கடலின் அடியில் மிகப்பெரிய தாவரம்...வைரல் வீடியோ !

0

மேற்கு ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் வளரும் உலகின் மிகப்பெரிய தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

கடலின் அடியில் மிகப்பெரிய தாவரம்...வைரல் வீடியோ !
ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷார்க் விரிகுடாவில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தாவரம் சுமார் 200 சதுர கிமீ பரப்பளவில் விரிந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சுவையான அவல் புளியோதரை செய்வது எப்படி?

மேலும் இது விரிந்திருக்கும் மேற்பரப்பு கிளாஸ்கோ நகரத்தை விட சற்றே பெரியது எனவும் மன்ஹாட்டன் தீவை விட மூன்று மடங்கு பெரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலில் இந்த செடியை பார்க்கும் போது அது ஒரு பெரிய கடல் புல்வெளி என்று நம்பியதாகவும், ஆனால் அது ஒரு விதையில் இருந்து 

பரவிய தாவரம் என அறிவியல் சோதனையில் தாங்கள் கண்டறிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்றால் என்ன?

மேலும் இந்த தாவரத்தின் வளர்ச்சியை பார்த்தால் இந்த தாவரம் சுமார் 4,500 ஆண்டுகளாக வளர்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)