் என்ன?
இக்கொடூர சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து மருத்துவ ஊழியரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அலட்சியத்தால் நிகழ்ந்ததா அல்லது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். Source



Thanks for Your Comments