52 வயதான ஷேன் வார்னே எப்போதுமே நல்ல ஃபிட்னஸுடன் இருந்ததில்லை. திடீரென ஸ்லிம் ஆவார். ஆனால், பல மாதங்களுக்குப் பருமனான உடல் வாகுடன் இருப்பார்.

ஷேன் வார்னே திடீரென்று உயிரிழந்தது எப்படி?

அவர் கிரிக்கெட் உலகில் பீக்கில் இருந்த போதும் கூட பெரும்பாலும் ஸ்லிம்மாக இருந்ததில்லை. அதே சமயம், விளையாடுவதற்கு ஏற்ற வகையில் தனது உடலைப் பார்த்துக் கொள்வார்.

இந்த நிலையில் சமீப காலமாக அவரது உடல் எடை அதிகரித்து விட்டது. இதையடுத்து எடையைக் குறைக்கும் முயற்சிகளில் அவர் குதித்தார். 

இதே அவரே ஒரு டிவீட்டில் சமீபத்தில் சொல்லியிருந்தார். மேலும், தாய்லாந்தில் அவர் முகாமிட்டிருந்ததும் கூட எடைக் குறைப்பு முயற்சிக்காகவே என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வார்னே போட்டிருந்த ட்வீட்டில், Operation shred ஆரம்பித்து விட்டது. பத்து நாட்களாகி விட்டது. உடல் எடையைக் குறைக்கப் போகிறேன். 

ஜூலை மாதத்திற்குள் இந்தப் படத்தில் இருப்பது போன்ற பழைய தோற்றத்துக்கு மாறி விடுவேன் எனக் கூறியிருந்தார் வார்னே. 

வேலையில் சேரும் போதே வெற்றிக்கு உத்தரவாதம்... சம்பளத்தில் ஒரு மேஜிக் !

இந்நிலையில் அவர் திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இதற்கு காரணம், இவர் அதிகப்படியான உடற்பயிற்சி செய்தது தான் என கூறப்பட்டது.

இந்நிலையில் வார்னே அதிகளவில் உடற்பயிற்சி செய்ததால் உயிரிழக்கவில்லை என்றும், 

அவரது கிரிக்கெட் ஆசான் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ராட் மார்ஷ் உயிரிழந்த துக்கத்தில் வார்னே அதிக அளவிலான தடை செய்யப்பட்ட 

ஷேன் வார்னே திடீரென்று உயிரிழந்தது எப்படி?

போதை வஸ்துவை உட்கொண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்து இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்தால்? உபயோகமான தகவல்கள் !

இந்த நிலையில், ஷேன் வார்னேவுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியாவின் தலை சிறந்த மனிதர்களில் வார்னேவும் ஒருவர் என்று புகழாரம் சூட்டினார். 

அவருடைய இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.