உங்கள் உடலில் இப்படி இருந்தால் அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம் !

0

நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய் உலகளவில் 42 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உள்ளது. இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. 

உங்கள் உடலில் இப்படி இருந்தால் அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம் !
அது மட்டுமின்றி, கடந்த ஆண்டே இந்தியா தான் நீரிழிவு நோய் பாதிப்பில் முதல் இடத்தில் இருந்தது. இது கவலைக்குரிய விஷயம் ஆகும்.

ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாத போது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாத போது, 

ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய். உடலில் இன்சுலின் அளவு குறையும் போது அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும் போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. 

இது சிறுநீரகத்திலுள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. ஏனென்றால், இரத்தத்தை வடிகட்ட சிறுநீர்க்கலங்கள் மிகக் கடினமாக வேலை செய்ய வேண்டியதாகிறது. 

காலப் போக்கில், அவை பழுதடைந்து வடிகட்டும் திறனை இழக்கின்றன.

​நீரிழிவு பிரச்சினை

​நீரிழிவு பிரச்சினை

இன்சுலின் என்ற ஹார்மோனின் உற்பத்தி அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. 

இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு கிராமங்களில் 5-ல் இருந்து 7 சதவீத மக்களும், நகரங்களில் 15-ல் இருந்து 20 சதவீத மக்களும் ஆளாகின்றனர்.

மற்ற நோய் வருவதற்கு முன்னர் ஏற்படும் அறிகுறிகளைப் போன்றே சர்க்கரை நோய் வருவதற்கு முன்னே வரும் அறிகுறிகள் பல உள்ளன. 

ஆனால், நாம் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. 

அதனாலே நாம் சர்க்கரை நோய் வந்த பின்பே அதனைப் பற்றி தெரிந்து கவலை கொள்கிறோம். சரி வாங்க அந்த அறிகுறிகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

​தோல் பிரச்சனைகள்

​தோல் பிரச்சனைகள்

நமக்கு ஏற்படும் தோல் சம்மந்தமான பிரச்சனைகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சத்துக் குறைபாடுகள், சுத்தமின்மை, மற்றும் பரம்பரைக் காரணங்களால் தோல் நோய் ஏற்படலாம்.

சிலருக்கு இது போன்ற தோல் பிரச்சனைக்குப் பின்னர் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உண்டு. 

எனவே அதை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீரிழிவு நோய் உருவாக உள்ளது என்பதற்கான அறிகுறியை உணர்த்தும் முதல் உறுப்பு தோல் தான்.

இன்றைய சூழ்நிலையில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் 30 சதவீதம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

கண்ணை சுற்றி ஏற்படும் மஞ்சள் திட்டுகள்

கண்ணை சுற்றி ஏற்படும் மஞ்சள் திட்டுகள்

இரத்தத்தில் அதிக கொழுப்பு அளவு இருப்பதால் கண்களைச் சுற்றிலும் மஞ்சள் செதில் திட்டுகள் ஏற்படலாம். 

இது உங்களுக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இந்த நிலை xanthelasma என்று அழைக்கப்படுகிறது.

உங்களுக்கு அதிக கொழுப்பு இருந்தால் அது கூட உங்களின் இன்சுலின் அளவை அதிகப்படுத்தி சர்க்கரை நோயை ஏற்படுத்தும். இது கூட நீரிழிவு நோயின் அறிகுறி தான்.

​தோலில் ஏற்படும் பருக்கள்

​தோலில் ஏற்படும் பருக்கள்

தோலில் ரோமக் கால்களை சுற்றி கெராடின் என்று சொல்லப்படும் புரதப்பொருள் அடைவதினால் கருந்தலைகள் (ப்ளாக்ஹெட்ஸ்) மற்றும் 

வெள்ளை நிற தலைகள் (வைட்ஹெட்ஸ்) எனப்படும் மிகச்சிறிய முள் போன்ற அமைப்புகள் தோன்றுகின்றன. 

அடைபட்டபோதும், செபேசியஸ் சுரப்பிகள் சீபம் எனப்படும் எண்ணைப் பொருளைச் சுரக்கின்றன. முதலில் உங்களின் தோலில் முகப்பரு போன்று தோற்றமளிக்கும் கட்டிகள் உருவாகும். 

இது பின்னர் வீக்கமடைந்து திட்டுகளாக மாறும். அது மட்டுமின்றி அந்த கட்டிகள் வலியை ஏற்படுத்துவதோடு, அரிப்பினையும் உண்டாக்கும். 

இது போன்ற கட்டிகள் உருவாவதை நெக்ரோபோயிஸ் லிபோய்டிகா என்று அழைக்கலாம். 

இது போன்ற கட்டிகள் உங்களின் கழுத்துப் பகுதி, அக்குள் பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் அதிகமாக ஏற்படும். 

இது உங்களின் இரத்தத்தில் இன்சுலின் அளவில் ஏற்படும் மாற்றத்தைக் காட்டும் அறிகுறியாகும்.

கொப்புளங்கள்

கால்களில் கொப்புளங்கள்

கொப்புளம் என்றால் சருமத்தின் மேற்பரப்பில் (மேலோட்டமான அடுக்கு) திரவங்களின் கூட்டாக உருவாகும் சிறிய தசைகளோ அல்லது புள்ளிகளோ ஆகும்.  

தோல் பகுதியில் நீர் போன்ற திரவத்தால் நிறைந்த கொப்புளங்கள் ஏற்படும். இது ஒரு குழுவாகவோ அல்லது பெரிய பெரிய கொப்புளங்கலாகவோ இருக்கலாம். 

கொப்புளங்கள் எளிதில் உருவாகக்கூடிய மிகவும் பொதுவான பகுதிகள் கைகள் மற்றும் கால்கள். கொப்புளங்கள் வழக்கமாக தெளிவான திரவத்தினாலோ (சீரம்), இரத்தத்தினாலோ அல்லது சீழாலோ நிரம்பியிருக்கின்றன.

சர்க்கரை நோயின் முதல் அறிகுறியாகும்

இவை அதிகமாக உங்கள் கால்களில் தான் தோன்றும். இது புல்லோசிஸ் நீரிழிவு நோய் அல்லது டிபெக்டி புல்லே என்று அழைக்கப்படுகிறது. 

அதே வேளையில் இந்த கொப்புளங்கள் வலி மிகுந்ததாக இருக்காது. இது தான் சர்க்கரை நோயின் முதல் அறிகுறியாகும். இப்படி ஏற்படும் கொப்புளங்கள் புண்களாக மாறும் வாய்ப்பு அதிகம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)