சிறுநீரில் இரத்தம் வருவதற்கான காரணங்கள் என்ன?

0

சிறுநீர் என்பது, நமது உடலில் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகளை  வெளிக்காட்டும் கண்ணாடி. உடலுக்குள் எந்த நோய் ஏற்பட்டாலும் அதன் அறிகுறியை சிறுநீர் காட்டிக் கொடுத்து விடும்.  

சிறுநீரில் இரத்தம் வருவதற்கான காரணங்கள் என்ன?
மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டால்  மஞ்சள் நிறத்துக்கு மாறி  நம்மை எச்சரிக்கை செய்யும். 

ரத்தம் கலந்து சிறுநீர்  சிவப்பு நிறத்தில் வெளியேறினால் உடல் சூடு என்று பலர் அலட்சியம் செய்து விடுகிறார்கள். ஆனால், இது பல அபாயகரமான நோய்களின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். 

இன்றுள்ள காலகட்ட சூழ்நிலையில் நமது செயல்பாடுகள் மற்றும் உடலுக்கு சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளாத காரணத்தால், பல உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகிறோம். 

ஆண்களை விட பெண்களுக்கு தூக்கம் அவசியம் !

அந்த வகையில், சிறுநீரில் இரத்தம் கலந்து செல்வது எதனால் என்பதை பற்றி இன்று காணலாம். 

இயல்பாக சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் என்பபடும் Red Blood Cells வெளியேறி செல்வதில்லை. இவைகள் சிறுநீரகத்தின் வடிகட்டுதலில் தடுக்கப்படுகிறது. 

சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் சிறுநீரக மண்டலத்தின் எந்த பாகத்தில் இருந்தும் வரலாம். 

சிறுநீரக வடிகட்டியில் ஏற்படும் அலர்ஜி, சிறுநீரக நுண்தமனி அலர்ஜி (Glomerulonephritis), சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்கட்டிகள் (Cysts in Kidney), 

சிறுநீரில் இரத்தம் வருவதற்கான காரணங்கள் என்ன?

சாதாரண சிறுநீரக கட்டிகள் (Benign and Cancerous tumors in Kidney) புற்றுநோய் கட்டிகள், சிறுநீரக கற்கள் (Kidney Stones), 

சிறுநீரக கிருமி தாக்கம் (Kidney Infections), சிறுநீரகத்தை பாதிக்கும் பரம்பரை வியாதிகள் (Inherited disorders of Kidney), 

உட்சிறுநீரக குழாயில் ஏற்படும் கற்கள், கட்டிகள், கிருமி பாதிப்புகள் (Stones, tumors, infections of Ureters), பிராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் கட்டி, 

பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் என்ன நன்மை?

கிருமி மற்றும் கல் பிரச்சனை (Swelling, Infection and stone in Prostate Gland), இரத்த உராய்வினால் ஏற்படும் நோய்கள், இரத்த உறைவை தடுக்கும் மருந்துகளால் சிறுநீரகத்தில் இரத்தம் வரலாம். 

இது போன்ற அறிகுறிகள் இருப்பின் எந்த விதமான தயங்கும் இன்றி மருத்துவரை நாடி உடலை சோதித்துக் கொள்வது நல்லது. 

உடலில் பிரச்சனை அதிகரித்த பின்னர் தாமதமாக மருத்துவரிடம் செல்வதால் எந்த பலனும் இல்லை.

சிலர் சிறுநீரை அருவருப்பாகக் கருதி கண்டு கொள்ளாமல் இருப்பார். நம் ஆரோக்கியத்தின் பெரும்பகுதி சிறுநீரில் தான் பொதிந்திருக்கிறது. 

சிறுநீரில் இரத்தம் வருவதற்கான காரணங்கள் என்ன?

சிறுநீருடைய இயல்பான நிறம் இளம் மஞ்சள். இயல்புக்கு மீறி நிறம் மாறினால் உடலில் ஏதோ பிரச்னை என்று புரிந்து கொள்ள வேண்டும். 

சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுவது பல தருணங்களில் வெளிப்படையாகத் தெரியும். சில நேரங்களில் ஆய்வகப் பரிசோதனைகளில் தான் கண்டுபிடிக்க முடியும். 

பெண்ணை உயிருடன் விழுங்கிய முதலை !

சிறுநீர் கழிப்பதிலோ, சிறுநீரிலோ ஏதேனும் அவஸ்தை அல்லது மாற்றத்தை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings