திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை என்.எச்.காலனியில் ஒரு வீட்டின் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை ஒரு மர்ம நபர் மொபைல் போன் மூலம் வீடியோ எடுப்பதை பார்த்திருக்கிறார். 

குளித்துக் கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த சாஃப்ட்வேர் என்ஜினீயர் !
இதனால் அதிர்ந்து போன அந்த பெண், உடனடியாக சத்தம் போட்டு கத்தி உள்ளார். 

இந்த அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி போட்டு வெளுத்து உள்ளனர்.

பாசம் இருந்தாலும் வெளியில் எதிரிப் போல் பழகுவது அப்பா !

இதில் அந்த மர்ம நபரின் தொலைப்பேசியை கைப்பற்றி பார்த்ததில் அதே தெருவைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை வைத்திருந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து வீடியோ எடுத்த நபரை மீண்டும் அடித்து உதைத்து, முற்றிலும் நையப்புடைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் அவர் பெயர் பால்ராபின்சன் (45 வயது) என்பது தெரிய வந்தது.

சாஃப்ட்வேர் என்ஜினீயரான அவர் கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்ததால் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். 

இவர் என்.எச்.காலனியில் நாய், சிசிடிவிகள் இல்லாத வீடுகளை பகலில் நோட்டமிட்டவர், இரவானதும் அந்த வீட்டின் ஜன்னல், பாத்ரூம் வழியாக பெண்களை அபாசமாக வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ளது. 

ஜனாஸாவை குளிர் சாதனப் பெட்டியில் வைக்கலாமா?

அவர் தொலைப்பேசியில் சுமார் 150 வீட்டு பெண்கள் தொடர்பான 400 ஆபாச வீடியோக்கள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.