கப்பல் காணாமல் போனால் முழு பணமும் வழங்கப்படும்.. கப்பல் நிறுவனம் அறிவிப்பு !

0

அட்லாண்டில் கடற்கரையில் உள்ளது பெர்முடா முக்கோணம். சுமார் 7 லட்சம் கி.மீ. பரப்பளவு கொண்டது. 

கப்பல் காணாமல் போனால் முழு பணமும் வழங்கப்படும்..  கப்பல் நிறுவனம் அறிவிப்பு !
இந்த முக்கோணத்தில் ஒரு முனை பெர்முடாவையும் மறு முனை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையும் மற்றொரு முனை போர்டொ ரிகோவையும் இணைக்கிறது.

பெர்முடா முக்கோணம் என்பது அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தோராயமாக முக்கோணப் பகுதியாகும்.

சுவையான வாழை இலை மீன் பொள்ளிச்சது செய்வது எப்படி?

இப்பகுதி பெர்முடா, புளோரிடா மற்றும் போர்ட்டோ ரிக்கோ இடையே அமைந்துள்ளது. 

இங்கு பல கப்பல்கள் மற்றும் விமானங்கள் மர்மமான முறையில் காணாமல் போனதால் இது 'பேய் முக்கோணம்' என்றும் அழைக்கப்படுகிறது. 

அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த முக்கோண பகுதிக்கு செல்லும் பொருட்கள் மாயமாகி விடுவதாகவும் அதில் மர்மங்கள் அடங்கியதாகவும் கூறப்படுகிறது. 

அதாவது இந்த முக்கோணத்தை கடக்கும் கப்பல்கள், பறவைகள், விமானங்கள் என மாயமாகி விடுகிறது. இந்த மர்மம் 70 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வருகிறது.

மறைந்து வரும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் பற்றி எந்த நிரூபிக்கப்பட்ட விளக்கமும் இல்லாததால், பல தசாப்தங்களாக பெர்முடா முக்கோணம் ஒரு மர்மமான இடமாக உள்ளது. 

பாஸ்தா உடலுக்கு ஆரோக்கிய நன்மை தருமா? படிங்க !

இந்நிலையில், ஒரு கப்பல் நிறுவனம், வினோதமான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

பெர்முடா முக்கோண நிறுவனம் கடலில் கப்பல் காணாமல் போனால் அனைத்து பயணிகளுக்கும் பணத்தை திரும்ப வழங்குவதாக அறிவித்துள்ளது.

அந்த கப்பலில் இரண்டு நாள் பயணத்திற்கு பயணிகளிடம் சுமார் ரூ.1.4 லட்சம் வசூலிக்கப்படுகிறது. 

பெர்முடா முக்கோணப் பகுதியில் கப்பல் மாயமானால் 100 சதவீதத் தொகையை திருப்பித் தருவதாக நிறுவனத்தின் இணைய தளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் அந்த அறிக்கையில் இந்த பெர்முடா முக்கோண சுற்றுப்பயணத்தில் காணாமல் போவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். 

இந்த சுற்றுப்பயணம் 100% வருவாய் விகிதத்தைக் கொண்டுள்ளது, மேலும் நீங்கள் காணாமல் போனால் உங்கள் பணம் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் காணாமல் போனால் முழு பணமும் வழங்கப்படும்..  கப்பல் நிறுவனம் அறிவிப்பு !

இதனிடையே பெர்முடா முக்கோணத்தின் மர்மமான உண்மை குறித்து ஊகங்கள் நிலவி வரும் நிலையில், 

ஆஸ்திரேலிய விஞ்ஞானி கார்ல் க்ருசெல்னிக்கி 2017 ஆம் ஆண்டில் பெர்முடா முக்கோண மர்மத்தை முழுமையாக தீர்த்து விட்டதாகக் கூறினார். 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

பெர்முடா முக்கோண பகுதிகளில், மனித தவறுகளால் காணாமல் போன சம்பவங்கள் நடைபெறுவதால், அதில் தீர்க்க எந்த மர்மமும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings