தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கணேஷ்கர். பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தியின் கணவர் இவர். இவர்கள் வளசரவாக்கத்தில் வசித்து வருகின்றனர். 

கார் விபத்தில் தப்பியோடிய நடிகை ஆர்த்தியின் கணவர்.. நடந்தது எப்படி?

நடிகர் கணேஷ்கரை பிரபல இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். 

தொடர்ந்து பல படங்களில் கதாநாயகர்களின் நண்பனாக பல படங்களில் நடித்துள்ளார். 

நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள் - எதற்காக? எங்கு நடந்தது தெரியுமா?

பின்னர், 2009ம் ஆண்டு நடிகை ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். தற்போது தம்பதிகள் இருவரும் பல படங்களில் நடித்து வருகின்றனர்.  

இந்த நிலையில், நடிகர் கணேஷ்கர் தனது காரில் நேற்று பட்டினம்பாக்கத்தில் உள்ள லூப் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கே இருந்த சாலைத்தடுப்பில் பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பக்கம் மிக கடுமையாக சேதமடைந்தது. 

கார் சாலைத்தடுப்பில் மோதியதில் பயங்கர சத்தம் ஏற்பட்டது. மேலும், கார் விபத்திற்குள்ளானதால் காருக்கு பின்னால் வந்த இரு சக்கர வாகன ஓட்டியும் தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளானார். 

கார் தடுப்பில் மோதிய சத்தம் கேட்டதால் உடனே அக்கம்பக்கத்தினர் சாலையில் கூட ஆரம்பித்தனர்.

கோழி இறகால் சிக்கிய கொலையாளி - இளம்பெண் கொலை !

இதனால், பயமடைந்த நடிகர் கணேஷ்கர் காரை அப்படியே சாலையிலே விட்டு விட்டு அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார். 

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர். பின்னர் விபத்தை ஏற்படுத்திய நடிகர் கணேஷ்கரை அருகில் உள்ள மருத்துவமனையில் தேடினர். 

ஆனால், அவர் அருகில் இருந்த எந்த மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதியாகவில்லை என்று தெரிய வந்தது.

பின்னர், இரவு முழுவதும் அந்த வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நடிகர் கணேஷை போலீசார் தேடினர். 

கார் விபத்தில் தப்பியோடிய நடிகை ஆர்த்தியின் கணவர்.. நடந்தது எப்படி?

ஆனால், அவர் எந்த மருத்துவமனையிலும் அனுமதியாகவில்லை என்று தெரிய வந்தது. வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். 

ஆனால், நடிகர் கணேஷ் வீட்டிற்கு வரவில்லை என்று அவரது மனைவி ஆர்த்தி போலீசாரிடம் கூறியுள்ளார்.

பாலியல் தொழிலில் இருந்து இல்லத்தரசியான பெண்ணின் நிஜக்கதை !

நடிகர் கணேஷ்கரை பிடித்த பிறகு தான் அவர் மது போதையில் சென்று காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினாரா? அல்லது அதிவேகமாக சென்று காரை விபத்திற்குள்ளாக்கினாரா? என்பது தெரிய வரும். 

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் கணேஷ்கரை தேடி வருகின்றனர்.