சினிமாவை மிஞ்சிய நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலான வீடியோ !

0

நடிகை நயன்தாரா இன்று தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது பிறந்தநாளை மிக பிரமாண்ட கேக் வெட்டி, 

சினிமாவை மிஞ்சிய 9 பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலான வீடியோ !
வான வேடிக்கையுடன் காதல் பொங்க பொங்க கொண்டாடியுள்ளார் விக்னேஷ் சிவன். இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா (Lady Super Star Nayanthara), அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களை தன் கை வசம் வைத்திருந்தாலும், 

அவ்வப்போது தன்னுடைய காதலருடன் நேரம் செலவிடவும், குடும்பத்தினரை பார்ப்பதற்கும் தவறியது இல்லை. 

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய காதலி நயன்தாரா பிறந்தநாளை செம்ம மாஸாக கொண்டாடி வரும்

அவரது காதலர் விக்னேஷ் சிவன் இந்த வருடமும் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.

நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி, வான வேடிக்கையுடன் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் நயன்தாரா. 

சினிமாவை மிஞ்சிய 9 பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலான வீடியோ !

இந்த சர்பிரைஸ் பார்ட்டிக்கு விக்னேஷ் சிவன் தான் ஏற்பாடு செய்திருக்கிறார். Nayan, லேடி சூப்பர் ஸ்டார் என்று எழுதப்பட்ட இரண்டு கேக்குளை வெட்டியிருக்கிறார் நயன்தாரா.

பிறந்தநாள் கேக்கை வெட்டும் முன்பு நயன்தாரா தன் வருங்கால கணவரை கட்டிப் பிடித்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. 

நயன்தாரா தன் பிறந்தநாளை அசத்துவது போன்று அவரின் பிறந்தநாளையும் ஜமாய்த்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

வழக்கமாக நயன்தாராவை தங்கமே என்று அழைப்பார் விக்னேஷ் சிவன். 

இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழு சார்பில் நயன்தாராவை வாழ்த்தி போஸ்டர் வெளியிட்டு, இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்மணி, தங்கமே, என் எல்லாமே என தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நயன்தாரா மிகவும் எளிமையாயாக மஞ்சள் நிற டீ - ஷர்ட் மற்றும் டெனிம் ஸ்கர்ட் ஒன்றையும் அணிந்துள்ளார். 

சினிமாவை மிஞ்சிய 9 பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலான வீடியோ !

விக்னேஷ் சிவன், வழக்கம் போல் கட்டி பிடித்து தன்னுனடய காதலை வெளிப்படுத்தியுள்ளார். 

இந்த வீடியோக்களை பார்த்து, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வருடம் காதலர்களாக பிறந்தநாளை கொண்டாடிய இந்த ஜோடி, அடுத்த வருடம் கணவன் மனைவியாக பிறந்தநாளை கொண்டாடுவார்களா? 

என்பதும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. காரணம், பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நடிகை நயன்தாரா, 

சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' பட புரொமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அப்போது, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறி ஷாக் கொடுத்தார்.

சினிமாவை மிஞ்சிய 9 பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலான வீடியோ !

இவர் நிச்சயதார்த்தம் குறித்து பகிர்ந்து கொண்டதை தொடர்ந்து, விரைவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளதாகவும், 

திருமணத்திற்கு முன் தன்னுடைய கை வசம் உள்ள படங்களை நடித்து முடித்து விட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. 

ஆனால் இருவருமே அடுத்தடுத்த வேளைகளில் கவனம் செலுத்தி வருவதால்... இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)