2,000ம் டூவீலர்களை தூக்கிய போலீஸ்... இனி உயிர் காக்கும் ஹெல்மெட் கட்டாயம் !

0

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

2,000ம் டூவீலர்களை தூக்கிய போலீஸ்... இனி உயிர் காக்கும் ஹெல்மெட் கட்டாயம் !
ஆனால் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பலர் இந்த விதிமுறையை கடைபிடிப்பது கிடையாது. 

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு ஹெல்மெட்கள் தான் அதிகபட்ச பாதுகாப்பை வழங்குகின்றன. 

விபத்து நடைபெற்றால், தலையில் காயம் ஏற்படுவதை தவிர்த்து, உயிரை காக்கும் உன்னத பணியை ஹெல்மெட்கள் செய்கின்றன.

இந்த உணவுகளை நீரில் ஊற வைத்து சாப்பிடணுமாம்.. படிச்சு பாருங்க !

நாம் விபத்தில் சிக்க மாட்டோம் என்ற அலட்சியமே பலரும் ஹெல்மெட் அணியாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம். அந்த அலட்சியத்தை அனைவரும் இன்றோடு விட்டு விடுவது நல்லது. 

ஈரோடு மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பெரும்பாலோனார் ஹெல்மெட் அணிவதில்லை.

எனவே இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என எஸ்பி சசிமோகன் உத்தரவு பிறப்பித்தார். 

2,000ம் டூவீலர்களை தூக்கிய போலீஸ்... இனி உயிர் காக்கும் ஹெல்மெட் கட்டாயம் !

இந்த உத்தரவை மீறினால் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்த உத்தரவு அக்டோபர் 13ம் தேதி (நேற்று) முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. 

ஈரோடு மாநகர பகுதிகள் மட்டுமல்லாது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல் துறையினர் இந்த விதிமுறையை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். 

நிலக்கடலை இத்தனை நோய்களிலிருந்து பாதுகாக்கிறதா?

கருங்கல் பாளையம், காளை மாடு சிலை, பஸ் ஸ்டாண்டு, பன்னீர் செல்வம் பார்க், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

அதே போல் பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, அந்தியூர், கோபிச்செட்டி பாளையம், சத்தியமங்கலம் 

உள்ளிட்ட பகுதிகளிலும் காவல் துறையினர் இந்த விதிமுறையை கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர். 

2,000ம் டூவீலர்களை தூக்கிய போலீஸ்... இனி உயிர் காக்கும் ஹெல்மெட் கட்டாயம் !
ஹெல்மெட் அணியாமல் வருபவர்களின் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2,300க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அத்துடன் அந்த இரு சக்கர வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

வெந்தய டீ குடிச்சா என்ன நன்மைகள் கிடைக்கும்?

ஆனால் நேற்று ஒரே நாளில் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டது? என்ற விபரம் வெளியாகவில்லை.

கட்டாய ஹெல்மெட் விதிமுறையை அமல்படுத்த தொடங்குவது இது முதல் முறை கிடையாது. 

கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் இந்த விதிமுறையை கடுமையாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். 

எனினும் நாளடைவில் இந்த உத்தரவு பிசுபிசுத்து போய் விடுகிறது.

2,000ம் டூவீலர்களை தூக்கிய போலீஸ்... இனி உயிர் காக்கும் ஹெல்மெட் கட்டாயம் !
ஆனால் ஈரோடு மாவட்ட காவல் துறையினர் கட்டாய ஹெல்மெட் உத்தரவை இம்முறை மிகவும் கடுமையாக இடைவிடாமல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். 

இதன்படி இரண்டாவது நாளாக இன்று காலை முதலும், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது. 

வரும் காலங்களிலும் இந்த உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் என காவல் துறையினர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டன்ட் இட்லி மாவு யூஸ் பண்றீங்களா?

எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் இனி வெளியே செல்லும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். 

உங்களுடன் பின்னால் அமர்ந்து வருபவரையும் ஹெல்மெட் அணியுமாறு வலியுறுத்துங்கள். 

இந்த அலட்சியத்தின் தூண்டுதலால் தான், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் சென்ற பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

2,000ம் டூவீலர்களை தூக்கிய போலீஸ்... இனி உயிர் காக்கும் ஹெல்மெட் கட்டாயம் !

ஆனால் இது ஈரோடு மாவட்ட மக்களுக்கு மட்டுமான எச்சரிக்கை கிடையாது. அதே போல் காரில் பயணம் செய்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்து கொள்ளுங்கள். 
பெர்முடா முக்கோணம் பற்றிய ரகசியம் விலகியது !

டிரைவர் மட்டும் சீட் பெல்ட் அணிந்தால் போதும் என்ற தவறான கருத்து இங்கு பலரின் மனதில் வலுவாக ஊன்றியுள்ளது. 

ஆனால் இது தவறான எண்ணம். காரில் பயணம் செய்யும் அனைவரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings