சூரிய புயல் ஏன் ஏற்படுகிறது? அதனால் பாதிப்பு என்ன?

0

சூரியனில் இருந்து அதிக சக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும் போது புயலாக மாறி அண்ட வெளியில் பரவும். இதனால் தான் சூரியப் புயல் ஏற்படுகிறது. 

சூரிய புயல் ஏன் ஏற்படுகிறது?
இதனால் பூமியில் உள்ள மின்காந்த அலைகள் பாதிப்புக்குள்ளாகும். தொலைத்தொடர்பு செயல் இழக்கும். இது பொதுவாக ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும்.

சூரியனில் உள்ள வாயுக்கள் காரணமாக சூரியன் தொடர்ந்து இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது. அதில் ஏற்படும் வெப்பம், பூமியை எட்டுவதால் தான் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. 

நம் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகள் எவை?

இதே போல சூரியன் எரிவதால் ஏற்படும் வெளிச்சத்தால் தான் நமக்கு பகலில் வெளிச்சம் கிடைக்கிறது.. சூரியன் நீண்ட தூரம் இருப்பதால் சூரியனின் வெப்பம் மிக குறைந்த அளவு மட்டுமே பூமிக்கு வருகிறது. 

இதனால்தான் பூமியில் உயிரினங்கள் வாழ முடிகின்றன. சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தாலும் கூட அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். 

இது போன்ற சூழ்நிலையில் தான் ஆகஸ்ட் 1ம் தேதி காலை சூரியனின் மேல் பகுதியில் அணுகுண்டு வெடிப்பது போன்று 2 முறை மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

சூரிய புயல் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?

இந்த வெடிப்பானது  பூமி உருண்டையின் அளவைவிட சற்று அதிகமாக இருந்தது.. அடுத்து சில நிமிடங்களில் ஏற்பட்ட வெடிப்பு முதல் வெடிப்பை சற்று சிறியதாக இருந்தது. 

இந்நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் நவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து உள்ளனர். வெடிப்பின் போது பயங்கர வெப்பம் கிளம்பி இருக்கிறது. 

அந்த வெப்பம்  பூமியை நோக்கி மணிக்கு 9 கோடியே 30 லட்சம் மைல் வேகத்தில் வந்தது. இந்த வெப்பமானது பூமியை வந்தடையும் போது அதன் தீவிரம் எந்தளவுக்கு இருக்கும் என கணிக்க முடியவில்லை. 

செல்போனால் சுய சுயநினைவை இழந்து பைத்தியமாகிய சிறுவன் !

சாதாரணமாக சூரியனின் வெப்பம்  நேரடியாக பூமியை தாக்காமல் பூமிக்கு மேலே உள்ள வாயு மண்டலங்கள் போர்வை போன்று  தடுக்கின்றன. 

இந்த வாயுக்களால் வெப்பம் உள்வாங்கப்பட்டு, பிறகு தான் குறைந்த அளவான வெப்பம் பூமியை வந்தடைகிறது.

வாயு மண்டலங்கள் போர்வை போன்று  தடுக்கின்றன

பூமி வெப்பமயமாதலால் வாயுமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது என்பதை நாம் முன்பே அறிந்திருக்கிறோம். 

இத்தகைய பல்வேறு அடுக்குகளைக் கொண்ட வாயுமண்டலம் காரணமாகவே சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தால் நாம் அதிகம் பாதிக்கபடாமல் இருக்கிறோம். 

இத்தகைய  வாயு மண்டலங்கள் சூரியப் புயலால் ஏற்பட்ட வெப்பத்தை தடுக்க முடியாவிட்டால் அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

முட்டையை இப்படி தான் சமைக்கனுமாம், அது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது !

பூமிக்கு மேல்பகுதியில் வாயு மண்டலத்தை தாண்டி ஏராளமான செயற்கை கோள்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இச்செயற்கைகோள் தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றன. 

சூரியனில் இருந்து வரும்  வெப்பம் செயற்கைகோள்களை தாக்குவதற்கு  அதிக வாய்ப்பு உள்ளது. இந்த சூரியப் புயலால் சில ஆண்டுகளுக்கு முன் புவியின் தாழ்வான வட்டப் பாதையில் சுற்றும் செயற்கைக் கோள்கள் 2 சேதமடைந்துள்ளன.

சூரியப் புயல் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்

இதுவரை 11+ செயற்கைக் கோள்கள் சூரியப் புயல்களால் சேதமடைந்துள்ளன. சூரியப் புயல்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியன. 

எந்த அளவுக்கு என்றால் கடந்த 1859ல் செப். 1,2ம் தேதிகளில் ஏற்பட்ட சூரியப் புயல் பூமியின் காந்த சக்தியிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியது. 

புயலின் போது அந்த இரண்டு நாட்கள் இருளே சூழவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த 1859ம் ஆண்டு சூரியப் புயலே புலியைக் தாக்கிய மிகப்பெரிய புவிக் காந்தப் புயல்.

அடிக்கடி இந்த வகை உணவுகளை சாப்பிடாதீங்க காரணம் !

இதற்கு "ஹரிங்டன்‌ நிகழ்வு" என்றும் பெயரிடப்பட்டது. இப்புயலின் போது உலகம் முழுவதும் வானில் ஜோதி தென்பட்டது. குறிப்பாக ராக்கி மலைப்பகுதி & கரீபியன் தீவுகள் பகுதிகளில் மிகவும் பிரகாசமாக தென்பட்டது.

எந்த அளவுக்கு என்றால் அப்பகுதிகளில் வசித்த மக்கள் இரவு நேரத்தையே காலை நேரம் என நினைத்து காலை உணவு சமைத்து உண்டார்களாம்.

இந்நிகழ்வின் போது அமெரிக்கா & ஐரோப்பாவில் தொலைத் தந்திச் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின. தொலைத்தொடர்புக் கம்பிகள் தீப்பிடித்து எரிந்தன.

பூமியின் காந்த சக்தியிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியது

சூரிய ஒளியில் மாற்றம் ஏற்படுவதால் மின்காந்த புயல், மின்னல் தாக்குவது போல் பூமியை தாக்கும் என்று நாசாவின் ஹீலியோ பிசிக்ஸ் பிரிவு டைரக்டர் 

விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் பிஷ்ஷர் கூறுகிறார். ‘விண் வெளி வானிலை’ என்ற தலைப்பில் வாஷிங்டனில் சமீபத்தில் ஒரு மாநாடு நடந்தது. 

இதில் நாசா விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சூரிய மின்காந்த புயல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டது. 

வியர்வை அதிகமானால் ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் காரணமாக இருக்கலாம் !

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் டாக்டர் பிஷ்ஷரின் (Scientist Richard Fisher) எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டனர். 

டாக்டர் பிஷ்ஷர் – Scientist Richard Fisher(69) சூரிய மின் காந்த புயல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார். 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. 

பதினொரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின்காந்த புயல் (Magnetic storm) ஏற்படுகிறது. இது புள்ளிகள் அல்லது சுடரொளி போல் காணப்படுகிறது. 

சூரியனில் மின்காந்த புயல் (Magnetic storm) ஏற்படுகிறது

அப்போது சூரியனின் வெப்பம் மிக அதிகமாக 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் (5,500 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அடையும். மனிதனின் வாழ்நாளில் இது போல் மூன்று, நான்கு முறை சூரிய புயல் (Solar storms) ஏற்படுவதை அறியலாம். 

சிக்குன்னு இளசுகளை சிக்க வைக்கும் ரெஜினா கசாண்ட்ராவின் புகைப்படம் !

இதனால் வட ஐரோப்பா (Northern Europe) மற்றும் இங்கிலாந்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் (Power stations) எளிதாக பாதிக்கப்பட்டு பல மாதங்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்படலாம். 

முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)