பிரேசில் விமான நிலையத்தில் விமானங்கள் வருகை குறித்த தகவல்களை அறிவிக்கும் திரையில் திடீரென ஆபாச படங்கள் வந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

விமானம் வருகை குறித்த திரையில் திடீரென ஆபாச படம் !
கடந்த வெள்ளிக்கிழமை பிரேசிலின் ரியோ - டி - ஜெனிரோ விமான நிலையத்தில் பயணிகள் முகம் சுளிக்கும் விதமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதனால் பயணிகள் அசௌகரியமடைந்தனர்.

பலர் தங்கள் கண்களை மூடிக்கொண்டனர். குழந்தைகளுக்கு அந்த படத்தை மறைக்க முயன்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. 

மணிக்கட்டு இப்படி இருந்தால் உடனே டாக்டர பாருங்க !

அதில் பயணிகள் அந்த படங்கள் திரையானதும் விழுந்து விழுந்து சிரிப்பது தெரிந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் ஹேக்கர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

இது குறித்து விமான நிலைய அதிகாரி இன்ஃப்ரேரோ காவல்துறையில் புகார் தெரிவித்திருக்கிறார்.

விமானம் வருகை குறித்த திரையில் திடீரென ஆபாச படம் !

ஆபாச வீடியோ ஒளிபரப்பாவதற்கு காரணமான தகவல் வழங்கும் சேவையானது தனியார் நிறுவனத்துக்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் தான் திரையில் வெளியான வீடியோவுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று இன்ஃப்ரேரோ கூறியுள்ளார். 

குளிக்கும் போது சிறுநீர் கழிப்பவரா நீங்கள்?

இந்த சம்பவம் நடந்த உடனே விமான தகவல் அளிக்கும் திரைகள் அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.