அதிகரிக்கும் கொரோனா.. தேர்தல் நடக்குமா? கலங்கும் வேட்பாளர்கள் !

0

தமிழ்நாட்டின்  15-வது சட்ட மன்றத்துக்கான பதவிக்காலம் 2021 மே 24 இல் முடிவடைகிறது. பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், 

அதிகரிக்கும் கொரோனா.. தேர்தல் நடக்குமா? கலங்கும் வேட்பாளர்கள் !
2021 ஏப்ரல் 06 இல் கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. 

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்ட மன்றத்துக்கான 234 தொகுதிகளுக்கு தேர்தல்கள் நடைபெறும்.

முடிவுகள் மே 2 ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன. இந்த சமயத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க துவங்கி உள்ளது.

கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் நாக்பூரில் ஒரு வாரமும், நொய்டாவில் ஏப்ரல் 30 வரையிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 

தடுப்பூசி போடும் பணி ஒரு புறும் நடந்து வந்தாலும், கொரோனா பரவலும் மறுபுறும் அதிகரித்து வருகிறது.

பரவும் கொரோனா

பரவும் கொரோனா

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 1 சதவீதம் குறைந்து இருந்தது கொரோனா பரவல். அண்மை காலங்களில் 

உலக அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. 

10 நாட்கள் முன்பு வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 500 க்கும் கீழ் இருந்த நிலையில், தற்போது 800 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

பிரச்சார கூட்டங்கள்

பிரச்சார கூட்டங்கள்

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், அரசியல் கட்சி் தலைவர்களும், தொண்டர்களும் கொரோனா கட்டுப்பாடுகளை மறந்து, தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

முக்கிய தலைவர்களின் பிரச்சாரங்கள், அரசியல் கூட்டங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் கொரோனா முன்பை விட வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தேர்தல் நிறுத்தப்படுமா ?

தேர்தல் நிறுத்தப்படுமா ?

கொரோனா பரவலால் மீண்டும் நாடு முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப் பட்டால்  5 மாநில சட்டசபை தேர்தல் நிறுத்தப்படலாம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 

ஆனால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  இதனை மறுத்துள்ளார். 

ஓட்டு  பாதிக்கப்படுமா?

ஓட்டு  பாதிக்கப்படுமா?

கொரோனா பரவல் சூழலில் மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு வந்து ஒட்டளிப்பார்களா என்பது கேள்விக் குறியாக உள்ளது.  அச்சம் காரணமாக பலரும் ஓட்டளிப்பதை தவிர்க்கவே வாய்ப்புள்ளது. 

இதனால் பதிவாகும் ஓட்டு சதவீதம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. 

ஏற்கனவே 100 சதவீதம் ஓட்டுப்பதிவை கொண்டு வர முடியாமல் தவிக்கும் தேர்தல் கமிஷனுக்கு, கொரோனா பெரும் சவாலாகவே இருக்கும்.

கலக்கத்தில் கட்சிகள்

கலக்கத்தில் கட்சிகள்

ஓட்டு சதவீதம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால் முதல்வர் கனவில் இருக்கும் கட்சி தலைவர்களும், கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து வரும் வேட்பாளர்களும் கலக்கத்தில் உள்ளனர். 

ஏற்கனவே அதிக கட்சிகள், அதிக வேட்பாளர்கள் களத்தில் உள்ளது, நோட்டா என ஓட்டுக்கள் பிரிய பல காரணங்கள் இருக்கும் நிலையில் 

கொரோனாவால் ஓட்டு சதவீதம் குறைந்தால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை கூட ஏற்படலாம். 

குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் பலர் வெற்றி வாய்ப்பை தவற விடவும் வாய்ப்புள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)