3ம் அலை எப்படி இருக்கும்? ஐசிஎம்ஆர் எச்சரிக்கை... தினமும் 1 லட்சம் கேஸ்கள் வரலாம் !





3ம் அலை எப்படி இருக்கும்? ஐசிஎம்ஆர் எச்சரிக்கை... தினமும் 1 லட்சம் கேஸ்கள் வரலாம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

இந்தியாவில் இரண்டாம் அலையின் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில், மூன்றாம் அலைக்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

3ம் அலை எப்படி இருக்கும்? ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
அதற்காக தற்போதில் இருந்தே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மூன்றாம் அலை கொரோனா பரவலின் போது தினமும் 1 லட்சம் கொரோனா கேஸ்கள் பதிவாக வாய்ப்புள்ளதாக ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர் சமீரான் பண்டா தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டு வரப்படுகிறது. 

வடமாநிலங்களில் அதிக அளவில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதனால் கொரோனா கேஸ்கள் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தளர்வுகள் கொண்டு வரப்பட்ட கேரளாவில் ஏற்கனவே கேஸ்கள் ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. 

ஒரே இரவில் பல உயிர்களை பலி வாங்கிய கேமரூன் நயோஸ் ஏரி !

அங்கு தினசரி கேஸ்கள் தற்போது 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தான் மூன்றாம் அலை பரவல் குறித்து ஐசிஎம்ஆர் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

எச்சரிக்கை

3ம் அலை எச்சரிக்கை

ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர் மற்றும் மூத்த மருத்துவர் சமீரான் பண்டா இது குறித்து அளித்த பேட்டியில், இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் கொரோனா மூன்றாம் அலை ஏற்படும். 

ஆகஸ்ட் இறுதியில் தான் கேஸ்கள் உச்சத்தை தொடும். இந்தியாவில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.

அதிகம்

இந்தியாவில் நிலைமை மோசமாகலாம். இந்த வைரஸ் இதற்கு மேலும் உருமாற்றம் அடையாமல் இருந்தால் ஒரு வேளை கேஸ்கள் குறையலாம், பாதிப்பு, தாக்கம் குறையலாம். 

குழந்தைகளுக்கு பிடித்த கேரட் - பீன்ஸ் சாதம் செய்வது எப்படி?

ஆனால் வைரஸ் ஒரு வேளை மேலும் உருமாற்றம் அடைந்தால் நிலைமை மோசமாகும். அதிக அளவில் கேஸ்கள் வரும்.

முன்னுரிமை

முன்னுரிமை

கையில் இருக்கும் தடுப்பூசிகள் செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை பார்த்து, 

அனைத்து தரப்பினரும் பயன்படும் படி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசிகள் பொதுமக்கள் நலனிற்கானது.

மூன்றாம் அலை

மூன்றாம் அலை அளவிற்கு இரண்டாம் அலை மோசமாக இருக்காது. ஆனால் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள குறைவான வேக்சினேஷன், 

லாக்டவுன் தளர்வுகள் காரணமாக அதிக கேஸ்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது. இப்போது இருக்கும் சூழ்நிலை அதைத்தான் உணர்த்துகிறது.

கட்டண நிர்ணயம் 

கட்டண நிர்ணயம்

ஆம்புலன்ஸ்கள், ஆக்சிஜன், அடிப்படை மருந்துகள் மற்றும் மருத்துவமனை சிகிச்சை கட்டணங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். 

வெளிப்படையான தேசிய கட்டண நிர்ணய கொள்கை வகுக்கப்பட வேண்டும். மக்கள் மருத்துவத்திற்கு செய்யும் செலவு அவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது, 

மேலும் தற்போது இருக்கும் அனைத்து விதமான மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு கீழும் கொரோனா சிகிச்சை பெறும் வசதி கொண்டு வரப்பட வேண்டும்.

சூழ்நிலை

சூழ்நிலை

முடிந்த அளவு மக்கள் வெளியே செல்வதை குறைக்க வேண்டும். முடிந்த அளவு மக்கள் பயணம் மேற்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். 

டெல்டா வகை கொரோனா பாதிப்பு இன்னும் இந்தியாவில் குறையவில்லை. 

அக்குள் பகுதியில் உள்ள முடியை நீக்க எளிய வீட்டுப் பொருட்கள் ! 

அடுத்த 100-125 நாட்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று, மூத்த மருத்துவர் சமீரான் பண்டா தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)