ஆபத்தான நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு ! #CKD

0

சிறுநீரகத்துக்கு ஏற்படும் சிக்கல்களில் சிறுநீரகச் செயலிழப்பு ஆபத்தானது. இதில் உடனடி செயலிழப்பு, நாள்பட்ட செயலிழப்பு என இரண்டு விதம் உண்டு. 

ஆபத்தான நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு !

முதல் ரகமானது கமாண்டோக்கள் போல் திடீரெனத் தாக்கி, சிறுநீரகத்தை நிலை குலையச் செய்யும். இரண்டாம் ரகம் தரைப்படை போல் கொஞ்சம் கொஞ்சமாகத் தாக்கி, சிறு நீரகத்துக்குச் சிக்கலை உண்டாக்கும். 

முதல் ரகத்தை ஆரம்பத்திலேயே கவனித்தால், 100 சதவீதம் குணப்படுத்தி விடலாம். ஆனால், இரண்டாம் ரகம் வேறு மாதிரி. துப்பிய எச்சிலை விழுங்க முடியாத மாதிரி, பாதிக்கப்பட்ட சிறு நீரகத்தைச் சரி செய்ய முடியாது. அடுத்தடுத்து சிக்கல் வராமல் தடுக்கவே முடியும்.

நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு (CKD) ஏற்பட்டு விட்டால் டயாலிஸிஸ் அவசியமா? 

உடனடி சிறுநீரகச் செயலிழப்பு

ஆபத்தான நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு (CKD) !

உடனடி சிறுநீரகச் செயலிழப்பு (Acute renal failure) பல வழிகளில் வருகிறது. அவற்றை மூன்று விதமாகப் பிரிக்கிறது மருத்துவம். முதல் வழியானது ஓர் நாட்டுக்கு எதிராக அண்டை நாடுகள் படை எடுப்பதற்கு ஒப்பானது. 

சிறுநீரகத்துக்கு வருகிற ரத்தம் குறைவது தான் இதற்கு அடிப்படைக் காரணம். விபத்தின் போது, அறுவை சிகிச்சை நடக்கும் போது, பிரசவத்தின் போது, கருக்கலைப்பு செய்கிற போது ரத்த இழப்பு ஏற்படலாம். 

செயற்கைச் சிறுநீரகம்... தெரியுமா? உங்களுக்கு !

அதை உடனடியாகக் கவனித்துச் சரி செய்யா விட்டால், சிறுநீரகம் செயலிழக்கும். ரத்த வாந்தி/ரத்தப் போக்கு ஏற்பட்டாலும் இதே நிலைமை தான். 

அடுத்து, சிறு நீரகத்துக்கு ஒவ்வாத வலி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், மூலிகைகள், பஸ்பங்கள், தூக்க மாத்திரைகள், போதை மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவரின் பரிந்துரை யின்றிச் சாப்பிடும் போது சிறுநீரகம் செயலிழக்கிறது. 

உடலில் எங்காவது கடுமையான நோய்த்தொற்று இருந்து, அதைக் கவனிக்காம லிருந்தால், அது ரத்தத்தில் கலந்து செப்டிசீமியா வை உருவாக்கும். 

அப்போதும் சிறுநீரகம் செயலிழக்கும். இவை தவிர விஷக்கடிகளின் போது, துத்தம் போன்ற விஷங்களைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயலும் போது, தீ விபத்தின் போது எனச் சிறுநீரகச் செயலிழப்புக்குப் பெரிய காரணப் பட்டியல் இருக்கிறது. 

இரண்டாம் வழி, உள்நாட்டுக் கலகம் போன்றது. இதில் சிறு நீரகத்திலேயே கோளாறு இருக்கும். முக்கியமாக, நெப்ரைடிஸ் (Nephritis) எனும் சிறுநீரக அழற்சி நோய், காசநோய், 

நெப்ராடிக் சின்ட்ரோம், குறை ரத்த அழுத்தம், எலிக் காய்ச்சல் போன்றவை சிறு நீரகத்துக்குள் புகுந்து கலாட்டா செய்யும் போது சிறுநீரகம் செயலிழந்து விடும்.

மூன்றாம் வழி, பக்கத்து மாநிலம் அருகிலுள்ள மாநிலத்துக்குத் தண்ணீரோ மின்சாரமோ தராமல் கஷ்டப்பட வைப்பதற்குச் சமமானது. 

சிறுநீர்ப் பாதையில் உருவாகிற கல், புராஸ்டேட் வீக்கம் அல்லது புற்றுநோய், சிறுநீர்த் துவாரம் அடைப்பு, பிறவிக் கோளாறு போன்றவை இதற்குச் சில உதாரணங்கள்.

நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பின் (CKD)அறிகுறிகள் என்ன?

இந்த நோயை எப்படித் தெரிந்து கொள்வது?

ஆபத்தான நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு !

வழக்கத்தை விடச் சிறுநீர் குறைவாகப் போவது, திடீரெனச் சிறுநீர் கொஞ்சம் கூடப் போகாமல் ஸ்டிரைக் செய்வது, சிறுநீரில் ரத்தம் போவது, 

விக்கல் ஏற்படுவது, மூச்சுத் திணறுவது, திடீரென உடல் வீங்குவது என பல தொல்லைகள் தோன்றி உடனடி சிறுநீரகச் செயலிழப்பை அடையாளம் காட்டும். 

உடனடியாக மருத்துவரை அணுகி ரத்த அணுக்கள் பரிசோதனை, யூரியா, கிரியேட்டினின், ஜிஎஃப்ஆர் உள்ளிட்ட சிறுநீர், பொதுவான ரத்தப் பரிசோதனை களைச் செய்தும், வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி/எம்ஆர்ஐ, டாப்ளர் ஸ்கேன் எடுத்தும்.

சிறுநீரகப் பாதிப்பை அறிந்து, மருத்துவ சிகிச்சையில் இதைக் குணப்படுத்தி விடலாம். காலம் தாழ்த்தினால் மட்டுமே டயாலிஸிஸ் சிகிச்சை தேவைப்படும்.

நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பின் (CKD)அறிகுறிகள் என்ன? 

நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு சிகேடி (Chronic kidney disease-CKD) எனப்படும் நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு தான் ஆபத்தானது. 

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்தத் தவறினால், இவ்வகைச் சிறுநீரகச் செயலிழப்பைச் சந்திக்க வேண்டி வரும். 

ஆபத்தான நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு (CKD) !

நோய் ஆரம்பித்துப் பல மாதங்கள் ஆன பின்னரும் அறிகுறி எதுவும் தெரியாமல் உடலுக்குள் உலா வருவது இதன் மோசமான குணம். 

நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு (CKD) ஏற்பட்டு விட்டால் டயாலிஸிஸ் அவசியமா? 

சிகேடியின் தொடக்க நிலையில் இருக்கிறவர் களுக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்தாலும், மற்றொரு சிறுநீரகம் வேலை செய்வதால், சிறுநீர் பிரிவதில் குறை இருக்காது. 

ஆகவே, தங்களுக்கு நோய் இருப்பதை நம்ப மறுத்து, சிகிச்சைக்கு வராமல், நிரந்தரச் சிறுநீரகச் செயலிழப்பை வரவழைத்துக் கொள்கின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings