எத்தனால் கலந்த பெட்ரோல் எதற்காக... எச்சரிக்கை என்ன?

0

தமிழகத்தில் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விற்கப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

எத்தனால் கலந்த பெட்ரோல் எதற்காக... எச்சரிக்கை என்ன ?
அந்த சங்கம் சார்பாக வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படும். 

பெட்ரோலியம் கலந்து விற்பனை செய்வதால், வாகனத்தைக் கவனமுடன் பராமரிக்க வேண்டும். 

பெட்ரோல் டேங்க் பக்கத்தில், தண்ணீரால் கழுவும் போதும், மழை பெய்யும் போதும் பெட்ரோல் டேங்க் உள்ளே தண்ணீர் கலந்து விடக்கூடாதாம்.

பெட்ரோல் டேங் மூடியை சரியாக மூடி வைக்க வேண்டுமாம். ஒருவேளை தண்ணீர் உள்ளே போனால் அவ்வளவு தான் என்கிறார்கள்.

பெட்ரோலில் உள்ள எத்தனாலை இழுக்க சிறிதளவு தண்ணீர் போதும். தண்ணீர் கலந்தால் பெட்ரோலிலுள்ள எத்தனால் தண்ணீராக மாறிவிடும். 

எத்தனாலை இழுக்க சிறிதளவு தண்ணீர் போதும்

அது பெட்ரோல் டேங் அடியில் சென்று சேர்ந்து விடும். இதனால் வாகனம் பழுதாக வாய்ப்புள்ளது. இதன் விளைவுக்கு வாடிக்கையாளர்கள் தான் பொறுப்பு என்று பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் ஆணையின்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எத்தனால் உள்ள பெட்ரோலில் தண்ணீர் இறங்குவதால் வாகனத்தை இயக்குவது கடினமாகும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டிற்கு எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்து இருப்பதைக் குறைக்க,

இந்தியா உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என பெட்ரோலில் எத்தனால் கலந்த பயன்பாட்டை நடைமுறைப்படுத்தி வருகிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல் எதற்காக
2019-ம் ஆண்டில் தொடக்கத்தில் 5.6% எத்தனால் மட்டுமே பெட்ரோலில் பயன்படுத்தப்பட்டது. தற்போது அது 10% அளவிற்கு உயர்ந்துள்ளது. இதை 2030-ம் ஆண்டில் 20% அளவிற்கு உயர்த்த மத்திய அரசு பரிந்துரைத்து இருந்தது. 

எனினும், இதனை 2030-க்கு முன்னதாகவே நடைமுறைப்படுத்த உள்ளது தொடர்பான தகவல்கள் வெளியாகியதாகக் கூறப்படுகிறது.

2020 டிசம்பரில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 

20% எத்தனால் கலந்த பெட்ரோல் கார்பன் டை ஆக்ஸைடு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவையின் உமிழ்வை குறைக்க உதவுகிறது. 

இது எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைக்கிறது, அந்நிய செலவாணியை சேமிக்கும் மற்றும் ஏரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கவும் உதவும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

எத்தனால் எரிபொருள் பயன்படுத்தி வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு பெட்ரோலை விட குறைவானதே. 

20% எத்தனால் கலந்த பெட்ரோல்

ஆகையால், பெட்ரோலை விட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எண்ணெய் இறக்குமதியை குறைக்க உதவும் எனப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், எத்தனால் ஆனது ஒரு எரிபொருளாக குறைந்த செயல்திறன் கொண்டது. இது தரும் ஆற்றலானது, பெட்ரோல் தரும் ஆற்றலைவிட மூன்றில் ஒரு பங்கு குறைவு. 

இதன் விளைவு காரணமாக அதிக எரிபொருள் நுகர்வு மற்றும் குறைந்த மைலேஜ் மட்டுமே கிடைக்கும். பெட்ரோலில் அதிக அளவில் எத்தனால் சேர்ப்பதால் பழைய வாகனங்கள் பாதிக்கப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings