பூமிக்கு பக்கத்துல இப்படி ஒரு கோள் இருக்குன்னு தெரிஞ்சா தலை சுத்தி போயிருவீங்க !

0

கணக்கில் அடங்காத மதிப்புள்ள தங்கம் இருக்கும் சிறுகோள் குறித்து நாசா ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

பூமிக்கு பக்கத்துல இப்படி ஒரு கோள் இருக்குன்னு தெரிஞ்சா தலை சுத்தி போயிருவீங்க !

சூரியக் குடும்பத்தில் தங்கம், இரும்பு உள்ளிட்ட உலோகங்கள் நிறைந்திருக்கும் கோல்டுமைன் ஆஸ்டிராய்டு (Goldmine asteroid) என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 1852 மார்ச் 17-ம் தேதி இத்தாலிய வானியலாளர்கள் இந்த சிறுகோளை கண்டுபிடித்தனர். இதற்கு கிரேக்க கடவுளின் பெயரான சைக்கி (Psyche) எனப் பெயரிட்டனர். 

ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்த.. ஸ்டீவ் ஜாப்ஸ் !

124 மைல் அகலமுள்ள இந்த சிறுகோள் பூமியில் இருந்து சுமார் 200 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது.

இந்த சிறுகோளில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டும் சுமார் 10,000 குவாட்ரில்லியனுக்கு (Quadrillions) மேல் இருக்கும் என நாசா கணித்துள்ளது. 

ஒரு குவாட்ரில்லியன் என்றால் 1-ஐ தொடர்ந்து அதன் பின்னால் 15 பூஜ்ஜியங்களைத் சேர்த்தால் கிடைக்கும் ஒரு மாபெரும் தொகை. அப்படி இருக்கையில் 10,000 குவாட்ரில்லியன் என்றால் அதன் மதிப்பை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நாசாவைப் பொறுத்த வரை இந்த சிறுகோளில் தங்கம் மட்டுமல்லாமல் இரும்பு உள்ளிட்ட உலோகங்களும் நிறைந்திருக்கும் என கணித்துள்ளது. 

அதன்படி, உலோகங்கள் நிறைந்திருக்கும் சிறுகோள்கள் வரிசையில் இந்தக் கோளை நாசா வகைப்படுத்தி யுள்ளது. வரும் 2026-ம் ஆண்டுக்குள் அந்த கோளின் தோற்றத்தைக் கண்டுபிடிக்கவும் நாசா ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

காய்கறி வித் இறால் சூப் செய்வது எப்படி?

அதன்படி முதல் கட்டமாக சிறுகோளில் வெப்ப நிலையை கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டத்துக்கு இந்தியாவைச் சேர்ந்த கல்யாணி சுகத்மே மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மும்பையில் பிறந்து வளர்ந்த அவர், இயற்பியல் மற்றும் பொறியலில் இளங்கலை பட்டத்தை நிறைவு செய்தார். தற்போது அமெரிக்காவின் நாசாவில் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings