ராஜஸ்தானில் கொரோனா இறுதிச் சடங்கினால் 21 பேர் பலி !

0

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் செய்யப்பட்ட இறுதிச் சடங்கினால் 21 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி

ராஜஸ்தானில் கொரோனா இறுதிச் சடங்கினால்  பேர் பலி !
கொரோனாவால் உயிரிழந்தவர்களை பொதுவாக பாதுகாப்பு உடை அணிந்து சுகாதாரத் துறையினரையே அடக்கம் செய்து வந்த நிலையில், 

தற்போது உறவினர்களின் கோரிக்கையினால் குடும்பத்தினரிடம் இறந்தவரின் உடலை ஒப்படைக்கின்றனர். 

ஆனால் அவ்வாறு ஒப்படைத்தாலும், சுகாதாரத் துறையினரையினர் கூறும் நெறிமுறைகளை கடைபிடித்து தான் இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என்ற நடைமுறையை அரசு கொண்டுள்ளது. 

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை எப்படி பராமரிப்பது !

ஆனால் இதனை மீறிய ஒரு கிராமம் தற்போது பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கீர்வா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 21ம் தேதி உயிரிழந்துள்ளார். 

இவரது உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் இறுதிச் சடங்கின் போது, உடலை போர்த்தியிருந்த பிளாஸ்டிக் கவரைப் பிரித்ததுடன், இறந்தவரின் உடலையும் தொட்டுப் பார்த்துள்ளனர். 

பெண்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் ஆண்களின் ரகசியங்கள் !

சுமார் 150 பேர் கலந்து கொண்ட இந்த இறுதிச் சடங்களில், அடுத்தடுத்து 21 பேர் உயிரிழந்துள்ளது கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து பேசிய அதிகாரி, "உயிரிழந்த 21 பேரில் 3 - 4 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந் திருக்கின்றனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியோர்களாக உள்ளனர்.

இங்கு சமூக பரவல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 147 பேரின் மாதிரிகளை கொரோனா சோதனைக்கு உட்படுத்தி யிருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)