நல்ல பாம்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க !

0

நாகம் நஞ்சுள்ள பாம்பு ஆகும். இது நாஜா என்ற வகையில் எலாப்பிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. 

நல்ல பாம்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க !
நாகப்பாம்புகள் பொதுவாக ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் வெப்பமண்டல, பாலைவனப் பகுதிகளில் வாழ்கின்றன. 

இந்தியாவில் இதை நல்ல பாம்பு என்று அழைக்கின்றனர். நம் நாட்டில் எளிதில் எதிர் கொள்ளக்கூடிய நான்கு முக்கிய நஞ்சுப் பாம்புகளில் இதுவும் ஒன்று. 

கொலஸ்ட்ராலுக்கு டாட்டா காட்டும் பார்லி !

எலாப்பிடே (Elapidae) குடும்பத்தில் நாஜா (Naja) என்கிற பேரினத்தில் உள்ள நான்கு பாம்பு இனங்களில் நல்ல பாம்பு மட்டுமே நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது.

மற்ற மூன்று இனங்களும் இந்தியாவின் சில குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்கின்றன, தமிழ்நாட்டில் இல்லை.

நாகப்பாம்புகளின் உடலில் காணப்படும் சிறப்பான உறுப்பு தலையில் இருக்கும் ஒரு விரியக் கூடிய தசை ஆகும். 

இவை தாக்கும் போதோ, தற்காப்புக்காகவோ அவற்றை விரிக்கும். இது எதிரியை அச்சுறுத்தவே ஆகும். இதனை படம் எடுத்தல் என்பர். 

இப்பாம்புகள் மஞ்சள் கலந்த வெள்ளை, கரும்பழுப்பு மற்றும் வெளிர்சாம்பல் நிறங்களில் இருக்கின்றன. 

இதன் நிற அமைப்பின் காரணமாக அது தான் வாழும் தரையில் புற்களுக்கு இடையே அரிதாகவே கண்ணுக்குத் தெரிகிறது. 

உங்கள் உடலில் விஷம் பரவி விட்டதா?

ஒருவகை நாகப் பாம்பின் படத்தில் மூக்குக் கண்ணாடி போன்ற குறி ஒன்றுள்ளது. இதனால் கண்ணாடிப் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது.

நச்சுச் சுரப்பிகள் 

நல்ல பாம்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க !

நச்சுப் பாம்புகளைப் போலவே இப்பாம்பின் தலையில் இரண்டு நச்சுச் சுரப்பிகள் மேல்தாடையில் உள்ள இரண்டு பெரிய பற்களுடன் இணைக்கப் பட்டிருக்கின்றன. 

இப்பாம்பு இதன் பற்களால் கடிக்கும் பொழுது அவற்றின் வெளிப்புறம் அமைந்த துளை வழியாக நச்சு கடிபட்ட உயிரினத்தின் இரத்தத்துடன் கலக்கிறது. 

இப்பாம்பிற்கு நச்சுப்பல் உடைந்து போனால் கூட அந்த இடத்தில் புதிய நச்சுப் பல் முளைத்து விடுகிறது.

சிக்கனுடன் எலுமிச்சை.. எதற்காக தெரியுமா?

நல்ல பாம்பின் நஞ்சு (venom) நரம்பு மண்டலத்தைத் தாக்கும் (Neurotoxic).இப்பாம்பு கடிக்கும் பொழுது இதனிடமிருந்து வெளியேறும் நச்சுத் துளியின் அளவு 4 முதல் 6 துளிகள் அளவாக உள்ளது. 

இவை பிடிபட்ட உயிரினத்தைக் கொல்வதற்கு போதுமானதாக உள்ளது. 

மயில், சிங்காரக் கோழிகள் போன்றவற்றிற்கு இந்த நச்சு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. 

பாம்பு கடித்தால் ஏற்படும் பாதிப்பு

நல்ல பாம்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க !

இப்பாம்பு கடித்தால் மனிதனுக்கு இறப்பு நேரிடும். இப்பாம்பின் நச்சு மனிதனின் நரம்பு மண்டலத்தைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

கடிபட்டவனுக்குப் பெருங்களைப்பும், அடக்க முடியாத தூக்கமும் ஏற்படுகின்றன. பின்பு மூச்சடைக்கிறது. 

தலை சுற்றுதல், வாந்தி எடுத்தல், உடல் குளிர்தல், இருதயச் செயல்பாடு குறைதல் போன்றவை ஏற்பட்டு மனிதன் இறக்கிறான்.

வயிற்றுப் போக்கு.. இதயக்கோளாறு பிரச்சனையா?

இக்கடியால் உடலில் தோன்றும் அறிகுறிகள் முடக்கு வாதம், கண்ணிமை செயலற்றுப் போதல், மங்கிய / இரண்டாகத் தெரியும் பார்வை, 

உதடுகள் மரத்துப் போதல், கடிபட்ட பகுதி (திசு) அழுகுதல், இறுதியில் இதயக் கோளாறுகளை (மாரடைப்பு) எதிர் கொண்டு இறக்க நேரிடலாம்.

பாம்பு கடித்தால் என்ன செய்வது?

நல்ல பாம்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க !

இவற்றின் நஞ்சு வேகமாகச் செயல்படும். காலம் தாழ்த்தாமல் பாம்புக் கடிக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டும். 

உடலில் செலுத்தப்பட்ட நஞ்சின் அளவு, கடிபட்டவர் உடல்நிலை, சிகிச்சை எடுக்க ஆகும் நேரம் போன்றவற்றைப் பொறுத்தே இறப்பு நேரிடும். பாம்புகள் கடிப்பதால் உடனே யாரும் மரணிப்பது இல்லை. 

விழிப்புணர்வுடன் உரிய நேரத்தில் சிகிச்சையைப் பெற்றால், பாதிப்பிலிருந்து தப்பிவிடலாம்.

பாம்பு வாழும் இடம்

நல்ல பாம்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க !

இது தரைவாழ் பாம்பு என்பதால் வயல்வெளிகள், தோட்டங்கள், விறகுக் குவியல், கற்குவியல், எலி வளை, கை விடப்பட்ட கரையான் புற்று என மறைந்து வாழக்கூடிய இடத்திலெல்லாம் வாழும். 
நெஞ்சு வலியை குணமாக்கும் ஆரஞ்சு !

அவசியத்தைப் பொறுத்து, மரங்களில் ஏறவும் நீரில் நீந்தவும் செய்யும். நீர், இரை, தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் அமைந்தால் மனிதக் குடியிருப்புக்கு அருகிலே கூட இது தங்கி விடும். 

இருந்தாலும், மனிதர்களிடமிருந்து விலகியிருக்கவே விரும்புகிறது.

பாம்பின் உணவு

நல்ல பாம்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க !

இப்பாம்புகள் பிற பாம்புகளைப் போல் தனது அசைந்தியங்கும் தாடைகளின் உதவியுடன் இரையை முழுதாக விழுங்கும். 

இவை பல்லி, சிறு பாம்புகள், பறவைகள் மற்றும் சிறு பாலூட்டி வகைகளை உணவாக உட்கொள்கின்றன.

பின் இருக்கையிலும் காற்றுப்பைகள் - மெர்சிடிஸ் பென்ஸ் !

பொதுவாக நீர்நில வாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், அரிதாக மற்ற பாம்பினங்களை உணவாக்கிக் கொள்ளும். 

சில நல்ல பாம்புகள் 4 - 5 கோழி முட்டைகளை முழுவதுமாக விழுங்கியதைப் பார்த்திருக்கிறேன். 

இரையின் மீது நஞ்சைச் செலுத்திச் செயலிழக்க வைத்து உயிருடன் விழுங்கும். இது அப்பாம்பை பாதிப்பதில்லை, மாறாக செரிமானத்துக்கு உதவியாக இருக்கிறது.

எப்படி பாம்பு எதிரியை தாக்கும்?

நல்ல பாம்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க !

நஞ்சுடைய இந்தப் பாம்பை நம் முன்னோர் ஏன் நல்ல பாம்பு என்று அழைத்தார்கள்? அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பொழுதும் கூடச் சட்டென்று தாக்காது. 

எச்சரித்தபடியே இருக்கும். யாரும் தாக்க முனையாத போது, மெல்லத் தணிந்து அந்த இடத்திலிருந்து அகன்று விடும். 

விமானத்தின் ஜன்னல் இப்படி இருக்க காரணம் என்ன?

தொந்தரவு ஏற்பட்டால் உடனே கடிக்காமல் மூடிய வாயால் அல்லது படத்தால் (Hood) எதிரியைத் தாக்கி பயம் கொள்ளச் செய்யும். சில நேரம் பொய்க்கடி (dry bite) கடிக்கும். 

இதனால், உடலில் நஞ்சு செலுத்தப்படாது. இதைத் தாண்டித் தனக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கருதும் போது கடித்து விடும். 

இந்தப் பாம்புகளால் அதிகம் கடிபடுவதற்குக் காரணம் இவற்றின் எண்ணிக்கையும், பரவலாக இருப்பதுமே. நம்முடைய அலட்சியமும் மற்றொரு முக்கியக் காரணம்.

பாம்பு இனப்பெருக்கம் செய்வது எப்படி?

நல்ல பாம்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க !

பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. 

பாம்புகள் முட்டையிட்டு அடை காக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடை காக்கின்றன. 

விமானத்தின் உள்ளே சுவாசிப்பது எப்படி? 

இடத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வண்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன.

பாம்பு மகுடிக்கு ஆடுமா?

நல்ல பாம்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க !

பாம்புகளுக்கு காதுகள் கிடையாது பாம்பின் கால் பாம்பறியும், கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். 

பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி 

அதற்கேற்றவாறு அசைவதைத் தான் மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது என்று தவறாகக் கூறுகிறார்கள்.

எப்படி பாம்புகள் நகர்கிறது?

நல்ல பாம்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க !

பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னுக்கு நகர்கிறது. 

மண்புழுவிற்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால், பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு.

முகேஷ் அம்பானி கார் பற்றி தெரிந்து கொள்ள !

இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது. பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. 

மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் 

தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளும்.

பாம்புகள் பால் குடிக்குமா?

நல்ல பாம்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க !

பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. 

கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். 

பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும் போது முதலில் நுழைவது மூக்காகத் தான் இருக்கும். 

மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத் திணறிச் செத்து விடும். இதை அறியாதோர் தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.

மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். 

பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. 

எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது. பாம்புகள் அதன் இனத்திலேயே இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. 

நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் இணைந்து வாழுமா?

நல்ல பாம்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க !

நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் இணைந்து நடனம் புரிந்தன என்கிற தவறான செய்தி இப்போதும் வருகிறது. 

இரண்டும் வெவ்வேறு குடும்பத்தை சார்ந்த இனம்.. இவை ஒரே பகுதியில் வாழலாம். ஆனால், ஒன்று கூடி வாழ்வதில்லை, இணை சேர்வதும் இல்லை. 

நல்ல பாம்பு மூச்சு விட்டா பூமி பிளக்குமா? வயதான பாம்பின் உடல் குறுகுமா? அதன் தலையில் மாணிக்கக் கல் இருக்கா? 

கொன்றால் பழிவாங்குமா? பால் குடிக்குமா? ஐந்து தலை நாகம் உண்டா? மகுடியின் இசைக்குப் பாம்பு ஆடுமா? 

கீரியைப் பாம்பு கடித்தால் கீரி சாகாதா எனப் பல கேள்விகள் அவர்களிடமிருந்து எழுந்தன. இவை பல காலமாக மக்களிடையே நிலவிவரும் சந்தேகங்கள்.

இவை எதுவுமே நிகழ்வதற்குச் சாத்தியமில்லை. புராணக் கதைகளும் ஊடகங்களும் பாம்புகள் சார்ந்த பொய்களைப் பரபரப்புக்காகப் பரப்பிவருகின்றன.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings