செவ்வாய் கிரகத்தில் ஒலியானது எப்படி கேட்கும்?

0

இந்த சத்தம் பூமியில் இருப்பதைப் போன்றே இருக்குமா, இல்லை எப்படி இருக்கும், இதுவரை யாரும் இதைப் பற்றிச் சிந்தித்ததில்லை.

செவ்வாய் கிரகத்தில் ஒலியானது எப்படி கேட்கும்?
அதற்கான விடையைப் செவ்வாய் கிரகத்துக்கு சென்றுள்ள பெர்ஸிவரன்ஸ் (Perseverance) ரோவர் கொடுத்திருக்கிறது. அது செவ்வாயில் கேட்கும் சத்தங்களைப் பதிவு செய்து அனுப்பியுள்ளது. 

தினமும் பெர்ஸிவரன்ஸ் ரோவர் செய்யும் பணிகளையும், அது எடுக்கும் படங்களையும் நாசா மற்றும் பெர்ஸிவரன்ஸ் ரோவர் என இரண்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது நாசா. 

பெர்ஸிவரன்ஸ் பதிவு செய்த செவ்வாயின் சத்தத்தையும் Sound Cloud தளத்தில் பதிவேற்றி யுள்ளனர். பெர்ஸிவரன்ஸ் ரோவரில் பொருத்தப் பட்டுள்ள சூப்பர் கேமில் இருக்கும் மைக்ரோபோன் மூலம் இந்தச் சத்தம் பதிவு செய்யப் பட்டுள்ளது. 

செவ்வாய் கிரகத்தில் ஒலியானது எப்படி கேட்கும்?

செவ்வாயில் காற்று வீசும் சத்தமும், பெர்ஸிவரன்ஸ் ரோவரில் இருந்து லேசர் கதிர் செவ்வாயில் ஒரு கல்லைத் தாக்கும் சத்தமும் ரோவரின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பூமியில் சாதாரணமாக நாம் கேட்கும் ஒலியானது செவ்வாயில் மிகவும் மெதுவாகவே கேட்கும். 

லேசர்கள் கல்லைத் தாக்கும் போது கேட்கும் ஒலியிலிருந்தே, அந்தக் கல்லானது எவ்வளவு கடினத் தன்மையுடையதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும். 

மேலும், "ரோவரில் இருக்கும் ஸ்பெக்ட்ரோ மீட்டர் மற்றும் கேமராக்கள் அந்தக் கல் எதனால் ஆனது என்பதைத் தீர்மானிக்க உதவியாக இருக்கும்" என்று ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான நவோமி முர்டாக் (Naomi Murdach) பேட்டியளித்திருக்கிறார்.

செவ்வாய் கிரகத்தில் ஒலியானது எப்படி கேட்கும்?

அதே போல் பெர்சவரன்ஸ் ரோவர் தனது பயணத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாக நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. 

செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் கடந்த மாதம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. 

மேலும் செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த ரோவர், அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம் பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில் ஒலியானது எப்படி கேட்கும்?
நாசா அமைப்பு அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, கடந்த வெள்ளிக்கிழமை மற்றம் சனிக்கிழமைகளில் பெர்சவரன்ஸ் ரோவரை அதிகமாக இயக்கி, 

முயற்சி மேற்கொண்டதாகவும். இதனால் ரோவர் 33 நிமிடங்கள் முன்னும் பின்னுமாக இயக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

அதே போல் நாசா அமைப்பு ஏற்கனவே அனுப்பிய கியூரியாசிட்டி ரோவரை விட 5 மடங்கு வேகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் இயங்குவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

பின்பு செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மேலும் ஆய்வு செய்வதற்கான பாதைகள் குறித்து பரிசீலித்து வருவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பெர்சவரன்ஸ் ரோவர் உடன் அனுப்பி வைக்கப்பட்ட சிறிய ரக ஹெலிகாப்டரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பின்பு 30 இடங்களில் பாறைகள் மற்றும் மாதிரிகளை சேகரிக்க முயற்சி செய்து வருவதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

மேலும் இந்த மாதிரிகளை மற்றொரு ரோவர் மூலம் வரும் 2031-ம் ஆண்டு பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஓராண்டுக்கு ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது. 

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் செவ்வாய் கிரகத்தில் ஓர் ஆண்டு என்பது பூமியை பொறுத்தவரை 687 நாட்கள்.

அடுத்த சில வாரங்களுக்குள் ரோவருடன் அனுப்பப்பட்டுள்ள ட்ரோனும் தன் வேலையைத் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது நாசா. அப்படி என்றால் இன்னும் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)