ஜோடிகளின் வீடியோக்களை பார்த்த விடுதி உரிமையாளர்... சிக்கியது எப்படி?

0

தங்கும் விடுதிகளில் ஒரு சில நேரங்களில் குற்றச் சம்பவங்கள் நடப்பது வழக்கம். ஜோடிகளின் வீடியோக்களை பார்த்த விடுதி உரிமையாளர்... சிக்கியது எப்படி?

அந்த வகையில் ஓட்டல் ஒன்றில் உரிமையாளர் ரகசிய கேமரா வைத்து அங்கு தங்கியவர்களின் நிர்வாண படங்கள் மற்றும் உடலுறவு வீடியோக்களை எடுத்துள்ளார். 

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் ஏர்பிஎன்பி என்ற பிரபல தங்கும் விடுதி இருக்கிறது. இந்த விடுதியின் உரிமையாளர் ஜெய் அலி (54). 
இவருடைய விடுதியில் சமீபத்தில் ஒரு ஜோடி தங்கியுள்ளது. அப்போது அவர்கள் இந்த விடுதிக்குள் ரகசிய கேமரா இருக்கிறதா என்பதை விளையாட்டாக தேடியுள்ளனர். 
இதற்காக அவர்கள் இணையதளத்தில் ரகசிய கேமராவை எப்படி கண்டுபிடிப்பது என்பது தொடர்பாக பார்த்துள்ளனர். 

அதை வைத்து அவர்கள் இந்த விடுதியில் சோதனை செய்துள்ளனர். அதில் இந்த அரையில் படுக்கையை  பார்த்தப்படி ஒரு ரகசிய கேமரா இருந்ததை இவர்கள் கண்டறிந்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து அவர்கள் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் அங்கு வந்து விடுதி உரிமையாளர் ஜெய் அலியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 
அப்போது அவர் முதலில் தனக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனக் கூறி வந்துள்ளார். அத்துடன் அது ஒரு வைஃபை கருவி தான் அது ரகசிய கேமரா இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 
உலகில் அதிக இளமையும் ஆயுளும் பெற்றவர்கள் !
அந்தக் கருவியை ஆய்வு செய்த காவல்துறையினர் அதற்கு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதை வைத்து ஜெயின் அலியிடம் மீண்டும் விசாரணை நடத்திய போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். 
மேலும் அவரிடம் இங்கு தங்கியிருந்த 2000 நபர்களின் உடலறுவு வீடியோ மற்றும் அரை நிர்வாண படங்களும் இருந்துள்ளதை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். 

இவர் கடந்த ஒராண்டாக தன்னுடைய விடுதியில் தங்கிய நபர்களை இந்த ரகசிய கேமரா மூலம் கண்காணித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. 
ஜோடிகளின் வீடியோக்களை ஒரு வருடமாக பார்த்த விடுதி உரிமையாளர்... சிக்கியது எப்படி?
அந்த ஆதாரங்களை வைத்து இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் மீது அங்கு இதற்கு முன்பாக தங்கியிருந்த நபர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். 

அவர்களின் புகாரையும் எடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். 
நரமாமிசம் உண்ணும் அகோரிகள் !
இந்த குற்றங்கள் உறுதியாகும் பட்சத்தில் அவருக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)