பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையால் சந்தோசம் இல்லையம்மா.. இயக்குநர் உருக்கம் !

0

சமூக வலைதளங்களில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்த போதும் தனக்கு சந்தோஷம் இல்லை என இயக்குநர் சேரன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையால் சந்தோசம் இல்லையம்மா

சேரன் மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் திசம்பர் 12, 1965 ஆம் ஆண்டு பிறந்தார். 

இவருடைய தந்தை பாண்டியன் வெள்ளலூர் உள்ள திரையரங்கத்தில் படம் ஓட்டுநராக பணி புரிந்தார். தாயார் கமலா தன் கிராமத்திலே தொடக்க பள்ளி ஆசிரியை ஆக வேலை பார்த்தார்.

இதை சாப்பிட்டால் உங்களை அறியாமலேயே சிறுநீர் வெளியேறுவதை தடுக்கலாம்?

இவருடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சிறிய வயதில் நாடகங்களில் நடித்தும் இருக்கிறார். 

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், சூன் 19, 2011 அன்று நடந்த தேர்தலில், போட்டியின்றித் தேர்வுச் செய்யப்பட்ட இரு துணைத் தலைவர்களில் சேரனும் ஒருவர் ஆவார்.

இயக்குநர் உருக்கம் !

தமிழ் சினிமாவில் தரமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் சேரன். இயக்குநர் கேஎஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக கேரியரை தொடங்கினார்.

பின்னர் 1997ஆம் ஆண்டு பாரதிகண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 

இதயத்தில் ஓட்டை இருப்பதை வெளிக்காட்டும் முக்கிய அறிகுறிகள் !

தொடர்ந்து பொற்காலம், தேசியகீதம், வெற்றிக் கொடிக்கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோ கிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வருகிறார் சேரன். கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கிய சேரன் அப்படத்தில் அறிவுடைதம்பி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தும் இருந்தார்.

இயக்குநர் சேரன் உருக்கம் !

நான்கு தேசிய விருதுகள், 6 தமிழக அரசின் விருதுகள், 5 பிலிம்ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். 

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சேரன். 

இதில் மக்கள் ஆதரவுடன் 77 நாட்கள் இருந்த சேரன், மக்களின் அன்பையும் மதிப்பையும் சம்பாதித்தார். 

ஆண்களை திருப்திபடுத்த பெண்கள் செய்ய வேண்டிய செயல்கள் தெரியுமா?

இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளரான லாஸ்லியா, இயக்குநர் சேரனை சேரப்பா சேரப்பா என்றழைத்ததால் ரசிகர்களும் அவரை அப்பா என்று அழைக்க தொடங்கி விட்டனர்.

கரோனா நமக்கு வராது என்ற சிந்தனை யாருக்கும் வேண்டாம் என்று இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கரோனா 2-வது அலையின் தீவிரம் மிகக் கடுமையாக உள்ளது. 

கரோனா நமக்கு வராது என்ற சிந்தனை யாருக்கும் வேண்டாம்

இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும், பிரபலங்கள் பலரும் படப்பிடிப்பு அனைத்தையும் ரத்து செய்து விட்டு வீட்டிலேயே இருக்கிறார்கள்.

நடுங்க வைக்கும் அந்த கால மிருகத்தனமான கருக்கலைப்பு அதிர்ச்சி தகவல் !

இந்நிலையில் இயக்குநர் சேரனை டிவிட்டரில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. 

இதனை பார்த்த ரசிகை ஒருவர், 100 கே ஃபாலோயர்ஸ் அப்பாவுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

இந்த பிளாட்ஃபார்மில் அனுபவங்களையும் மைல் கற்களையும் மனித நேயத்துடன் பகிர்ந்து கொண்டு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறீர்கள். 

சமூக விஷயங்களில் நம்பிக்கையை சார்பு இல்லாமல் வெளிப்படுத்துங்கள் & மனிதநேயத்தை ஆதரியுங்கள்.. என பதிவிட்டிருந்தார்.

பெண்களின் உயிரை வாங்கிய அந்த கால கருத்தடை சிகிச்சை !

இந்த டிவிட்டை பார்த்த இயக்குநர் சேரன், இந்த சந்தோஷத்தை கொண்டாட முடியவில்லையம்மா என உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

கொரோனாவால் நாளுக்கு நாள் மக்களு மடிந்து வரும் நிலையில் இதனால் சந்தோஷப்பட முடியவில்லை என கூறியுள்ளார்.

இயக்குநர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, 

உலகில் மக்களின் எண்ணிக்கை நம் நண்பர்களின் எண்ணிக்கை, நம் உறவினர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதால் இதில் உயரும் நண்பர்கள் எண்ணிக்கையால் சந்தோசம் கொள்ள முடியவில்லைம்மா.. 

கொரோனா பிடியில் ஏகப்பட்ட உயிர்களை இழந்திருக்கிறோம். இனியும் இழக்காமல் இருக்க முயல்வோம்.. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நமக்கு எங்கிருந்தோ எல்லாம் கிடைத்து விடுகிறது என்று கருதாமல் நோயை விரைவில் விரட்டியடிக்க ஒத்துழைக்க வேண்டியது நம் கடமை. 

ஆகவே நோய் இருப்பதற்கான காரணம் தெரிந்த உடனே சிகிச்சை எடுங்கள். நோயற்றவர்கள் வராமல் தடுக்க முழு முயற்சி எடுங்கள்". இவ்வாறு சேரன் தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings