பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கு வருகின்றன. இதனால் கொலை, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்கின்றன.

ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்.. ஓவியா அறிவுரை !
எனினும் இந்த காலத்தில் பெண் குழந்தைகளை சரியாக உடை அணிய வேண்டும், ஆண்களிடம் பேசக் கூடாது. 

தனியாக எங்கும் செல்லக் கூடாது போன்ற அறிவுரைகள் நியாயமே இல்லாமல் வழங்கப்படுகின்றன. 

அதனை தவிர்த்து பெண் பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என நடிகை ஓவியா அறிவுறுத்தியுள்ளார்.

நாக்கு வறண்டு போனால் செய்ய வேண்டிய எளிய வைத்தியம் !

சின்ன குழந்தையை போதை பொருளாக பார்க்கும் சில ஆண்கள் மீது எந்த தவறுமே இல்லாதது போலவும் பெண்கள் தான் இந்த சம்பவத்திற்கு காரணம் போலவும் சித்தரிக்கப்படுகிறது. 

இது முற்றிலும் தவறு. சிறிய வயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் அதாவது நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

அது போல் பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தாலும் இது போன்ற அக்கிரமங்கள் நடந்து கொண்டு தான் வருகின்றன. 

ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்.. ஓவியா அறிவுரை !

அதிலும் இது போன்று சிலரின் வக்கிர புத்தியால் மாணவிகள், குழந்தைகள், பெண்கள் மன வேதனைக்குள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு முடிவு எடுக்கிறார்கள்.

இன்னும் சில குழந்தைகள் தனது அப்பாவையே எதிரியாக பார்க்கும் நிலையும் ஏற்படுகிறது. இவை மாற வேண்டும் என்றால் ஆண்களுக்கும் நல்லதை சொல்லி தர வேண்டும். 

அதாவது பெண்களிடம் ஆண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லி தர வேண்டும். 

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்தவருக்கு கிடைத்த தெரியுமா? 

பெண் குழந்தைகளை போல ஆண் குழந்தைகளுக்கும் குட் டச், பேட் டச் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்.

இதைத்தான் ஓவியா ஒரு நிகழ்ச்சியில் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார். கல்லூரி விழா ஒன்றில் நடிகை ஓவியா பேசுகையில் கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மறைக்க வேண்டாம். 

ஓபனாக எல்லாவற்றையும் பேச வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும். 

பெண் பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்.. ஓவியா அறிவுரை !

சிறுவயதிலேயே அவ்வாறு வளர்த்தால் எந்தவிதமான குற்றச் செயல்பாடுகளிலும் ஆண் பிள்ளைகள் ஈடுபட மாட்டார்கள் என ஓவியா பேசியிருந்தார். 

தாயின் பின்புறத்திலோ சகோதரியின் பின்புறத்திலோ ஆண் குழந்தைகள் விளையாட்டாக அடிக்கும் போது 

தாய்மார்கள் சிரிப்பதை விட அந்த குழந்தைக்கு இப்படி செய்யக் கூடாது என்பதை சிறிய வயதிலிருந்தே சொல்லி கொடுக்க வேண்டும்.