வலங்கைமானில் நகைகளை பறித்து மிரட்டிய போலீசார்... உரிமையாளர் போராட்டம் !

0

வலங்கைமானில், நகைகளை பறித்து மிரட்டல் விடுத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பூட்டிய கடைக்குள் அடகு கடை உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

வலங்கைமானில் நகைகளை பறித்து மிரட்டிய போலீசார்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைத்தெருவில் கென்னடி (வயது 55) என்பவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். 

இவர் முதல் - அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- 

எங்களுடைய குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக வலங்கைமானில் நகை அடகு கடை நடத்தி வருகிறோம். 

கடந்த 14-ந் தேதி 2 பெண் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் எனக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபரை எனது வீட்டுக்கு அழைத்து வந்தனர். 

அந்த நபரை 10 பவுன் நகையை என்னிடம் அடகு வைத்ததாக கூற செய்த போலீசார் எவ்வித ஆவணங்களும் இன்றி 10 பவுன் நகையை கேட்டு மிரட்டினர். 

பெண்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் ஆண்களின் ரகசியங்கள் !

பின்னர் என்னை குடவாசலில் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு அழைத்து சென்று அங்கு உள்ள ஒரு வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத அந்த நபரிடம் இருந்து நகையை வாங்கியதை ஒப்புக் கொள்ளும்படி மிரட்டினர். 

அங்கிருந்து மீண்டும் எனது கடைக்கு அழைத்து வந்த போலீசார், கடையில் இருந்த 72 கிராம் தங்க நகைகளை எடுத்து சென்றனர். அதைத் தொடர்ந்து மீண்டும் நகைகளை கேட்டு போலீசார் மிரட்டினர். 

இதனால் கும்பகோணம் பகுதியில் நகை விற்கும் நண்பரிடம் இருந்து 40 கிராம் எடை கொண்ட 2 சங்கிலிகளை வாங்கி போலீசாரிடம் கொடுத்தேன். 

ரமலான் கேரளா மட்டன் மசாலா செய்வது எப்படி?

என் மீது வீண்பழி சுமத்தி நகைகளை பறித்து சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

இதே மனுவை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மனித உரிமை ஆணையத்துக்கும் கென்னடி அனுப்பி இருந்தார். 

இந்த நிலையில் நேற்று கடைத்தெருவில் உள்ள அடகு கடைக்குள் அமர்ந்து கென்னடி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். 

அப்போது நகைகளை பறித்து மிரட்டல் விடுத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். 

நம்முடைய உடல் உறுப்புக்களுக்கு பலம் தரும் சீரகம் !

இதனை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அடகு கடை உரிமையாளர்கள், தி.மு.க., அ.தி.மு.க. பிரமுகர்கள், வர்த்தகர் சங்கத்தினர் கடையின் முன்பு திரண்டனர். 

போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்று பூட்டிய கடைக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட கென்னடியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதை யடுத்து கென்னடி போராட்டத்தை கைவிட்டார். இந்த போராட்டம் 3 மணி நேரம் நீடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பாதம் மற்றும் உள்ளங்கையில் கூச்ச உணர்வை தடுக்கும் சில வழிகள் !

இந்த சம்பவம் தொடர்பாக வர்த்தகர் சங்கத்தினர் மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்கள் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி தந்தி செய்தி 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)