விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்கும் இ-சிகரெட் !

0

விறைப்பு குறைபாடு அல்லது விறைப்பு செயலிழப்பு என்பது உறுதியான ஆண்குறியை சரியாக பராமரிக்காத காரணத்தால் உடலுறவு கொள்ள முடியாத நிலை ஆகும். 

விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்கும் இ-சிகரெட் !
சமீபத்திய ஆய்வு ஒன்று இ-சிக்ரெட் பழக்கம் கொண்டிருக்கும் ஆண்களுக்கு இந்த பழக்கம் இல்லாதவர்களை காட்டிலும் இரண்டு மடங்கு குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக கண்டறிந்துள்ளது. 

இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சிகரெட்டை விட இரண்டு மடங்கு ஆபத்தானதா இ-சிகரெட்

விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்கும் இ-சிகரெட் !

புகைப்பிடிக்கும் போது சிகரெட்டில் இருக்கும் நிகோடின் உள்ளே சென்று அட்ரீனலின் என்னும் ஹார்மோனை தூண்டி மூளையில் டோபமைன் என்னும் ரசாயனத்தை சுரக்க செய்கிறது. 

இது தான் இன்பத்தை அளிக்கிறது. சிகரெட்டில் நிகோடினுடன் வேறு பல ரசாயனங்களும் இருப்பதால் இதய நோய், புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு உண்டாகின்றன.

இ-சிகரெட் நிகோடின் மட்டுமே கொண்டிருந்தாலும் இதை ஆவியாக்க சேர்க்கப்பட்டும் இரசாயனங்கள் சிகரெட் போன்று உடலில் பல பாதிப்புகளை உண்டாக்கும். 

சிகரெட் போன்று தீர்ந்ததும் தூக்கி எறிய வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து புகைக்கலாம்.

இதில் பல்வேறு ஃப்ளேவர்கள் தயாரிப்பில் 300 ரூபாய் முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. சாம்பல் வராது, புகை வராது, 

புகைப் பழக்கத்திலிருந்து விடுபட முடியும் என்று சொன்னாலும் இந்த பழக்கம் அவர்களை விடமால் பற்றி கொள்ளவே செய்யும் என்று சொல்லலாம்.

​இ-சிகரெட் விறைப்புத்தன்மை குறைபாடு தொடர்பு

விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்கும் இ-சிகரெட் !

இ- சிகரெட்டை பயன்படுத்தும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாட்டால் பாதிக்கப் படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகரிப்பதாக ஆய்வு தெரிவிக்கீறது. 

சமீபத்திய ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் ஓமர் எல்ஷாஹவில் முந்தைய புகைபிடித்த வரலாற்றை கொண்டாலும் 

இ-சிகரெட் விட விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்.

அமெரிக்காவில் நடைபெற்ற ஆராய்ச்சியில் 20 வயதுக்கு மேற்பட்ட 14 ஆயிரம் ஆண்களை ஆய்வு செய்வதில் புகைப் பிடிக்காதவர்களை விட 

இந்த இ-சிகரெட் சாதனங்களை பயன்படுத்துபவருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் வாய்ப்பு 2. 4 மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. 

இது நிருபிக்கப்படவில்லை என்றாலும் இந்த திரவத்தில் இருக்கும். அதிக அளவு நிகோடின் இரத்த நாளங்கள் 

விரிவடையும் திறனை தடுப்பதால் ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை குறைப்பதாக நம்புகிறார்கள். 

நிகோடின் அல்லாத திரவங்களில் கூட உடலில் டெஸ்டோஸ்ட்ரான் அளவை குறைக்கும் இரசாயனங்கள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். 

விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்கும் இ-சிகரெட் !

இவர்கள் விறைப்புத்தன்மையை பெறுவதில் அல்லது பராமரிப்பதில் இரண்டு மடங்கு பிரச்சனையை எதிர் கொள்ளலாம்.

இ- சிகரெட் பழக்கம் கொண்டிருப்பவர்கள் வழக்கமான புகைப்பழக்கம் கொண்டிருப்பவர்களை விட அதிகமாக 

அல்லது குறைவாக கொண்டிருக்கிறார்களா என்பதை ஆய்வில் குறிப்பிடவில்லை. 

இ-சிகரெட் விறைப்புத்தன்மையின் மீது வேறுபட்ட தாக்கத்தை உண்டாக்குகிறதா என்பதை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings