கமுதி அருகே ஆடுகளை பலியிட்டு வினோத வழிபாடு !

0

பெண்கள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு சென்று அங்கு மண் பீடத்தில் எல்லை பிடாரி அம்மன் உருவத்தை வடிவமைத்து கூட்டு வழிபாடு நடத்துவார்கள்.

கமுதி அருகே 101 ஆடுகளை பலியிட்டு வினோத வழிபாடு !
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மழை பெய்ய வேண்டி நள்ளிரவில் பெண்கள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதயில் 101 ஆடுகளை பலியிட்டு வினோத வழிபாட்டில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.
கோடையில காரம் சாப்பிட்டா !

ராமநாதபுரம், கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இரண்டாவது வாரத்தில் எல்லை பிடாரி அம்மன் 

கன்னிபெண் குலதெய்வ வழிபாட்டில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று ஒன்று கூடி அதற்கான திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கமுதி அருகே 101 ஆடுகளை பலியிட்டு வினோத வழிபாடு !

கடந்த மூன்று தலைமுறை காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் இத்திருவிழா நேற்று நள்ளிரவில் துவங்கியது. 

மானாவாரி பயிர்களான விவசாய பணிகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் இந்த ஆண்டும் முறையான பருவமழை பெய்து அதிக மகசூல் கிடைத்திடவும் 

இனிப்பைத் தவிர்க்க வாயு குறையும்!

இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்திட வேண்டி இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பெண்களுக்கு அனுமதியில்லை. 

பெண்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டு பகுதிக்கு சென்று அங்கு மண் பீடத்தில் எல்லை பிடாரி அம்மன் உருவத்தை வடிவமைத்து 

கமுதி அருகே 101 ஆடுகளை பலியிட்டு வினோத வழிபாடு !

நள்ளிரவில் 101 கிடாய்களை பலியிட்டு கூட்டு வழிபாடு பூஜைகள் செய்து அதிகாலையில் பச்சரிசி சோறு சமைத்து 

அம்மனுக்கு படையலிட்டு பூஜையில் பங்கேற்ற ஆண்கள் அனைவருக்கும் அசைவ கறி விருந்து பிரசாதமாக பரிமாறபட்டது. 

பற்கள் பளிச்சுன்னு இருக்க !

இதில் ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings