குச்சியும், நூலும் கொண்டு சேவிங் செய்யும் தாத்தா வீடியோ பாருங்க !

0

வயதான இந்தியர் ஒருவர் ஷேவிங் மிஷின் இல்லாமல், குச்சியையும், நூலையும் கொண்டு அழகாக ஷேவிங் செய்யும் வீடியோ நெட்டிசன்களின் புருவத்தை உயர்த்தி உள்ளது.

குச்சியும், நூலும் கொண்டு சேவிங் செய்யும் தாத்தா வீடியோ பாருங்க !
ஒரு விஷயத்தை எவ்வாறு எளிதாக அணுகுவது என்பதை இந்தியர்கள் உலகுக்கு புதிது புதிதாக உணர்த்தி வருகின்றனர். 

அப்படி ஒரு வீடியோ தான் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. ஷேவிங் மிஷின் இல்லாமல் எப்படி ஷேவிங் செய்வது என்பதை வயதான ஒருவர் செய்து காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ஷேவிங் மிஷின் இல்லாமல் எப்படி ஷேவிங் செய்வது என்று தானே யோசிக்கிறீர்கள்? வீடியோ பார்த்தால் உங்களுக்கே தெரியும். 

வீடியோவில், வயதான மனிதர் ஒருவர் ஷேவிங் செய்து கொண்டிருப்பதை காணலாம். ஆனால் அவர் கையில் ஷேவிங் செய்ய ரேசர் இல்லை. 

அதற்கு பதிலாக குச்சிகள் மற்றும் நூலை கொண்டு ரேசர் போன்ற கருவியை தானாகவே அவர் தயார் செய்திருக்கிறார். 

இரு சிறிய குச்சிகளை கொண்டு ‘வி’ வடிவில் இணைத்து ரேசரை அவர் உருவாக்கி இருக்கிறார். குச்சி இணைக்காமல் இருக்கும் பக்கத்தில், நூலை பல அடுக்குகளாக அடுக்கி, பிளேடு போல் தயார் செய்திருக்கிறார்.

இதனை கொண்டு அவர் ஷேவிங் செய்ய, அது நெட்டிசன்களின் புருவத்தை உயர்த்தி உள்ளது. பிளேடு இல்லாமல், நூலை கொண்டு அவர் ஷேவிங் செய்யும் உத்தியை கண்டு, ஆச்சரியம் தான் ஏற்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)