குடல் இறக்கத்துக்கான அறிகுறிகள் என்ன? #herniasymptoms

0
மலச்சிக்கலின் போது முக்கி மலம் கழிப்பதால், வயிற்றுக்குள் அழுத்தம் அதிகரிக்கிறது. இது நாளடைவில் வயிற்றறை உட் சுவரைத் தளர்ச்சி அடையச் செய்கிறது. 
அறிகுறிகள் எவை?
இது குடல் இறக்கத்துக்கு வழி அமைக்கிறது. அடிக்கடி கர்ப்பமாகும் பெண்களுக்கு குடல் இறக்கம் உண்டாகலாம். முதுமை காரணமாக வயிற்றறைச்சுவர் தளர்ந்து போகலாம். 
இதனால் வயதானவர்களுக்கும் குடல் இறக்கம் ஏற்படலாம். குழந்தைகளுக்குப் பிறவியிலேயே கூட குடல் இறக்கம் (Congenital hernia) ஏற்படுகிறது. 

நாம் ஏற்கனவே சொன்ன வயிறு, தொடை, விரை, தொப்புள், தழும்பு போன்ற பகுதிகளில் ஒரு சிறிய எலுமிச்சைப் பழம் அளவுக்குப் புடைப்பு

தெரிவது இந்த நோயின் ஆரம்ப அறிகுறி. அப்போது இந்தப் புடைப்பைத் தொட்டால் வலி இருக்காது. 
இதை வயிற்றுக்குள் தள்ளினால் உள்ளே சென்று விடும். அல்லது படுக்கும் போது அதுவாகவே வயிற்றுக்குள் சென்று விடும்.

இந்த நிலைமையில் இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் நல்லது. இல்லை யென்றால், இது நாளடைவில் மாம்பழம் அளவுக்குப் பெரிதாகி விடும். 
இப்போது இது வயிற்றுக்குள் திரும்பிப் போக முடியாத அளவுக்கு வீங்கி, குடலில் அடைப்பை ஏற்படுத்தும். 

இதனால் புடைப்பில் வலி தொடங்கும். வயிறு உப்பும். வயிற்றிலும் வலி உண்டாகும். 
வாந்தி வரும். மலம் போக சிரமப்படும். மலவாய்க் காற்று போகாது. இது ஆபத்தான நிலைமையாகும். 
இந்த நிலைமையை உடனே கவனிக்கத் தவறினால், குடலில் ரத்த ஓட்டம் தடைபட்டு, குடல் அழுகி விடும். இதனால் நோயாளியின் உயிருக்கே ஆபத்து வரும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)