இரைப்பையில் அமில மழைக்கு என்ன காரணம்?

0

காரம் / மசாலா / புளிப்பு சாப்பிட்டால், எண்ணெயில் குளித்த பண்டங்களைச் சாப்பிட்டால், புகை பிடித்தால், மது குடித்தால் இரைப்பையில் அமிலம் கொட்டும். 

இரைப்பையில் அமில மழைக்கு என்ன காரணம்?
இன்னொரு முக்கியக் காரணம், மனசு! மனப் பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம் அமில மழை பொழியும்! 

ஆக, Hurry, Worry, Curry இந்த மூன்றும் தான் அல்சருக்கு அழைப்பிதழ் அனுப்பும் முக்கியமான தீயசக்திகள்!

இரைப்பைக்கு அடுத்த எதிரி, மாத்திரைகள். முக்கியமாக மூட்டுவலி மாத்திரைகளையும் ஸ்டீராய்டு மாத்திரைகளையும் அளவுக்கு மீறி சாப்பிட்டால், இரைப்பைச் சுவர் பலவீனமாகி, விரிசல் விழும். 

விபரீத செயலியால் சிக்கிய தோழிகள்... பீம்ராவ் வில்லங்கம்... அரங்கேறும் விபரீதம் !

அதில் அமிலம் பட்டு புண்ணாகி விடும். இரைப்பைச் சுவர் பலவீனமாவதற்கு இன்னொரு காரணம், ஹெலிக்காப்டர் பைலோரி (Helicobacter pylori) எனும் கிருமி. 

இது அசுத்த தண்ணீர் மற்றும் உணவு மூலம் இரைப்பைக்கு வந்து இரைப்பைச் சுவரில் ஒட்டிக் கொள்ளும்.

நெருப்பு மாதிரியான அமிலம் சுரந்து வரும் போது இது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இரைப்பைச் சுவரைத் துளைத்துக் கொண்டு பதுங்கி விடும்.

இது நீண்ட நாள் தங்கி விட்டால் இரைப்பையில் புற்றுநோயும் வந்துவிடும். புகையிலை, பான் மசாலா, கோலா, காபி, டீ ஆகியவை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும். 

அல்சரின் ஆரம்பத்தில் நெஞ்சுப் பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும். அடிக்கடி புளித்த ஏப்பம் வரும். பசி இருக்காது. கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய மாதிரி இருக்கும். 

இரைப்பையில் அமில மழைக்கு என்ன காரணம்?
சில நேரம் நெஞ்சில் பந்து வந்து அடைப்பது போலிருக்கும். இது ஏப்பம் விட்டதும் சரியாகும். அடுத்து வயிற்று வலியும்  வாந்தியும் வரும். 

கேஸ்ட்ரிக் அல்சராக இருந்தால் பசிக்கிற நேரத்தில் வலி வயிற்றைக் கவ்விப் பிடிக்கும். சாப்பிட்டதும் வலி அதிகமாகும்.

டியோடினல் அல்சராக இருந்தால் சாப்பிட்டதும் வயிற்று வலி குறையும். கவனிக்காத போது, அல்சர் வடுவாக மாறி, அடைப்பு ஏற்படலாம் அல்லது இரைப்பையில் துளை விழுந்து நோயாளியின் நிலைமை மோசமாகலாம். 

இந்த இரண்டுக்கும் சர்ஜரி தான் கைகொடுக்கும். இரைப்பையில் இருப்பது புண்தானா என்பதை உறுதி செய்ய இரைப்பை எண்டோஸ்கோப்பி (Gastro endoscopy) உதவுகிறது. 

ஒரு ரப்பர் போன்ற குழாயை வாய் வழியாக உணவுப் பாதையில் செலுத்தி, எண்டோஸ்கோப் கருவி மூலம் பார்த்தால், புண் எங்கே, எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று தெரிந்து விடும். 

டிக் டாக் பிரபலத்தின் ஆடையை கிழித்து அந்தரத்தில் வீசி கொடுமை !

புண்ணின் சிறு பகுதியைக் கிள்ளியெடுத்து பயாப்சி செய்தால் ஹெச். பைலோரி பாதிப்பா, புற்றுநோய் பாதிப்பா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

முன்பெல்லாம் அல்சருக்கு சர்ஜரி தான் ஒரே தீர்வாக இருந்தது. இப்போது ஆன்டிபயாட்டிக், அமிலத்தடை ஊசி, மாத்திரைகள் எனப் பல சிகிச்சை முறைகள் வந்து விட்டன. 

இவை அமிலம் சுரக்கும் நதி மூலத்தையே மூடிவிடும். இதன் பலனால் அல்சரை ஒரு மாதத்தில் முழுமையாகக் குணப்படுத்தி விடலாம். 

எத்தனை சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், மது, சிகரெட் போன்ற பழக்கம் இருந்தால், இரைப்பைக்கு இதமாக நடந்து கொள்ளவில்லை என்றால், எந்த மருந்தும் கேட்காது!

இரைப்பை இதமாக இருக்க...!

இரைப்பையில் அமில மழைக்கு என்ன காரணம்?

நேரத்துக்குச் சாப்பிடுங்கள். முக்கால் வயிறு சாப்பிட்டால் போதும்.

அதிக சூடாக சாப்பிடாதீர்கள்.

காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதை விட சீரான இடைவெளியில் பிரித்துச் சாப்பிடுங்கள்.

காற்றடைத்த பானம்/ மென்பானம் அடிக்கடி வேண்டாம்.

ஆவியில் அவித்த உணவு நல்லது.

அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு.

உலகில் 256 ஆண்டு காலம் உயிர் வாழ்ந்த மனிதர் யார்? தெரியுமா?

உணவு சாப்பிட்டதும் வயிற்றின் மேல் அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க, ஆடைகள், பெல்ட் போன்றவை இறுக்கமாக இருந்தால், தளர்த்திக் கொள்ளவும். 

சாப்பிட்ட உடனே குனிந்து வேலை செய்யக் கூடாது; கனமான பொருளைத் தூக்கக்கூடாது; உடற்பயிற்சி செய்யக்கூடாது.

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது.

சாப்பிட்டு மூன்று மணி நேரத்துக்குள் நொறுக்குத் தீனிகள் வேண்டாம்.

அசைவ உணவு சாப்பிட்டதும் குளிர் பானங்கள், கோலா பானங்கள் மற்றும் ஜூஸ் குடிப்பதைத் தவிர்க்கவும்.

காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்.

இரவில் எளிதாக செரிக்கக்கூடிய உணவைச் சாப்பிடுங்கள்.

சமைத்த உணவையும் சமைக்காத உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டாம்.

சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து படுக்கச் செல்லுங்கள்.

புகை, மது, பான் வேண்டாம்.

தியானம், யோகாசனம் பழகி மன அமைதிக்கு வழி தேடுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)