8 மாவட்டங்களில் மழை.. வானிலை மையம் அறிவிப்பு

0

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

8 மாவட்டங்களில் மழை.. வானிலை மையம் அறிவிப்பு !
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில், தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

இந்த சூழலில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நாளை முதல் 3 நாட்களுக்கு, தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ள தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)