கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கருணைத்தொகை பெறுவது எப்படி?
இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னதாக தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 

ஓட்டல்களில் உணவு ருசியாக இருக்க காரணம் !

உச்சநீதிமன்ற உத்தரவுபடி தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடதக்கது.

கருணைத்தொகை பெறுவது எப்படி?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கருணைத்தொகை பெறுவது எப்படி?

கிராமப் புறங்களில் இருப்பவர்கள், தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 

அல்லது, தமிழக அரசு இணையதளப் பக்கத்துக்குச் சென்று அதில் தரப்பட்டுள்ள விண்ணப்பித்தில் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். 

உணவு வீணாவதை எவ்வாறெல்லாம் தவிர்க்கலாம்?

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் படிவம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பார்வைக்குச் செல்லும். 

அவர் விசாரணை செய்து வட்டாட்சியருக்குப் பரிந்துரைப்பார். வட்டாட்சியர் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்குப் பரிந்துரைப்பார். 

உரிய ஆய்வுக்குப் பிறகு நிவாரணத் தொகை வழங்கப்படும்.

இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் முறை

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கருணைத்தொகை பெறுவது எப்படி?

முதலில் தமிழக அரசு இணைய தளத்திற்கு செல்ல வேண்டும். அரசின் இணையப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

இணையப் பக்கத்தில் வலது புறத்தில் Whats New என்ற பகுதி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

அந்தப் பகுதியில் Ex-Gratia for Covid 19 என்ற வாசகம் ஓடிக் கொண்டிருக்கும். 

தயிருடன் சில உணவுகளை உண்ணக்கூடாது ஏன்?

அதனைக் கிளிக் செய்தால், நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பப் பக்கத்திற்குச் செல்லலாம்.

உரிமை கோரியவரின் விவரங்கள், இறந்தவர்களின் அடிப்படை விவரங்கள், சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்கள், 

இறந்தவரின் நிரந்தர முகவரி, தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி, சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனையின் முகவரி, 

இறந்த மருத்துவமனையின் முகவரி ஆகியவற்றை இந்த விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கருணைத்தொகை பெறுவது எப்படி?

இறந்தவரின் இறப்புச் சான்றிதழ்

Covid -19 மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழ்

படிவம் 4 / படிவம் 4A

நிதியுதவி பெறும் வாரிசுதாரர்களின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் / கோடிட்ட வங்கிக் காசோலை

விண்ணப்பப் பக்கம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கருணைத்தொகை பெறுவது எப்படி?

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார் என்று சான்றிதழ் வாங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டாலும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் முறையிடலாம். 
ஆரோக்கியமற்ற உணவுகள் யாவை?

கூடுதல் மாவட்ட ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி, மருத்துவக் கல்லூரியின் துறைத் தலைவர் (மருத்துவக் கல்லூரி இருக்கும் மாவட்டத்தில் மட்டும்) 

ஒரு துறை சார் நிபுணர் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளார்கள். 

விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் இந்தக் கருணைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.

இது குறித்து இந்தக் கருணைத் தொகை வழங்கும் பணிகளை ஒருங்கிணைக்கும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தரப்பில் பேசினோம். 

தைராய்டு... தவிர்க்க வேண்டிய உணவும் சேர்க்க வேண்டிய உணவும் !

நம் கேள்விகளுக்குப் பதிலளித்த துணை ஆணையர் ஒருவர், இதுவரை 30,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

கருணைத் தொகை வழங்கும் பணி தொடங்கி விட்டது. மாவட்ட அளவில் குழுவினர் பரிந்துரைக்கும் அனைவருக்கும் நிவாரணத் தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்றார்.