வீட்டுக்கு வீடு வாசப்படி என்று சொல்வதற்குப் பதிலாக இனி, வீட்டுக்கு வீடு ஒரு நீரிழிவு நோயாளி என்று சொல்லலாம். 

லோ சுகர் உள்ளவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?
அந்த அளவுக்கு உலகில் நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. 

வதக்கு சட்னி அல்லது கதம்ப சட்னி செய்வது எப்படி?

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஏழு கோடிப் பேருக்கு நீரிழிவு உள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள்.

இது குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லா வயதினரையும் பாதிக்கிற நோயாகவும் உள்ளது. 

இந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்து வருபவர்கள், அவ்வப்போது சந்திக்கிற பிரச்சினைகளில் முக்கியமானது, சர்க்கரை அளவு குறைபாடு மயக்கம் (Hypoglycaemic Coma). 

இன்சுலினை மட்டுமே நம்பியுள்ள டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு ஒரு முறையாவது சர்க்கரை அளவு குறைபாடு ஏற்பட்டு விடுகிறது.

சர்க்கரை நோயாளிகளில் இரண்டு வகையான நபர்கள் உள்ளனர். 

அதிகமான அளவு இரத்தத்தில் சர்க்கரை இருப்பது போலவே சிலருக்கு இரத்தத்தில் குறைவான அளவில் சர்க்கரை உள்ளது. 

நபருக்கு நபர் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மாறுபடுவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. 

செட்டிநாடு மிளகாய் சட்னி செய்வது எப்படி?

இரத்தத்தில் சர்க்கரை அளவானது 70 எம்.ஜி/டி.எல் அளவிற்குக் குறைவாக இருக்கும் போது அதனால் இரத்த சர்க்கரை அளவு குறைபாடு ஏற்படுகிறது. 

இரத்த சர்க்கரை அளவு குறையும் போது என்ன செய்யலாம் என இப்போது பார்க்கலாம்.

​இரத்த சர்க்கரை

லோ சுகர் உள்ளவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?

டைப் 1 மற்றும் மற்றும் டைப் 2 என்பவை பொதுவான நீரிழிவு நோய்களாக உள்ளன. 

இந்த பிரச்சனை உள்ளவர்கள் பொதுவான மருந்துகள், இன்சுலின் மருந்துகள் போன்றவற்றை எடுத்துக் கொள்கின்றனர். 

ஒயிட் சென்னா ரோஸ்ட் செய்வது எப்படி?

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றம் குறித்த இதழில் வெளியான ஒரு ஆய்வில் டைப் 1 மற்றும் 

டைப் 2 நீரிழிவு நோயாளிகளிடையே இரத்த சர்க்கரை அளவானது கணக்கிடப்பட்டது.

அதில் டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் சுமார் 50 சதவீதம் பேர் குறைந்தது ஒரு முறையாவது சர்க்கரை அளவு அதிகமாகக் குறைந்து காணப்பட்டனர்.

​இரத்த சர்க்கரை குறைவு

லோ சுகர் உள்ளவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?

உடலில் இரத்த சர்க்கரை குறைவாக இருப்பது என்பது அதிகமாக இரத்த சர்க்கரையை விட மோசமான பிரச்சனையாகும். 

ஏனெனில் இது அட்ரினலின், கார்டிசோல் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 

சுவையான பாதாம் பிஸ்தா அல்வா செய்வது எப்படி?

இதனால் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் ஆகியவை அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த பாதிப்பானது ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்தலாம். 

உடலில் கடுமையான அளவில் இரத்த சர்க்கரை குறையும் போது அது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

​அறிகுறிகள்

லோ சுகர் உள்ளவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது அதைப் பல வகையான அறிகுறிகள் மூலம் நம்மால் அறிய முடியும். அவை

நடுக்கம், மயக்கம், வியர்வை, பசி, அதிக இதயத் துடிப்பு, கவனம் செலுத்துவதில் பிரச்சனை, குழப்பம், எரிச்சலான மனநிலை, பதட்டம் மற்றும் தலைவலி.

சுவையான கிறிஸ்மஸ் பிளம் கேக் செய்வது எப்படி?

கடுமையான அளவில் இரத்தத்தில் சர்க்கரை குறையும் போது அதனால் வலிப்பு அல்லது உணர்விழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 

எனவே இப்படியான அறிகுறிகளை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில் உடனடியாக மருத்துவரிடம் இது குறித்து ஆலோசனை பெறுவது நல்லது.

​இரத்த சர்க்கரை குறைவதற்கான காரணங்கள்

லோ சுகர் உள்ளவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?

சில சமயங்களில் நீரிழிவு மேல் உள்ள பயத்தின் காரணமாக இன்சுலின் மற்றும் நீரிழிவு மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல்.

உணவு மற்றும் சிற்றுண்டிகளை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது அல்லது தவிர்ப்பது.

பிளம்ஸ் பழங்களை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

போதுமான அளவில் உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது.

சரியாக நீரிழிவு மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் அதிக உடற்பயிற்சி செய்தல்

அதிகமாக மது அருந்துதல். இவையாவும் உடலில் இரத்த சர்க்கரை குறைவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.