நம்ம கை கால்கள்ல நரம்பு அசிங்கமா தெரியுதா? ஜாக்கிரதையா இருங்க !

சிலருக்கு கைகள் மற்றும் கால்களில் நரம்புகள் நன்கு புடைத்துக் கொண்டு தெரியும். இதனால் கைகள் வயதானவர்கள் போன்று அசிங்கமாக காட்சியளிக்கும். 

நம்ம கை கால்கள்ல நரம்பு அசிங்கமா தெரியுதா? ஜாக்கிரதையா இருங்க !

பொதுவாக வயதாகும் போது தான் இம்மாதிரியான தோற்றம் இருக்கும். ஆனால் சிலருக்கு இளமையிலேயே கை, கால்களில் நரம்புகள் தெரிந்தால், அதற்கு வேறு என்ன வெல்லாம் காரணமாக இருக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். 

அதற்கு பின்னணியில் சில காரணங்கள் உள்ளன.அதைப் பார்ப்போம் வாருங்கள்.

உடற்பயிற்சி

நம்ம கை கால்கள்ல நரம்பு அசிங்கமா தெரியுதா? ஜாக்கிரதையா இருங்க !

உடற்பயிற்சி அழகையும், உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ளவும் சிறப்பான வழி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக உடற்பயிற்சி கைகளில் சில கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். 

வலிமைப் பயிற்சிகளை செய்வதால் தமனிகளில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்த பயிற்சிகள் தசைகள் கடினமாவதற்கும், நரம்புகளை தோலின் மேற்பரப்பில் தள்ளுவதற்கும் காரணமாகிறது. 

ஆண்கள் வயதுக்கு வரும் அறிகுறி என்ன? எப்படி தெரிந்து கொள்வது?

இதனால் கைகள் மற்றும் கால்களில் நரம்புகள் புடைத்து தெரிகிறது. இதற்காக கவலைப்பட வேண்டாம். எப்போது கவலை கொள்ள வேண்டுமெனில், நரம்புகளில் வலி அல்லது கடுமையாக வீங்கி இருந்தால் உடன மருத்துவரை அணுக வேண்டும்.

பராமரிப்பு இல்லாமை

நம்ம கை கால்கள்ல நரம்பு அசிங்கமா தெரியுதா? ஜாக்கிரதையா இருங்க !

பொதுவாக அழகாக தெரிவதற்கு இளமைக் காலத்தில் ஆன்டி-ஏஜிங் க்ரீம் முதல் மாய்ஸ்சுரைசர் என்று பலவற்றைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வருவோம். 

திடீரென்று அதிகப்படியான வேலைப்பளு, குழந்தைகளை கவனிப்பது மற்றும் பல வேலைகளால் சோம்பேறித்தனப்பட்டு சருமத்திற்கு கொடுத்து வந்த பராமரிப்பை நிறுத்தி விடுவோம். 

டெல்டா மாவட்டம் என்றால் என்ன? #Delta District

அதோடு பலர் முகத்திற்கு தவறாமல் பராமரிப்பைக் கொடுத்து விட்டு, கை, கால்களுக்கு பராமரிப்பு கொடுப்பதை நிறுத்தி விடுவர். 

இந்த செயலின் விளைவாகவே கைகள் வயதான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. கவலைப்படாதீர்கள். இப்போது ஒன்றும் தாமதம் ஆகவில்லை. 

இன்று முதல் உங்கள் கை, கால்களுக்கும் போதுமான பராமரிப்பைக் கொடுக்க ஆரம்பியுங்கள். இதை தொடர்ந்து செய்யும் போது, நரம்புகள் தெரிவது குறைந்து, கைகளும் அழகாக இளமையுடன் காட்சியளிக்கும்.

அதே சமயம் ஒருவருக்கு வயதாகி விட்டால், உடலில் கொழுப்புக்களின் அளவு குறைந்து கைகளில் சுருக்கங்களுடன், நரம்புகளும் தெரிய ஆரம்பிப்பது இயற்கை என்பதையும் மறவாதீர்கள்.

மரபணுக்கள்

நம்ம கை கால்கள்ல நரம்பு அசிங்கமா தெரியுதா? ஜாக்கிரதையா இருங்க !

கை, கால்களில் நரம்புகள் புடைத்துக் கொண்டு இருப்பதற்கு மரபணுக்களும் காரணமாக இருக்கின்றன. ஒருவரது தோற்றம், நோய்களின் அபாயம், ஏன் நரம்புகள் புடைத்துக் கொண்டு தெரிவது போன்றவற்றில் மரபணுக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. 

அதிகமாக கோபப்பட்டால் இதெல்லாம் நடக்கும் !

உங்களின் அம்மா, அப்பா, உடன் பிறப்புக்களுக்கு கைகளில் நரம்புகள் புடைத்து தெரியுமானால், உங்களுக்கும் நரம்புகள் புடைத்து தெரிவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 

இத்தகையவர்கள் இந்த பிரச்சனையை சரி செய்ய நினைத்தால், லேசர் சிகிச்சை அல்லது கொழுப்பு நிரப்புதல் செயல்முறையை மேற்கொள்ளலாம்.

கர்ப்பம்

நம்ம கை கால்கள்ல நரம்பு அசிங்கமா தெரியுதா? ஜாக்கிரதையா இருங்க !

கருவில் உள்ள குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்க இரத்தம் மற்றும் சத்துக்கள் உடலில் அதிகரிப்பதனால், கர்ப்ப காலத்தில் நரம்புகளில் இரத்த ஓட்டம் 20-40 சதவீதம் வரை அதிகரிக்கும். 

இதனால் கைகளில் மட்டுமின்றி, மார்பு பகுதி, அடிவயிறு மற்றும் கால்களில் கூட நரம்புகள் புடைத்து காணப்படலாம். இதனால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த நரம்புகள் பிரசவத்திற்கு பின் மறைந்து விடும்.

எடை இழப்பு

நம்ம கை கால்கள்ல நரம்பு அசிங்கமா தெரியுதா? ஜாக்கிரதையா இருங்க !

உடல் எடை குறைய ஆரம்பிக்கும் போது, சருமத்திற்கு அடியில் உள்ள கொழுப்பு லேயர்களும் உருக ஆரம்பித்து, நரம்புகள் கண்களுக்கு புலப்பட ஆரம்பிக்கும். இதனால் கைகளில் நரம்புகள் புடைத்து தெரியும். 

அமைதியான இதயம் ஆபத்தான அறிகுறி !

இதற்காக பதட்டமடையத் தேவையில்லை. எடை இழப்பு செயல்முறையின் போது இம்மாதிரி ஏற்படுவது சாதாரணம் தான். ஒரு வேளை உங்களுக்கு நரம்புகளில் வலி தெரிந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

கார்டியோவாஸ்குலர் நோய்

நம்ம கை கால்கள்ல நரம்பு அசிங்கமா தெரியுதா? ஜாக்கிரதையா இருங்க !

நீண்ட கால இதய நோய் உள்ளவர்களுக்கு, சிரை இரத்தம் மந்தமாகவும் மெதுவாகவும் இருக்கும். இதனால் நரம்புகள் வீங்கி காணப்படலாம். ஆனால் இதற்காக உடனே இதய நோய் இருக்குமோ என்று அச்சம் கொள்ள வேண்டாம். 

இதய நோய் இருந்தால் உடலின் பிற பகுதிகளிலும் அறிகுறிகள் தென்படும். எனவே உடனே இதய நோய் என்று முடிவெடுத்து விடாதீர்கள்.

உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள் !

உங்களுக்கு கைகளில் நரம்புகள் வீங்கி தென்பட்டு, அத்துடன் மூச்சு விடுவதில் சிரமம், படபடப்பு போன்ற அறிகுறிகளையும் உணர்ந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

குறைவான கொழுப்பு

நம்ம கை கால்கள்ல நரம்பு அசிங்கமா தெரியுதா? ஜாக்கிரதையா இருங்க !

உங்கள் உடலில் கொழுப்பு மிகவும் குறைவாக இருந்தால், சருமத்திற்கு அடியில் உள்ள கொழுப்பின் அளவும் குறைவாக இருக்கும். இதனால் நரம்புகள் சருமத்திற்கு மிகவும் அருகில் வந்து, இதன் விளைவாக கைகளில் நரம்புகள் புடைத்து தெரியும். 

பணம் கட்டினால் ஆபரேஷன்... குழந்தையை வெளியே எடுக்கட்டுமா? வேண்டாமா? 

உடலில் சரியான அளவு கொழுப்புக்கள் இருந்து நரம்புகள் தெரிந்தாலும், இது கைகளுக்கு ஆரோக்கியமற்ற தோற்றத்தை அளிக்காது.

உங்கள் உடலில் போதுமான அளவு கொழுப்பு இல்லாததை நீங்கள் உணர்ந்தால், ஊட்டச்சத்து நிபுணரை அணுகி அவர் கூறும் டயட் திட்டத்தை பின்பற்றுங்கள். இது உடலில் கொழுப்புக்களின் அளவை அதிகரிக்க உதவும்.

Tags: