ஆண்கள் உண்ட இலையை பெண்கள் எடுக்கும் அசைவ உணவுத் திருவிழா !

0

ஆண்கள் மட்டுமே பங்கு பெறும் அசைவ உணவுத் திருவிழா மதுரையில் வெகு விமர்சையாக நடந்தது. 

ஆன்கள் உண்ட இலையை பெண்கள் எடுக்கும் அசைவ உணவுத் திருவிழா !
சுமார் 7 ஆயிரம் ஆண்கள் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மதுரை திருமங்கலம் அருகே அமைந்துள்ள கிராமம் அனுப்பபட்டி. 

இந்த கிராமத்தில் ஆண்டு தோறும் காவல் தெய்வமான கருப்பையா முத்தையா சாமி திருக்கோயிலில் மார்கழி திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

அந்த மார்கழி திருவிழாவின் ஒரு நாளில் ஊரே சாப்பிடும்படி அசைவ கறி விருந்தும் விழாவும் நடைபெறும். 

இந்த கறி விருந்து விழாவில் என்ன விசேஷம் என்றால் இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று சாப்பிட முடியும். 

அனுப்பபட்டியைச் சுற்றி உள்ள சுமார் 10 கிராமங்களில் இருந்து ஆண்கள் வந்து இந்த கறி விருந்தில் பங்கேற்றுச் செல்வார்கள்.

இந்த ஆண்டு இந்த அசைவ கறி விருந்து விழா நேற்று புத்தாண்டு தினத்தில் நடைபெற்றது. 

ஆன்கள் உண்ட இலையை பெண்கள் எடுக்கும் அசைவ உணவுத் திருவிழா !

அனுப்பபட்டியைச் சுற்றி அமைந்துள்ள கரடிக்கல், செக்கானூரணி, மேல உரப்பனூர் என 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஆண்கள் பங்கேற்றனர். 

கருப்பையா முத்தையா சாமிக்கு நேர்த்திக்கடன் படைத்த பின்னர் விருந்து பரிமாறப்பட்டது.

வெங்காயம் உடலில் ஏற்படுத்தும் நன்மைகள் !

சுமார் 60 ஆடுகள் கருப்பையா முத்தையா கோயிலில் நேர்த்திக் கடனாக வெட்டப்பட்டு அசைவ விருந்து தயார் செய்யப்பட்டது. 

இந்த விருந்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பது ஆண்டாண்டு காலமாக நீடித்து வரும் ஒரு வழக்கமாக இருக்கிறது. 

இந்த விருந்தை சாப்பிட்டு முடித்த பின்னர் ஆண்கள் யாரும் தாங்கள் சாப்பிட்ட இலையை எடுக்கக்கூடாது.

ஆன்கள் உண்ட இலையை பெண்கள் எடுக்கும் அசைவ உணவுத் திருவிழா !

சாப்பிட்டு முடித்து திருவிழா முடிந்த பின்னரும் இலையை யாரும் அப்புறப்படுத்த மாட்டார்கள். 

அந்த சாப்பாட்டு இலைகள் அனைத்தும் காய்ந்த பின்னர் அந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து காய்ந்த இலைகள் அப்புறப்படுத்துவர். 

கெளுத்தி மீனின் மருத்துவ பயன்கள் !

இது தான் அந்த ஊரின் வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த சுற்று வட்டார கிராமத்தினரையும் தாண்டி பலரும் இந்த விநோத திருவிழாவில் பங்கேற்க விரும்பி வருவதும் உண்டு.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)