சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்கள், பயணிகள், பாதசாரிகள், மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் உட்பட
சாலை விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு ரொக்கமில்லா சிகிச்சை வசதியை வழங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் NHAI திட்டமிட்டுள்ளது.
பட்டர் வான்கோழி மசாலா செய்வது எப்படி?
நெடுஞ்சாலைகளில் விபத்தினால் ஏற்படும் உடல் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இதன் மூலம், விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடித் தேவைக்காக கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவலின்படி
அல்லது தேவையான சிகிச்சை அளிப்பதில் இருந்து, எது முன்னதாக நடந்தாலும், 30,000 ரூபாய் வரை வழங்கப்படும்.
புலியோடு போராடி உயிர் பிழைத்த வீரர்... அதிர வைத்த சம்பவம் !
தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் ஏல நடைமுறைகள் மற்றும் சேர்ப்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகு, இதற்கான திட்ட அமலாக்கத்திற்குப் பின்னரே திட்டத்தின் வெற்றியை மதிப்பிட முடியும்.
டெல்லி-மும்பை, மும்பை-சென்னை, சென்னை-கொல்கத்தா மற்றும் கொல்கத்தா-டெல்லி ஆகிய தங்க நாற்கர பாதையின் நான்கு பகுதிகளிலும்
ரொக்கமில்லா சிகிச்சை வசதியை அளிக்க காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவு செய்துள்ள காப்பீட்டு நிறுவனங்கள்
உரிமைகோரல் தீர்வு விகிதம் கொண்டுள்ள காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
சைவப் பிரியர்களுக்கு காக்டெயில் பிரியாணி செய்வது எப்படி?
சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் செயல்பாடுகளிலிருந்து கற்றுக் கொண்டதன் பேரில்,
இத்திட்டம் பிற தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் விரிவு படுத்தப்படலாம் என தெரிவித்துள்ளார்.