சிறுநீர்ப்பை புற்று நோயை அகற்ற லேசர் சிகிச்சை !

0
சிறுநீர்ப்பை புற்றுநோய் என்பது சிறுநீர்ப்பையின் ஓரங்களில் உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியாகும். இது சிறுநீரக மண்டல பகுதியில் ஏற்படும் பொதுவான நோயாகும். 
சிறுநீர்ப்பை புற்று நோயை அகற்ற லேசர் சிகிச்சை !
புகையிலை பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் புற்றுநோய்களில் சுமார் 15% சிறுநீர்ப்பை புற்றுநோய் ஆகும்.

சிறுநீர்ப்பையின் உள்ளிருக்கும் சவ்வுகளில் உள்ள அணுக்கள் கட்டுப்படுத்த முடியாமல் வளரும் நிலையை சிறுநீர்ப்பை புற்றுநோய் என்று கூறுகிறோம். 

சிறுநீர்ப்பை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் இரத்தம் சேர்ந்து வெளிப்படுவது, 

சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவது, சிறுநீர் கழிக்கும் போது அடிவயிற்றில் வலி ஏற்படுவது போன்றவையாகும்.
2018-ம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 5,49,393 புதிய சிறுநீர்ப்பை புற்று நோய் பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர். 

ஆரம்ப சிறுநீர்ப்பை புற்று நோய்க்கான சிகிச்சையானது சிறுநீர்ப்பையின் பாதையின் மூலமாகவே புற்றுநோய் கட்டியை அகற்றுவதாகும். 

லேசர் கருவி மூலம் சிறு நீர்ப்பை கட்டி மற்றும் சுற்றுப் புற சதையை மொத்தமாக அகற்றும் அறுவை சிகிச்சை முறை, 
லேசர் கருவி மூலம் சிறு நீர்ப்பை கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை
கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக சிறு நீர்ப்பை புற்று நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. 

இந்த முறையின் மூலம் சிறுநீர்ப்பை புற்று நோய் தளத்திலிருந்து சாதாரண சிறு நீர்ப்பை உள்புற சதையிலிருந்து ஒரு சென்டி மீட்டர் விளிம்புடன் அகற்று வதாகும். 

இதில் சிறுநீர்ப் பையின் தசையும், இணைப்புத் திசுவும் துல்லியமாக பிரிக்கப்படும். இது புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான அறுவை சிகிச்சை கொள்கைகளை துல்லியமாக பின்பற்ற உதவும். 

மேலும், இந்த முறை யானது குறைவான நேரத்தில் சிறுநீர்ப்பை புற்று நோயை அகற்றுகின்றது. 

வழக்கமான சிறுநீர்ப்பை புற்றுநோய் அகற்றப்படும் முறையில் சிறுநீர்ப்பை கட்டிகள் துண்டு, துண்டாக வெட்டப்படுவதன் மூலம் அதில் ரத்தப்போக்கு ஏற்படு கிறது. 

ஆனால் லேசர் சிகிச்சையில் ரத்தப்போக்கு முற்றிலும் குறைக்கப்படுகிறது. புற்றுநோய் கட்டியை அகற்றும் லேசர் சிகிச்சை முறையால் நோயாளிகளுக்கு ஏற்படும் நன்மைகள்: 
புற்றுநோய் கட்டியை அகற்றும் லேசர் சிகிச்சை
சிறுநீர் வடிகுழாய் இருக்கும் நேரம் கணிசமாக குறைக் கப்படுகின்றது. மருத்துவமனையில் தங் கும் நாள்களும் வெகுவாக குறைகின்றன. 

அறுவை சிகிச்சை யின் போது ஏற்படும் சிக்கல்கள் பெருமளவில் தவிர்க்கப்படு கின்றன. அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு குறைவு. 

முந்தைய சிகிச்சை முறை யில் ஏதிர்பார்க்க முடியாத அளவுக்கு லேசர் அறுவை சிகிச்சையானது சிறுநீர்ப்பைக் கட்டியின் 24 மாத மறு நிகழ்வு அல்லது மீண்டும் தோன்றுவதைக் குறைக்கின்றது. 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings