திறமை இருந்தும் ஜொலிக்க முடியாத நடிகர் விதார்த் !

0

விதார்த் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மைனா என்றும் படத்தில் நானும் ஒரு நடிகன் என்ற அந்தஸ்தை பெற்றார்.

திறமை இருந்தும் ஜொலிக்க முடியாத நடிகர் விதார்த் !

அதன் பின் பல படங்களில் தோன்றினாலும் அவரால் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. காரணம் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் அவரிடம் பெரிய பட்ஜெட் படங்களை கொடுக்காதது தான்.

கிட்டத்தட்ட 30, 40 படங்களில் நடித்தாலும் இவர் 10 படங்களில் மட்டும் தான் நம் கண்களுக்கு தெளிவாக தெரிகிறார். 

போன்லெஸ் மட்டன் மசாலா செய்வது எப்படி?

ஆனால் விதார்த், கடந்த 2001ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமா சென், அப்பாஸ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் அடித்த மின்னலே படத்திலும் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் ஹீரோ நண்பன், அடியாள் போன்ற சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு மைனா படம் தான் ஒரு டர்னிங் பாயிண்ட். 

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பயணிகள் கவனிக்கவும் படத்தில் எல்லோரையும் அழ வைத்து விட்டார் விதார்த். வாய் பேச முடியாத, காது கேட்காத அப்பாவாக நடித்து இருக்கிறார். 

எஸ்பி சக்திவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் விதார்த் உடன் கருணாகரன் லட்சுமி பிரியா சந்திரமௌலி உள்ளிட்டோர் நடித்து இருப்பார்கள்.

இந்த படம் ஏற்கனவே மலையாளத்தில் விக்ருதி என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு தமிழில் ரீமிக்ஸ் ஆனது. 

இந்தப் படத்தை பார்த்து எவராலும் அழாமல் வெளியே வர முடியாது. அந்த அளவுக்கு இதில் நடித்து அசத்தி இருக்கிறார்.

வான்கோழி இறைச்சி பிரட்டல் செய்வது எப்படி?

மொழி படத்தில் ஜோதிகாவின் நடிப்பு எப்படி பேசப்பட்டதோ, அதற்கு மேலும் ஒரு படி சென்று அசத்தி இக்கிறார். 

ஆகையால் திறமையான நடிப்பை வெளிக்காட்டும் விதார்த்துக்கு பெரிய பட்ஜெட் படங்கள் கிடைக்காதது தான் பெரும் சோகம்.

இதற்கு முக்கியமான காரணம் அவர் சினிமா துறைக்கு வந்து 15 வருடங்கள் ஆனது. 

ஆனால் இவர் செகண்ட் ஹீரோ, அடியாள், ஹீரோவின் நண்பர் போன்ற நடிப்புக்கு தான் செட் ஆவார் என்ற ஒரு பிம்பம் குத்தப்பட்டது. இதனால் இன்று வரை இவர் வளர முடியாமல் தவித்து வருகிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !